வியாழன், 16 ஜூலை, 2009

தமிழ்ப் பாடம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு



சென்னை, ஜூலை 15: "மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கட்டாயமாக கற்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதம்: ஜி.கே.மணி (பாமக): பள்ளிக் கல்வித் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். கர்நாடகத்தில் ஆரம்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அங்கு, மொத்த நிதியில் 22 முதல் 30 சதவீதம் அளவுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தரம் குறைவாக இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை தனியார் பள்ளிகள் ஏற்படுத்துகின்றன. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஐந்து வகையான பாடத் திட்டங்கள் உள்ளன. ஆனால், மற்ற மாநிலங்களில் மாநில அல்லது மத்திய அரசுகளின் ஏதேனும் ஒரு பாடத் திட்டம் மட்டுமே உள்ளது. பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அது எந்த நிலையில் உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு: கடந்த 2006-ம் ஆண்டு, இது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. மெட்ரிக் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக ஆரம்பித்து 10-ம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்க அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி, 1 முதல் 4-ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி கற்றுக் கொடுக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துக்கள்

அனைத்து நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்மொழிப் பாடங்களை அறிமுகப்படுத்தாத வரையில் எப்பயனும் இல்லை. தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்றும் பிற மொழிகளில் ஏதேனும் ஒன்றை விரும்பிக் கற்பதை அடுத்த நிலையாகவும் இருந்தால்தான் தமிழ்நாட்டில தமிழ் வாழும். பிற மொழிப் பாடங்களைத் தொடக்க நிலையில் படிப்பவர்கள் மிகுதியான மதிப்பெண் பெறும் அவலமும் உள்ளது. ஒருவர் பத்தாம் வகுப்பிற்குப்பின் தமிழுக்கு மாற்றாகப் பிற மொழிப்பாடத்தை எடுத்தார் எனில் அப்பாடம் தொடக்க வகுப்பிற்கு இணையாகத்தான் இருக்கும். அதனையும் மேனிலைத்தமிழ்ப் பாடத்தையும் எப்படிச் சமமாகக் கருதுகிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழ் நாட்டில் தமிழே தெரியாமல் வாழும் தலைமுறைகளை உருவாக்குவதை நிறுத்தும் வகையில் முதல் பிரிவு தமிழ் மட்டுமே இரண்டாம் பிரிவு பிற மொழிகளில் ஒன்று என்னும் நிலையை உருவாக்கும் வரை எப்பயனும் இல்லை. 'தமிழ் வாழ்க' என்று வெற்றுக் கூக்குரல் எழுப்புவதால் எப்பயனும் இல்லை. தமிழ், தமிழ் நாட்டவர் நாக்குகளில் நடை பயின்றால்தான் தமிழ் உள்ளபடியே வாழும் என்னும் உண்மையை உணர்ந்த அரசு அதற்கேற்ப செயல்படவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/16/2009 7:09:00 AM

I read Ramayan and destroy the Ram temples that is me MK. I fight for the recognition of tamil language but I will kill tamils at Lanka and will not raise voice when tamils at Malaysia in trouble but buy properties for my daughter at Malaysia with the help of Datto Samivelu. Valka Tamil aligha tamilargal. MK
By Valli
7/16/2009 10:38:00 PM

I agree with Ilakkuvanar Thiruvalluvan. When I was a Matric and +2 student I felt my career has been affected because Tamil was my second language. I used to see my friends who had French/Hindi as second language had scored more marks with little effort. The Education Dept should instruct the Tamil teachers to award more marks to Tamil language paper so that students who had taken Tamil will not regret taking Tamil as their second language. Govt should open Tamil medium engineering and medical colleges. Also there should be reservation for Tamil medium students in all the colleges. There should be more encouragement for those who are studying Tamil and also in Tamil medium.

By GANESSIN
7/16/2009 6:42:00 PM

இப்படி சட்டம் போட்டு மிரட்டி ஒரு மொழியை உயர்த்த முடியாது. இப்படித்தான் இந்தியை தினிக்க சட்டம் தீட்டினார்கள். விளைவு இந்தியா நாட்டிர்க்கே பாதகமாக ஆகிவிட்டது. அதனால் தமிழ் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.முதலில் மு.க தமிழ் சினிமாவிர்க்கு கொடுக்கும் பணத்தை தமிழ் படிப்பதர்க்கு கொடுக்க வேண்டும். பொறியியல், மருத்துவம்.. போன்ற படிப்பு நுழைவுக்கு தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.எல்லாம் தமிழில் படித்தால் நுழைவுக்கு அதிகம் மார்க்கும், ஒரு பாடம் தமிழ் படித்தல்ல் கொஞ்சம் மார்க்கும், தமிழே படிக்காவிடில் பூஜியம் மார்க்கும் கொடுத்தால் மாணவர்களுக்கு தமிழில் ஆர்வம் வந்து விடும்.ஒரு இனத்தின் வளர்ச்சி, செழிப்பு மொழியை பொருத்தது. இப்போது தமிழகத்தில் மெட்டிரிக் படிப்பில் யாரும் தமிழ் படிப்பது இல்லை.இப்படியே போனால் இன்னும் 100 வருடங்களில் தமிழ் மறைந்துவிடும். அப்புறம் தமிழினமும் மறைந்து விடும்.இப்போது தமிழின உணர்வு இருப்பவர்கள் யாராவது யாரவது இருக்கிரார்களா ?. கடவுள்தான் தமிழினத்தை காப்பாற்ற வேண்டும்

By Appan
7/16/2009 3:51:00 PM

அனைத்து நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்மொழிப் பாடங்களை அறிமுகப்படுத்தாத வரையில் எப்பயனும் இல்லை

By Basha
7/16/2009 10:52:00 AM

Dear CM, Please stop giving incentives for films carrying TAMIZH names. Don't waste TAx Payers Money, Rajinikanth doesn't need this excemption for his "ROBOT". They are spending 150 Cr for the film and do not need Govt Support.

By Viduthalai Chiruthai
7/16/2009 10:45:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக