சனி, 15 அக்டோபர், 2022

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி

 அகரமுதல




‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான

கட்டுரைப் போட்டி

17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன.

ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும்.

இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும் இழப்புகளையும் இந்தித்திணிப்புகளை முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களையும் இவற்றில் மக்களின், அமைப்புகளின், கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் கட்டுரை அமைய வேண்டும். கட்டுரைப்போட்டியில் அகவை, கல்வி, பணி வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம். பிறமொழிச்சொற்கள் அல்லது பிற மொழி எழுத்துகள் அல்லது கிரந்த எழுத்துகள் கலப்பின்றிக் கட்டுரை அமைய வேண்டும்.

கட்டுரை அனுப்புவதற்கான இறுதிநாள்:

ஐப்பசி 17, 2053 / 03.11.2022 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

கட்டுரையை  thamizh.kazhakam@gmail.com  என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும். அவை சீருருவில் அமைய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளின் படைப்பாளர்களுக்கு வழங்கப்பெறும் பரிசு விவரம் வருமாறு:

இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் முனைவர் இ.மதியழகியும் இலக்குவனார் மனநல மருத்துவமனை சார்பில் மரு.இ.செல்வமணி தினகரனும் பரிசுகள் வழங்க உள்ளனர்.

முதல் பரிசு உரூ.5,000/- ; இரண்டாம் பரிசு உரூ.3,000/-

மூன்றாம் பரிசு உரூ.2000/-

அன்புடன்

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!

 அகரமுதல

               



“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”

சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                  

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/  12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக்  கருத்தரங்கம் நடைபெறுகிறது.

அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது. 

சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam