சனி, 8 ஆகஸ்ட், 2009
2/2) (1/2 இன் தொடர்ச்சி) எதற்கெடுத்தாலும் அரசையே நம்பி யிருப்பதை விட இலக்கிய ஆர்வலர்களும் படைப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் இலக்கியக்கழகம் ஒன்றைத் தொடங்க முன் வர வேண்டும். பேச்சுத் திறனும் செயல் திறனும் மிக்க ஆசிரியர் அதற்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/8/2009 2:52:00 AM
8/8/2009 2:52:00 AM
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை காக்க கனடாவின் காத்திரமான நடவடிக்கை தேவை: 'தி பார்ரி எக்சாமினர்' |
[வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 05:46 பி.ப ஈழம்] [பி.தெய்வேந்திரன்] |
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கனடாவில் இருந்து வெளிவரும் 'தி பார்ரி எக்சாமினர்' நாளேடு தெரிவித்துள்ளது. |
இது தொடர்பாக அந்த நாளேட்டில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் விபரம் வருமாறு: இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலை சிறப்பானதாக இல்லை. அத்துடன், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி தனிநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் சிறுவர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனிநபர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் சித்திரவதை செய்யப்படுவதும் எல்லாப் பக்கங்களிலும் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன. களத்தின் உண்மை நிலை என்ன என்பதை ஆராய்ந்தறிவதற்கான சுயாதீன வழிகளை அரசு தடைசெய்திருப்பது அனைவரதும் கவனத்திற்குரியது. உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த தமிழர்கள் அரசின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் பட்டினி மற்றும் படுகொலைகள் மூலம் வாராந்தம் 1,400 பேர் உயிரிழக்கின்றனர் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தத் தகவல் உறுதியானது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கனடா உள்ளிட்ட எந்தவொரு அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளையோ அமைப்புக்களையோ சிறிலங்கா அரசு அந்த முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை. இது எங்கோ தொலைவில் உள்ள மண்ணில் நிகழும் அட்டூழியங்கள் அல்ல. இங்கே பார்ரியில் உள்ள எமது உறவுகளினதும் நண்பர்களினதும் உள்ளங்களை நொறுக்கும் சோகம் இது. ஆரோனும் றஞ்சி சுரேஷ்குமாரும் பார்ரியில் வசிக்கும் 40 தமிழர்களில் இருவர். ஒருநாள் றஞ்சி கண்ணீருடன் எனது அலுவலகத்திற்கு வந்தார். ஏனெனில், வன்னி முகாமில் உள்ள அவரது உறவினரின் நிலை குறித்து அவர் மிகவும் கவலை அடைந்துள்ளார். றஞ்சிக்காக நான் கவலைப்பட்டேன். ஏனெனில் அவரது குடும்பத்தை இலங்கையில் பாதுகாப்பதற்காக இந்த உலகினால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் நம்புகிறேன். சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு வழங்க மறுத்துள்ள உணவு, குடியிருப்பு வசதிக்கான பொருட்கள், மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்கள் போன்ற உதவிகள் நேரடியாக தமிழ் மக்களுக்குக் கிடைப்பதை நாம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இந்த வழியில் நாம் வழங்கியுள்ள 75 லட்சம் டொலர் பெறுமதியான உதவிகள் மிகச் சரியான நடவடிக்கை. இந்த முகாம்களுக்கு இப்போது உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. எமது வெளிவிவகாரத்துறை அமைச்சர் லோறன்ஸ் கனொன் இது தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். மோதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது மற்றும் அனைத்துலகப் பார்வையாளர்கள் அவர்களிடம் செல்வதைத் தடுப்பது போன்ற செயல்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருக்கும் என்பதை கனடா சிறிலங்காவிற்குப் புரிய வைக்க வேண்டும். கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஓபரேய், இந்த முகாம்களுக்குப் பயணம் செய்ய வேண்டும். இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஏனைய நாடுகளின் அவதானிகள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அறிவதும் ஆர்வம் தரக்கூடியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கையில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் காணாமல் போய்விடும்: கேணல் ஹரிகரன் |
[சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2009, 11:48 மு.ப ஈழம்] [செ.நடராஜா] |
சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும். |
சிறிலங்கா அரசு தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தால் கடந்த 30 வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்டவர் கேணல் ஹரிகரன். அவரது கட்டுரையின் முழு விபரம் வருமாறு: அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கீழான சிறிலங்கா அரசு, நாட்டின் சுதந்திரத்திற்கான போர் என்ற கூச்சலுடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டைக்குத் தான் சென்றதாகக் கூறியது. மக்கள் அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாது வாழும் ஒரு நாடு பற்றிய கனவு குறித்தும் அது பேசியது. இப்போது, பெரும் தொகையான ஆட்களையும் பொருட்களையும் அழியக் கொடுத்து போரை முடித்துவிட்ட பிறகு, அங்கு மேற்கிளம்பிவரும் சமூக - அரசியல் சூழல் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. அந்தக் கனவு கனவாகவே போய்விடக்கூடும். இப்போது ஒன்று தெளிவாகிவிட்டது, இலங்கை அரசியலில் வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற சொற்களின் பட்டியலில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் தூக்கி வீசப்பட்டுவிடும். அந்தப் பட்டியலில் 'சிறுபான்மையினர்' என்ற சொல்லும் விரைவில் சேர்ந்துகொள்ளக்கூடும். மேற்கிளம்பும் புதிய ஒழுங்கு இலங்கை முழுவதும் இப்போது ஒரு புதிய ஒழுங்குமுறை மேற்கிளம்பி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கூட்டணிக்குள் மட்டுமல்ல, ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் இந்தப் புதிய ஒழுங்கைக் காணமுடிகிறது. முதன்மை அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் இதனைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள் சிறிலங்காவை அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்சிகள், அவர்களின் தலைவர்கள் பலரைப் போலவே இவ்வாறு குத்துக்கரணம் அடிப்பது வழமையானதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. அது அவர்களின் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது. தேர்தலுக்கு முன்னராக எடுக்கப்படும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகளால் பொதுமக்கள் கவரப்படுவார்களாக என்பது சந்தேகத்திற்குரியதுதான். சிறிலங்காவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்ததற்கு இத்தகைய அரசியல் இரட்டைப் பேச்சுக்களே முதன்மைக் காரணம். இறுதியில், சரியோ தவறோ, தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்கினார்கள். ஏனெனில் தோற்றுப் போன அரசியல் நடவடிக்கைகளையே அவர்கள் தொடர்ந்தும் பார்த்து வந்திருந்தார்கள். கிழக்கு மாகாணத் தேர்தல்கள் முடிந்ததும், அரசியலமைப்பின் 13 ஆவது சட்டதிருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், இப்போது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவர் எந்த அவசரத்தையும் காட்டவில்லை போன்றே தோன்றுகின்றது. இதற்கு வலுவான உள்நாட்டு அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த தீர்மானித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்போது தனக்கு உள்ள பிரபலத்தை/செல்வாக்கை லாபமாக்கி இரண்டாவது பதவிக் காலத்தையும் பெற்றுவிடுவதற்கு அவர் எண்ணுகிறார் என்பது, அண்மையில் அவர் அளித்த நேர்காணலில் இருந்து தெரிகிறது. குறிப்பாக தெற்கில் தனது வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் விரும்புகிறார். அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பான்மை மக்களின் அனுமதி உண்மையில் தேவையா? ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் ஆணை வேண்டும் எனில், அவர்களின் நாடித்துடிப்பை அறிந்து பார்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தலே உண்மையானதாக இருக்கும். அரச தலைவர் தனது பதவிக் காலத்தின் ஒரு பகுதியை இழக்காமலேயே நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உதவும். மாறாக, அரச தலைவருக்குக் கிடைக்கக்கூடிய உறுதியான ஆதரவானது நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரும் வெற்றி பெறுவதற்குக்கூட வழிவகுக்கலாம். அப்படி நடந்தால், சிறிய கட்சிகளில் தங்கியிருக்கும் நிலையில் இருந்து அரச தலைவரை வெளியே கொண்டுவருவதற்கு இது உதவக்கூடும். ஆளும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் போன்றோர் அரச தலைவரின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நிலையைக் குறைக்கவும் உதவக்கூடும். ஜனநாயகத் தேர்தல் சாத்தியமா? முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ தமிழர் சனத்தொகையில் 20 விழுக்காட்டினர் விடுவிக்கப்பட்டால், தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடக்கும். அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அரசு பதிலளிக்க வேண்டிய கேள்வி இது. ஏனெனில் மக்களின் விடுதலை தொடர்பில் அரசின் வெவ்வேறு கிளைகளில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. அத்தோடு அரசின் இலக்குக்கும் அது அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரம்பரியமாகவே பெரிய இடைவெளி காணப்படுகின்றது. அனைத்துக் கட்சிக் குழு முடிவு அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்ந்த அனைத்துக் கட்சியின் முடிவுகள் தொடர்பிலும் அரச தலைவர் ஆர்வத்துடன் இருக்கிறார். இந்தக் குழு 2006 ஆம் ஆண்டு மகிந்த அரச தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பெரும் ஆரவாரங்களுடன் நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் முடிவுகள் எவையும் செயற்படுத்தப்படவில்லை என்றால் அது செயல் இழந்துபோன ஏனைய குழுக்களைப் போன்ற ஒன்றாகவே அமையும். குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று அரச தலைவர் முறையில் இருந்து அடிமட்டங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்குவது வரையில் பரந்தளவு விடயங்களை அது உள்ளடக்கியுள்ளதாக குழுவின் தலைவர் திச விதாரண கூறினார். எனினும் இந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இப்போது ஆபத்தில் உள்ளது. அரசியலமைமைப்பைத் திருத்துவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியின் வரிசையில் இதனையும் வரலாறு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்திய நிலைப்பாடு இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது. அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது. எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது. ஆனால், இவை எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய உறுதியளிக்கப்பட்ட பாதையில் நிகழும் நடவடிக்கைகள் அல்ல. இது சிறிலங்காவின் குறைபாடும் அல்ல அவர்களின் நடைமுறைப்படுத்தலில் உள்ள குறைபாடு. சிறுபான்மையினர் அற்ற இலங்கை சிங்களவர்கள் அல்லாத சமூகத்தவரை சிறுபான்மையினர் என்று சொல்வதை அகற்றிவிடுவதே தனது விருப்பம் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அதாவது சிறுபான்மையினர் அற்ற சிறிலங்காவை உருவாக்குவதே அவர் கனவு. இது மிகச் சிறந்த உணர்ச்சிகரமான விடயம். ஆனால் அரசியல், பொருளாதார, அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை அந்தக் கனவு அது நனவாகவோ யதார்த்தமாகவோ முடியாது. சிறுபான்மையினர் இல்லாத சிறிலங்கா என்கிற கனவு, யதார்த்தத்துக்குத் திரும்பும் நடவடிக்கைகளால் கலைக்கப்படும் வரையில் தூரத்தில் தெரியும் கனவாகவே தொடரும். அதுதான் உண்மையாகும் என்று தோன்றுவதான் கவலை தரும் விடயம். சாத்தியமாகா அதிகாரப் பகிர்வு இரு சமூகங்களுமே ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் செய்து கொண்டதன் மூலம் இனப் பிளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மேற்கிளம்பி வரலாம். தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு தட்டிக்கழித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். முன்னர் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி 6 மாதங்களுக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் 3 லட்சம் மக்களும் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது இதற்கு மேலும் மேலும் உரமூட்டுவதாக அமையும். பல பத்தாண்டு வலிதரும் முரண்பாடுகளின் பின்னர் இப்போது பயம் மற்றும் சந்தேகம் இல்லாத சூழலே இலங்கை மக்களுக்கு வேண்டியது. முடிவெடுக்கும் அதிகாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும் போதே அது சாத்தியமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை. சிங்கள - தமிழ் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சிங்கள, தமிழ் அரசியலுக்கு இடையில் 'பாணும் பட்டரும்' மாதிரி அது வந்துவிட்ட பின்னர், ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடையாளத்தை கரு மேகங்களாக அது மறைக்கின்றது. அதன் விளைவு இலங்கை அரசியலில் இருந்து கடும்போக்கு வாதத்திற்கும் அதில் இருந்து ஆயுத முனைப்புக்கும் அதில் இருந்து கிளர்ச்சிக்கும் அதில் இருந்து பயங்கரவாதத்திற்கும் அதில் இருந்து போருக்கும் அதில் இருந்து இப்போது அரசியலுக்குமாக ஒரு முழுச் சுழற்சியை முடித்துள்ளது. இதே மாதிரியான சுற்றுக்குள் மீண்டும் ஒருமுறை இலங்கை பயணிக்க வேண்டுமா? இதுதான் இன்று ஆட்சியாளர்கள் முன்னும் மக்கள் முன்னும் உள்ள புறந்தள்ள முடியாத முக்கியமான கேள்வி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பொதுநலப் போர்வையில் சுயநலம்!
திரைக்குப்பின்னால் உள்ளதை வெளி்ச்சம் போட்டுக் காட்டுகிறது ஆசிரியருரை. காப்பீட்டுத் தொகைக்கு என்று இல்லாமல் அரசு மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளையும் அரசு தனியார் மருத்துவமனைக்கு ஈடாக உயர்த்தக் கூடாதா? காப்பீட்டுப் பங்குத்தொகை இல்லாமலே சிறப்பான மருத்துவ வசதி அளிக்க இயலுமே! புதிய சிந்தனைகளை அளித்துள்ளது ஆசிரியருரை. மக்கள் சிந்தித்து அரசை நல்ல வழியில் முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/7/2009 2:41:00 AM
மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கiளை நயவஞ்சகமாக கொன்றுவிடத் துடிக்கும் சிங்கள, இந்திய அரசுகளும் அதன் அமைப்புகளும் உண்மையான பொருட்களை எடுத்து சிங்கள மக்களுக்கு கொடுத்துவிட்டு, கலப்படம் செய்யப்பட்ட நஞ்சு கலந்த பொருட்களையே தமிழ்மக்களுக்குக் கொடுப்பார்கள். யார் கேட்பது! கள்வரும் அவர்களே! பிடிப்பவர்களும் அவர்களே! பரிசோதிப்பவர்களும் அவர்களே! பொலிசாரும் அவர்களே! நீதிபதிகளும் அவர்களே! தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞர் போன்ற பெரிய கட்சிகளின் தலைவர்கள் அயலில் இருந்து வந்த பெரிய தலையிடி நீங்கியது என்பது போல ராஜபக்சவுடன் சேர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழீழத்தை உச்சரித்ததோடு சரி. தேர்தல் தோல்வி ஏற்படுத்திய நடுக்கத்தில் அவர் தான் உச்சரித்த வார்த்தைகளையே மறந்து விட்டார். ஒரு சிறிய இனத்தையே அழித்து தாம் பிராந்திய வல்லரசாகத் துடிக்கும் சிங்கள-இந்திய சனநாயகம்!!!!!!!!
8/7/2009 12:47:00 AM
மு.கருநநிதியும் கருணவும் ஒன்றுதான் இருவரும் தமிழினே துரோகிகள். சுயனலவாதிகள். தமிழினா வரலாரில் பொறிக்கப்பட்ட எட்டப்பன்.
8/6/2009 8:17:00 PM
to whom cheat karunanithi, is it a gift for the bribe you got from rajapakse. Or cluster bombs and chemical bomb to kill 300000 tamils in the refugee camp.You will do it because you are a dirty man and do anything for money
8/6/2009 6:06:00 PM
வியாழன், 6 ஆகஸ்ட், 2009
சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் இறையன்பு, தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீதர், சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், மத்திய அரசின் தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் சத்தியபாமா பத்ரிநாத், அறநிலையத் துறை ஆணையர் சம்பத் உள்பட பலர் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
பழமைச் சின்னங்களைத் தூரத்தில் நின்று பார்த்தால் தான் அதன் அழகை ரசிக்க முடியும் ஆனால் அவற்றைச்சுற்றி இன்று பார்வைக்குத் தடையாகக் கட்டடங்களையும் கடைகளையும் எழுப்பி உள்ளனர் என்று சொல்லியிருக்கும் தலைமைச் செயலர் அவற்றைப் பாதுகாக்கச் சட்டம் எதுவும் இல்லாததால் மக்களே முன்வந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது இலவு காத்த கிளி கதைதான். மக்களில் பலம் வாய்ந்த ஒரு பகுதியினர் தானே தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்; சாதாரண மக்கள் அதன் அருகே கூட நெருங்க முடியாது. அந்தச் சாதாரண மக்களின் எண்ணமெல்லாம் அரசாங்கமே பழமைச் சின்னங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினர் காணும் வகை செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கெனச் சட்டங்கள் இல்லையென்றால் அவற்றை இயற்றியாவது பாதுகாக்க வேண்டும்.
8/5/2009 12:58:00 PM
புதுதில்லி, ஆக.5- மருமகளை அடிப்பதோ அல்லது தனது மகன் விவாகரத்து செய்துவிடுவார் என்று மிரட்டல் விடுப்பதையோ 'கொடூரமான' செயலாக கருத முடியாது என்றும், இதற்காக கணவரையோ அவரது உறவினர்களையோ தண்டிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் விகாஸ் சர்மா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மருமகள் அணிவதற்கு பயன்படுத்தப்பட்ட உடைகளை வழங்குவதும் குற்றமாகக் கருத முடியாதும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், தம்பதியினருக்கு திருமணத்தின்போது வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக்கொள்வது தண்டனைக்குரியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
BEATING THE BRIDE AND DAUHTER IN LAW IS NOT A CRIME--SUPREME COURT.WAH.WAH WHAT A GREAT IDEA.SO HERE AFTER THOSE HUSBANDS WHO FEELS THEIR WIVES ARE WASTES NO MORE BE REQUIRED AND THE MOTHERIN LAWS WHO WANTS TO HELP THEIR SONS TO ELIMINATE THIS WASTE NO NEED TO HAVE THE TENTION HOW TO PUT FIRE ON HER. IT IS A TEDIOUS PROCESS. SO TAKE AN IRON ROD GIVE A NICE ONETIME BLOW ON HER HEAD WHILE SHE WAS SLEEPING AND FINISH OF HER.NO MORE WORRIES ABOU THE COURT, BECAUSE YOU ONLY BEAT.ALREADY DELHI HIGH COURT PROVED ITS GREATNESS BY GIVING A FLESHY VERDICT ABOU THE HOMOS ANDLESPIANS.AS AN ADDED ATTRACTIN THE MADRAS HIGH COUR HAS RESENTLY ISSUE A CLAMOUROUS VERDICT AS IN THE MASSAGING PARLOUR IT IS NOTHING WRONG IF ONE GETS MASSAGE BY THE OPPOSITE SEX {AN OPEN INVITATION TO PROSTITUTION}.SO ALL THESE THINGS ARE INDICATING THE DOOMS DAY IS VERY CLOSE.
8/6/2009 2:30:00 AM
foolish judgement. this kind of verdict will come only india
8/5/2009 10:54:00 PM
This is the WORST JUDGMENT I have ever come across. As many have already pointed out in the previous mails, the judge must have gone out of his senses while writing the verdice. He no way deserves to be a judge. The concerned authorities must take a stingent action against the judge.
8/5/2009 10:36:00 PM
IT IS VERY VERY FOOLISH JUDGMENT. I WANT TO MARRY THE WIFE OF THE JUDGE AND I WOULD LIKE TO BEAT BEAT BEAT HER. AND I WILL TELL MY RELATIONS TO POUR THE KEROSENE & BURN HER UNTILL SHE DIES. ARE YOU HUMAAN BEING OR A WILD ANIMAL. ARE POTTA POTA POTTA KEDU KATTA POTTA POTTA PAYALE. NEE MATTUM EN MUNNADI VANDHA KARI KARI THUPPUVEN I AM REQUESTING YOU ALL BRING THIS BLODDY JUDGE AND WE HAVE TO PUNISH HIM TO POUR THAT LADY'S MOOTHIRAM AVAN MEEDHU IN A MIDDLE OF THE ROAD.
8/5/2009 9:43:00 PM
The verdict of the judge will treat a lesson to the bride family who are nw giving torture to the bridegroom family by giving false statement to police and the police is also nt enquiring the matter fully and rewasonably and foisting the case against the bridegroom and his family members. Hereafter such false complaints may nt arise in future Thanks to the verdict of the Judge.
8/5/2009 8:10:00 PM
We have to understand the majority students of Law collage are already criminals before they start study.. And they are not intelligent student but criminals from their childhood.. So they can not understand the meaning of the Law. but they can read and write. So these crime machines make such kind of judgments only. Mo wonder until we make law education in our mother tongue.. and do not limit lawyer to attend clients whom language are not familiar them. because they know neither Law nor client's feeling.
8/5/2009 6:05:00 PM
Its not funny or strange to me.. Our Judges always prove themselves as fools.. Our Lawyers and Judges know Law in English but do not know the meaning in their language.. Means they can not understand the aim of law because they are not Lawyers and Judges but worst criminals.. Those criminals who want protect themselves from Law choosing Law for their profession.. so they prefer to protect criminals like them. And very few clean guys choose Law as their life coal. but they will be finished by these criminals either in collage campus or while they challenge these criminals in court proceedings.. So. No wonder.. most criminal populated Lok shaba not allow to pass the bill to disclose the judges wealthy.. because they all are same caste.. Criminals.. to be cleaned from society.. or you can not avoid such stupid things in the name of judgement..
8/5/2009 5:56:00 PM
அடி முட்டாள் தனமான ஒரு தீர்ப்பு.இது போதுமே மாமியார்களுக்கு மருமகளை உயிரோடு கொளுத்த.தீர்ப்பு தந்த நீதிபதி என்ன பொட்டையா.அவனுக்கு பெண்பிள்ளைகள் கிடையாதா.
8/5/2009 5:17:00 PM
Foolish Judgement. I am happy to marry the Daughter of the Judge who gave the verdict and Would like to beat her.
8/5/2009 4:52:00 PM
1/2) புத்தகத் திருவிழாவில் அனைவரும் அருமையாகப் பேசியுள்ளனர். பழ.கருப்பையா, பாரதி கிருட்டிணகுமார், ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் உரைகள் அனைவரும் உள்ளத்தில் பதிந்து வைத்துப் போற்றப்பட வேண்டியவையே. தமிழ் நாட்டில் 'சாகித்ய அகாதமி' தொடங்க வேண்டும் என ஆசிரியர் பேசியுள்ளார். அதன் கிளை தமிழ் நாட்டில் உள்ளது. அது போன்ற அமைப்பு தொடங்க வேண்டும் என்று பேசியிருந்தார் எனில், அவ்வாறு சொல்லித்தான் 'குறள் பீடம்' தொடங்கப்பட்டது. ஆனால், செயல்பாடின்றியே மறைந்து விட்டது. தமிழ் நாட்டில் யாருக்கேனும் பதவி கொடுக்க வேண்டும் என்றால் அமைப்பு தொடங்கப்படும். வைரமுத்துவிற்குப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு முடிவெடுத்தால்கூடக் குறள்பீடம் தொடங்கப்படலாம். ஆனால், தமிழ்நாட்டு அமைப்புகள் எல்லாம் துதி பாடவும் தமிழ்நலச் செயல்பாடின்மைக்காகவுமே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் பயன்பெற உதவலாம். ஆகவே, எந்த அமைப்பு இருந்தாலும் பயன் என்ன? புத்தக விழாக்கள் நடத்தும் அமைப்பினர் ஒன்று கூடி அப்படிப்பட்ட ஓர் இலக்கிய அமைப்பைத் தொடங்கி 'சாகித்ய அகாதமியின்' பணியை ஆற்றலாம். தொடர்ச்சி 2/2 காண்க.