வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தடம் பதிக்கும் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) இணையக்கூட்டம்

 அகரமுதல

புரட்டாசி 09, 2051 / 25.09.2020

வெள்ளி

 அரபு நேரம் காலை    10.00

இந்திய நேரம் காலை  11.30

துபாய்நேரம் காலை  09.00

 கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் 

வியாழன், 24 செப்டம்பர், 2020

குவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27

 அகரமுதல


புரட்டாசி 11, 2051 /செட்டம்பர் 27, 2020 /

 ஞாயிறு மாலை 6.30

குவிகம் அளவளாவல்

திரைப்பாடல் நிகழ்வு
புத்தக அறிமுகம்

உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ்க்கூடல் 19

 அகரமுதல


ஓமனில் தமிழர் வாழ்வியல்

கூடலுரை –  திருவாட்டி இராமலட்சுமி கார்த்திகேயன்

பதிவுப்படிவம்
https://tinyurl.com/yx8snlh7

இணைப்பு
https://tinyurl.com/yxm3hu8w

பின்னூட்டப் படிவம்
https://tinyurl.com/y67y2bzr

பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்! – த.இ.அ.

 

அகரமுதல


தமிழ் இளையோர் அமைப்பு

பார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்!

காந்தி தேசத்திடம் ஐந்து குறிப்பு வேண்டுகோளை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இலில்இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் இன்னாசெய்யாமை(அகிம்சை) வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார் திலீபன் அண்ணா. தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணாமலிருந்து இந்தியத் தேசத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல் தன்னுடைய உயிரினை  26.09.1987 அன்று காலை 10.48 மணிக்குத் துறந்தார். யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் துணைமாநாயகர்(லெப். கேணல்) திலீபன் அவர்கள் ஒரு மருத்துவப்பீட மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது வேறு எந்த இழப்பு மட்டுமல்ல. இது பல இதயங்களை வலிக்கும்,  ஆயிரக்கணக்கானோரின் உயிர்ப்பைத் தொடும் ஓர் இழப்பு. அவர் ஒரு போராளி, அவர் விடாமுயற்சியுடன் இருந்தார், அவருடைய வாழ்க்கை தமிழர்களின் மீட்பிற்கு முதன்மை  வாய்ந்ததாக இருக்க வேண்டும், நம்முடைய விடுதலையைப் பெறுவதற்காக. அவர் 12 நாட்கள் பட்டினி கிடந்தார், நாங்கள் எங்கள் வீட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்காகத் தனது உயிரை ஈகம் செய்தார்.

இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை; காலத்தால் சாகாத வரலாற்று மைந்தனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

விடுதலையின் கனவுகளுடன் தன்னை உருக்கி ஒளிதந்த ஈகைப்பேரொளி, உண்ணாமல் தன் உயிரை ஈழ மக்களின் விடியலுக்காய் மறைத்த சூரியன் திலீபன் அவர்களின் நினைவாகப் புரட்டாசி 11, 2051 /  27 ஆம் நாள் ஞாயிறு காலை 11 மணி முதல் 2 மணி வரை இலண்டனின் 3 முதன்மை இடங்களில் தேவைப் படுபவர்களுக்கு உதவும் விதமாகத் தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம் பெறும் இந்த உணவு இரங்கல் திட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்ன வகையான உணவு வகைகள், பொருட்கள் தந்து உதவலாம் என்ற விவரம் பகிரப்பட்டிருக்கும் படத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த இக்கட்டான காலத்தில் உணவுக்கும்  இன்றியமையாப் பொருட்களுக்கும் அவதிப் படும் மக்களுக்கும் நாடு திரும்ப இயலாமல் துன்பப்படும் மாணவர்களுக்கும் இந்த உதவி சென்றடையும்.

பார்த்திபன் இப்பொழுதும் பசியுடன் தான் உள்ளான் அவன் நினைவில் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு எம்மாலான உதவிகளைச் செய்வோம். இந்த நேரத்தில் திலீபன் அண்ணாவின் 12 நாட்களின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் வாசிக்க கூடியவாறு மொழியாக்கம் செய்து எமது இணையத்தளத்தில்  ஏற்றியுள்ளோம். 27ஆம் நாள் இடம்பெறும் எமது நிகழ்வினைத் துண்டு வெளியீடு மூலம் அந்த அந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்குக் கொடுப்போம். அதில் திலீபன் அண்ணாவின் வரலாற்று இணைப்பும் அவர்கள் வாசிக்கக் கூடியவாறு செய்யப்பட்டுள்ளது.

புதன், 23 செப்டம்பர், 2020

குவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை

 அகரமுதல


குவிகம் இலக்கிய வாசல்

இணையவழிப் புத்தகச் சந்தை

 

இணையவழிப் புத்தகச் சந்தைபற்றிப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் விளக்க ஒரு கூட்டம் புரட்டாசி 10, 2051 சனிக்கிழமை 26/09/2020 மாலை 6.30 – 7.30 அளவில்  நடைபெறும். இணையவழிச் சந்தையின் அமைப்பாளர்களே இந்தக் கூட்டத்தில் பேச இருக்கிறார்கள்.


நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள படிவம்:

https://forms.gle/X9QMezT1mgnS3wLe7 

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! – ஆற்காடு க குமரன்

 அகரமுதல

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள்.  நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா?

எதையும் வெளிக்காட்டாமல் நான்.

உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன்.

என்னை வைத்து எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியையும் தோல்வியையும் இரண்டு விழிகளாகப் பாருங்கள். அதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு காட்சியாகத் தெரியும்.

அண்மைக் காலத்தில் நிறைய மாணவர்களின் தற்கொலைகள்.

இவர்கள் எல்லாம்  தோல்விக்காகத் துவண்டவர்கள் அல்லர். தோல்விப் பயத்தினால் தூக்கிட்டு மாய்ந்தவர்கள்.

அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்குள் தோல்விப் பயத்தைத் தூண்டியவர்கள் யார்?

பெற்றோர்களும் ஆசிரியர்களுமே குற்றவாளிகள்!

நான் சாதிக்க முடியாததை என் பிள்ளையிடம் திணித்து.  அவனைக் கொலை செய்த குற்றவாளி  நானே!

இன்றைய நிறைய சிக்கல்களுக்குக் காரணம் கருவம், பெருமிதம் (கெளரவம்), பொறாமை.

உறவுகளுக்குள்  பொறாமைஸ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்ஸ

போதும் என்ற மனம் பொய்த்துப் போய் வெகு நாள் ஆனது.

கூட்டுக் குடும்பம் இல்லாமல் தனித்து நிற்பது. கூட்டுக் குடும்பத்தில் நமது பெரியவர்கள் நமக்கு நல்லதை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள்.

தனிக் குடித்தனத்தில் சொல்வதை எல்லாம் நல்லதுக்கு என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்த நல்லவற்றிலும் சொல்பவருடைய தன்னலம் இருக்கிறது.

நான் பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் எல்லாம் எனது பாடப்புத்தகத்தில் ஓர் எழுதுகோல் அதிகமாக இருந்தாலும்

ஏன் வந்தது எப்படி வந்தது என்று ஆயிரம் கேள்விகள் என் உறவுகளிடம் இருந்து வந்தன.

இன்று பையன் பள்ளியிலிருந்து திரும்பி வருவதே பல குடும்பப் பெண்களுக்குத் தெரிவதில்லை. காரணம் அவர்களுக்குப் பணிச்சுமை.

ஆயாம்மா வேலைக்கு  வரும் முன்பு

எசமானியம்மாள் வேலைக்குச் செல்கிறாள்.

பணம் பணம் பாழாய்ப்போன பணம்.

உதை படும் பந்துக்கு உள்ளிருப்பதும் காற்று! பந்து உருளுமிடமெங்கிலும் காற்று!

பொதுநுழைவுத் தேர்வு(நீட்டு), அரசாங்கத்தின் தவறாகவே இருந்தாலும் அதைத் திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  காரணம் அந்த அரசாங்கத்தை அமைத்தது நாமே!

ஆதார அட்டை

 என்னிடமிருந்த அடையாளத்தை எடுத்துப் பதிவு செய்து  எனக்கென்று கொடுத்த ஆதார அட்டையில் ஆயிரம் தவறுகள்.

அவற்றைத் திருத்துவதற்கு அரசாங்கமும் வருகிறது. திருத்திக்கொள்ள நம்மை அறிவுறுத்துகிறது. அதற்குக் கட்டணம் வேறு. தவறு செய்தது அரசாங்கம். தண்டனை எனக்கு. இன்னொரு பெரிய தவற்றையும் இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஓர் உயிர் பலியா? உடனே துயர்நீக்கு நிதி!

வசைபாடும் பெற்றோரைப் பார்த்துக் கட்டாயமாக ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தைக்கும் நெஞ்சிலும் ஓர் எண்ணம் தோன்றும். காரணம் நானும் ஒரு பெற்றோர். என் மகனைத் தண்டத்துக்குப் படிக்க வைத்தேன் நாலு பன்றியை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.  எனது மகனுக்குக் கல்வி புகட்ட வேண்டியது எனது கடமை

அதைக் கற்றுத் தெளிவது அவனது திறமை. அவன் எந்தன் சார்பாளன். என்னைப் போலத் தான் என் மகனும் இருப்பான் என்பதை யாரும் உணர்வதில்லை.

செய்த செலவை சொல்லிக் காட்டி, சொல்லிக் காட்டி அவனைச் சித்திரவதை செய்யும் போது அவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றும். என் உயிர் இழப்பு, நீ செய்த செலவை ஈடுகட்டும் என்று. அரசாங்கத்தின் துயர்நீக்கு நிதி. தற்கொலைக்கான அடுத்த தூண்டுதல். மூன்றாவது தன்னல அரசியல்வாதிகள். ஒருவன் இருக்கும் போது எவனும் திரும்பிப் பார்ப்பதில்லை. இறந்த பிறகு அவன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது. இந்தப் பரபரப்பும் தற்கொலைக்கு ஒரு காரணம்.

தோல்வியில் இருந்து பிறப்பதுதான் வெற்றி. ஆகையால் தோல்விக்கு வருந்தாதீர்கள். பெற்றோர்களே! உங்கள் கண்களில் கனவுகளைக் காணுங்கள். உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளின் கண்களில் காணத் துடிக்காதீர்கள்! அவர்களுக்கு என்று ஒரு கனவு இருக்கும் அதைச் சாகடிக்காதீர்கள்.

யாரையும் குறை சொல்வதாக எண்ண வேண்டாம்.  நானும் இரு பிள்ளைகளுக்குத் தகப்பன்.

பிள்ளைகளின் கனவுகளுக்குக் காட்சியாய் இருப்பவன்.

தோல்வியில் துவளும் போது தோழனாக இருங்கள்! எதுவும் நிலையில்லை என்று எடுத்துச் சொல்லுங்கள்.

இவண்

ஆற்காடு க குமரன்

9789814114