சனி, 9 ஜூன், 2018

குவிகம் இல்லம் – அளவளாவல் : முனைவர் ஆர்.சிவராமன்


வைகாசி 27, 2049  ஞாயிறு சூன் 10, 2018 நண்பகல் 11.00 – 1.00

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல்

முனைவர் ஆர்.சிவராமன்

(நிறுவனர், ‘பை’ கணித மன்றம்)


அனைவரையும் வரவேற்கும்
சுந்தரராசன்:  9442525191
கிருபா நந்தன்: 8939604745

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்

அகரமுதல

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி:

கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்:

படைப்புகளை அனுப்ப

ஆனி 02 / சூன் 16 கடைசி நாள்

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆனி 15- ஆனி 24 / சூன் 29 முதல் சூலை 8 வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்புக்கரி (லிக்னைட்டு) அரங்கில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கண்காட்சியையொட்டி மாணவ, மாணவிகளின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை, சிறுகதைப் போட்டிகள், இளம் திரைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்தும் திரளானோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 21-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி கட்டுரை, சிறுகதை, குறும்படப் போட்டிகளுக்கு சில நிபந்தனைகளுக்குள்பட்டு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைப் போட்டி
பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்:
 விழுவதெல்லாம் எழுவதற்கே, அகத் தூய்மையே பெருந்தூய்மை, நல் உரைகளே நல்ல உரைகல்.
கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்:
வேதனை சாதனை ஆவதே போதனை, வாழ்க்கைத் தளத்தில் வலைதளங்கள், தேசம் என் சுவாசம்.
மேற்கண்ட தலைப்புகளில் கீழ்க்காணும் விதிகளுக்குட்பட்ட கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல், தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழி, பள்ளி, கல்லூரி மாணவர் என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும்.
தகவல் தெரிவிக்க வசதியாக மாணவர்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும். பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் சூன் மாதம் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும். முதல் பரிசு உரூ.2 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ.1,500, 3-ஆம் பரிசு உரூ.1,000 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.500 வழங்கப்படும். நெய்வேலி மாணவர்களுக்கான 6 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.500 வழங்கப்படும்.
குறும்படப் போட்டி: தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை எதிரொலிப்பவையாகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.  எண்ம வட்டு அல்லது காணொளி வட்டில் (டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில்) பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் கதைச் சுருக்கம், முதன்மைக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்குநரின் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். குறும்படங்கள் 1-1-2018-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படும். ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின்போது வழங்கப்படும். போட்டி முடிவுகள் சூன் 3-ஆவது வாரம் வெளியிடப்படும்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு உரூ.15 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ.10 ஆயிரம், 3-ஆம் பரிசு உரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர சிறப்புப் பரிசுகள் (நடிப்பு, கதைக்கரு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்) தலா உரூ.2,000, நடுவர் குழுவின் பரிசுகள்( 5 குறும்படங்கள் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம்) தலா உரூ.1,000 வழங்கப்படும்.
சிறுகதைப் போட்டி: தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை எதிரொலிக்கக் கூடியவையாகச் சிறுகதைகள் இருத்தல் வேண்டும். இவை தினமணி கதிரில் வெளியிடப்படும் நிலையில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் ஏற்கெனவே வெளிவராதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கதைகள் வெள்ளைத் தாளில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவர்ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டி முடிவுகள் சூலை முதல்வார தினமணி கதிரில் வெளியாகும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான முதல் பரிசு உரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ. 5 ஆயிரம், 3-ஆம் பரிசு உரூ.2,500 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.1,250 வழங்கப்படும்.
கட்டுரைகள்குறும்படங்கள்சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர், நெய்வேலி புத்தகக் கண்காட்சி,
செயல் இயக்குநர்/மனிதவளம், மக்கள் தொடர்புத் துறை அலுவலகம்,
தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனம்(என்எல்சி இந்தியா லிமிடெடு),
வட்டம்-2, நெய்வேலி-607 801, கடலூர் மாவட்டம்.
படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஆனி 02, 2049 /  16.6.2018.

“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்


 வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி

 இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம்எதிரில்).

“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்

 சிறப்புரை  :
இளைஞர் இயக்க நிறுவனர் 
     மருத்துவர் நா.எழிலன்,
திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் 
     பேராசிரியர் கான்சுடன்டைன்இரவீந்திரன்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர்
     ஆ.சிங்கராயர்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்

வியாழன், 7 ஜூன், 2018

தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு

தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக்
கால நீட்டிப்பு

 திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, போப்பு மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது, அருணாசலக் கவிராயர் விருது மற்றும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.
இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 31 என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க சூன் 15 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியுடையவர்கள்
செயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம்,
எசு.ஆர்.எம். அறிவியல் – தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603 203
என்ற முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2741 7379 – இல் தொடர்பு கொள்ளவும்.

பன்னாட்டுக் கருத்தரங்கம் – வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.


பன்னாட்டுக் கருத்தரங்கம் 

முதுகலைத் தமிழ்த்துறை,

வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.

“தமிழ் இலக்கிய மரபில் கலகக் குரல்கள்”

ஞாயிறு, 3 ஜூன், 2018

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் 91ஆவது பெருமங்கலம்


வைகாசி 25, 2049 வெள்ளி 08.06.2018 மாலை 6.00

பாம்குரோவு உணவு விடுதி, சென்னை

மரபுப் பாக்களை அனுப்புக! – முறுவல்



மரபுப் பாக்களை அனுப்புக! – முறுவல்

காவிரி ஆணையம் அமைக்கவில்லை! – பெ. மணியரசன்

 அகரமுதல



காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்!

இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்

பெமணியரசன் அறிக்கை!


உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு  அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
இப்பொழுது மூன்றாவது முறையாகச், செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத்தலைவராக அமர்த்துவது என்பதுகாவிரி மேலாண்மை ஆணையம் நடுவண்நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதைஉறுதிப்படுத்துவதாக உள்ளது.
காவிரித் தீர்ப்பாய முடிவுகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண்நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாகக் காவிரி ஆணையத்தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும்முயற்சியாகும்!
யு.பிசிங்கு நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் ‘வெற்றி!’க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளைச் செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery