கோழிக்கோடு, செப்.24: 62 வயதுடைய குனியில் இப்ராஹிம் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்ல, இந்தியர்தான் என்பதை கேரளத்தின் வடகரா நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து முதியவர் குனியில் இப்ராஹிம், 7 ஆண்டுகால பிரச்னையில் இருந்து விடுபட்டுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிகுல்லங்கராவில் மீன் விற்பனை செய்து வந்த குனியில் இப்ராஹிமை அந்த மாநில போலீஸார் 2003-ல் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், சட்டவிரோதமாக கால அவகாசத்தை மீறி இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குனியில் இப்ராஹிமை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஆணைப் பிறப்பித்தது. இதையடுத்து குனியில் இப்ராஹிமை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை தங்களது நாட்டுக்குள் நுழைய பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. குனியில் இப்ராஹிமிடம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி, அவரை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து குனியில் இப்ராஹிம் மீண்டும் கேரளத்துக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு போலீஸார் அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றது. குனியில் இப்ராஹிம் இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் புகைப்பட அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை அவரது வழக்கறிஞர் சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்ய நீதிமன்றம், குனியில் இப்ராஹிம் இந்தியர்தான் என்பதை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.
கருத்துக்கள்
நம் நாட்டவரா? அயல் நாட்டவரா? என அறிய இத்தனை ஆண்டுகளா? என்ன நாடோ? நீதி மன்றமோ? இத்தனை ஆண்டுகள் அவர் பட்ட பாட்டிற்கும் இழப்பிற்கும் அரசு என்ன இழப்பீடு தரப் போகிறது? வெட்கத்துடனும் வேதனையுடனும்
இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/25/2010 3:28:00 AM
Posted in
''தற்காலத்தில் கட்டப்படுகிற கட்டிடங்கள் எவ்வளவு காலத்துக்குத் தாங்கும் ?'' - இன்று இந்தக்கேள்வி கேட்கப் பட்டால் இதையொட்டிப் பல துணைக்கேள்விகள் எழும்.
பிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் தஞ்சைக்கோவில் பழந்தமிழில் பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் -மக்கள் மொழியில் அதை '' பெரியகோவில்'' என்றே அழைக்கிறார்கள்.
அவருக்கு விசாலமான மனம் இல்லாவிட்டால் இப்படியொரு சாதனை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அன்றைக்கு இருந்த தமிழர்களிடம் இருந்த அளப்பரிய கட்டடக் கலை வெளியுலகிற்குத் தெரிய வந்திருக்கிறது. உழைப்பின் வீர்யத்தைக் காட்டும் இந்த ஈடுபாடு இன்றைக்கு ஏன் தொடரவில்லை ?
காலத்தை மிஞ்சி இன்னொரு கரைக்கு வந்து சேர்ந்திருக்கிற கோவிலின் சிறப்பைத் தாமதமாக 1987 ல் உணர்ந்து உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சைக் கோவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜராஜன் சிலையை கோவிலுக்குள் நகர்த்தினாலோ,கோவிலுக்குள் ஆட்சி செய்பவர்கள் போனாலோ - ஆட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று நிலவுகிற மூட நம்பிக்கையை சிலர் நம்பலாம். அது வேறு. ஆனால் பகுத்தறிவுவாதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இந்த சந்தேகமும்,தயக்கமும் வரலாமா?
இதே ராஜராஜனின் செப்புச் சிலையும்,அவருடைய மனைவி சிலையும் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? எப்படி இங்கிருந்து அந்தச் சிலைகள் குஜராத் மியூசியத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன என்பது குறித்த விசாரணையாவது முறையாக நடந்ததா? இந்தியாவில் இன்னொரு மாநிலத்திற்குள் இருக்கும் ஒரு தமிழ் மன்னரின் சிலையைக் கூட ஆயிரமாண்டு விழாவின் போதுகூட ஏன் கொண்டுவர முடியவில்லை?
25 கோடி ரூயாயை மத்தியஅரசு செலவழிக்க -தமிழக அரசு அதைவிடக்கூடுதலான பணத்தைச் செலவழிக்கத்தயார் ஆன நிலையில் தஞ்சைக் கோவிலுக்கு ஆயிரமாண்டு விழா நடக்கலாம்.தஞ்சை மாவட்ட மக்களும் சில நாட்கள் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்கலாம்.