சனி, 24 செப்டம்பர், 2011

Save Heart! Save Life! : இதயத்தைக் காத்திடுவீர்! வாழ்நாளைப் பெருக்கிடுவீர்!

உலக இதய நாள் – செப்டம்பர் 29

பதிவு செய்த நாள் : 24/09/2011



மருத்துவர். வெ. சொக்கலிங்கம்,
MD,DM(Cardiology)FACC(USA)D.Sc
Mobile. 98410 91717
25,டெய்லர்சு சாலை,
சென்னை-600 010

இந்த வருட உலக இதய நாள் 29 செப்டம்பர் 2011 கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் “ஓர் உலகம், ஒரு வீடு, ஓர் இதயம்”.  இவ்வுலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்துகொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29 விழுக்காடு ஆகின்றது. அதிலும் 82விழுக்காடு வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும்தான் காணப்படுகிறது.
உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான்.
இந்த அணுகுமுறை இந்தியர்களுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில், நம்மிடம்தான் அமெரிக்க, ஐரோப்பியர்களைவிட 4 மடங்கும், சீனர்களைவிட 10 மடங்கும், சப்பானியர்களைவிட 20 மடங்கும் காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 30 மில்லியன் மக்கள் மாரடைப்பால் தாக்கப்பட்டு , அதில் மூன்றில் ஒரு பங்கு , ஓரிரு நிமிடங்களிலேயே இறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் செய்தி 25 முதல் 30 வயதுள்ள இளைஞர்களை இந்நோய் தாக்குவதுதான்.
உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.
“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான்.
எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் :


ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது.
உடல் எடை கூடுவது.
உடற் பயிற்சியைத் தவிர்ப்பது.
இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மதுஅருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது.
பதற்றம் , உடல் நடுக்கம் , அதிக வியர்வை.
இதயத் துடிப்பு அதிகரித்தல்.
இரத்த அழுத்தம் கூடுதல்.
கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது.
இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல்.
இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
மேற்கூறிய விபரீதச் சுழற்சியிலிருந்து விடுபட ஒரே வழி – வாழ்க்கை முறையைச் சீராக்குவது மட்டும் தான்.
சிந்தனை, சொல், செயல் சீராக இயங்கும் பொழுது மூளையின் அலைகள் ஆல்பா நிலையில் செயல்பட்டு, என்டார்பின், செரடோனின், மெலடோனின் போன்ற நல்ல ஆர்மோன்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இரத்தத்தில் கலப்பதால் மேற்கூறிய விபரீதச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இதய மூளை இரத்தக்குழாய்களில் அடைப்பு வருவதைத் தடுப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஒரு வருடத்தில் கரைத்துப் பூரண குணமடைய ஏதுவாகிறது.

சீரான வாழ்க்கை முறை அமைய 10 கட்டளைகள்:
கட்டளைகள்: தவிர்க்க / கட்டுப்படுத்த
1. மன அழுத்தம்.
2. கொழுப்பு உணவு வகைகள்.
3. புகை பிடித்தல், மது அருந்துதல்.
4. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்தல்.
5. இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தல்.
கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகள்:
6. எந்நிலையிலும் சீரான மனநிலை.
7. சீரான உடல் எடை.
8. யோகாசனமும் தியானமும்.
9. உணவில் அதிக அளவில் காய்கறி, பழங்களைச்                சேர்த்தல்
10. சீரான உடற்பயிற்சி.
இந்தப் பத்துக் கட்டளைகளினால் அடையும் பயன்கள்:
இரத்த அழுத்தம் 100mm Hg க்குக் குறைவாகும்.
இரத்தச் சர்க்கரையின் அளவு 100mgm க்குக் குறைவாகும்.
இரத்தக் கெட்ட கொலசுட்ரால் (LDL – C) 100 mgmக்குக் குறைவாகும்.
இடுப்புச் சுற்றளவு 100cmக்குக் குறைவாகும்.
இவை அனைத்தும் வாழ்க்கை எனும் இனிய பயணத்தை நூறு ஆண்டுகளை கடந்து செல்ல வழி செய்யும்.
சுருக்கமாக, ஒரு வருடத்திற்கு நூறு மணி நேரம் உடற்பயிற்சியிலும் நூறு மணி நேரம் தியானத்திலும் செலவிடுவதை இன்றியமையாததாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
இதயம் காக்கமூன்று மந்திரங்கள்:
1.         சீரான எண்ணம்
2.         சீரான உணவு
3.         சீரான உடற்பயிற்சி
இதயத்தைக் காத்திடுவீர்! வாழ்நாளைப் பெருக்கிடுவீர்!

உலக இதய நாள் – ஒலி ஒளிக் காட்சி

உலக இதய நாள் – ஒலி ஒளிக் காட்சி

பதிவு செய்த நாள் : 24/09/2011



குலதெய்வ வழிபாடு – தமிழ் மண்ணின் மரபுகள்

குலதெய்வ வழிபாடு – தமிழ் மண்ணின் மரபுகள்

பதிவு செய்த நாள் : 24/09/2011

சிறப்புக்கருத்தரங்கம்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு கிளை
24/223,என்.எசு.சி.போசு சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்)
சென்னை-600001



நாள்:  27-9-2011
திருவள்ளுவர் ஆண்டு 2042 புரட்டாசி பத்தாம் நாள்
செவ்வாய் மாலை 6-00மணி
இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்


muuvar uyirai kaathituka-competition: save 3 : மூவர் உயிரைக்காத்திடுக-/போடடிகள்


ravisankar: தூக்குத் தண்டனை கூடாது

அணுமின் நிலையப் பாதுகாப்பு: மக்களிடம் விளக்க விஞ்ஞானிகள் தவறிவிட்டனர்- ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர்

First Published : 24 Sep 2011 12:50:59 AM IST


தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர்.
தூத்துக்குடி, செப். 23: கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விளக்க விஞ்ஞானிகள் தவறிவிட்டனர் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் வெள்ளிக்கிழமை கூறினார்.  தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் உண்ணாவிரதம் இருந்து நல்ல முடிவு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாட்டை பற்றி மக்கள் கவலைப்பட தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி. நாட்டு நலனில் தங்களுக்கும் பொறுப்பு இருப்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.  ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட அணு உலை விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. அணுசக்தி தேவைதான். ஆனால், அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது.  கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என அரசு கூறினாலும், விஞ்ஞானிகள் அதை மக்களுக்கு விளக்கவில்லை. அணுமின் திட்டங்களில் கூட நிதி முறைகேடு இருப்பதாக நான் நினைக்கிறேன்.  ஜாதி மத மோதல்களை தவிர்த்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கு ஆன்மிகம் மிக முக்கியமானது. மக்கள் மத்தியில் தற்போது ஆன்மிக எழுச்சி ஏற்பட்டிருப்பது நல்ல அறிகுறி. நாடு சுபிட்சமாக இருக்க ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளது.  ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல. எல்லோரும்தான் காரணம். லஞ்சம் கொடுக்க மாட்டோம் என மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். எனது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மக்களிடம் இந்த உறுதிமொழியை நான் பெற்று வருகிறேன். ஊழலுக்கு எதிராக 14 மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.  அண்ணா ஹசாரே பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பது நல்ல விஷயம்தான். அந்நாட்டிலும் ஊழல் அதிகம் உள்ளது. அதை ஒழிக்க அந்நாட்டு மக்களுக்கு வழிகாட்ட அவர் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.  இலங்கைத் தமிழர் பிரச்னை முழுமையாகத் தீரவில்லை. இங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இன்னும் குடியுரிமை வழங்கவில்லை. நாட்டில் தீவிரவாதம் ஒழிய அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.  தூக்குத் தண்டனை கூடாது என்பதுதான் எனது கருத்து. தவறு செய்வோரை சிறையில் அடைத்து நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு திருந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். வாழும் கலை அமைப்பு சார்பில் 3 லட்சம் சிறைக் கைதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என்றார் அவர்

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

sithambara secret


Help to somaliya people : சோமாலிய மக்களுக்குத் தமிழர்கள் ஏன் உதவலாமே!

சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது?

பதிவு செய்த நாள் : 23/09/2011


ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 6,40,000  பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29,000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக் கொண்டிருக்கிறது.
சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 6,40,000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு வந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள்  வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம்  மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள்  நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப் பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிலேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி. அங்கே நீர் இருந்தது, விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.
உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை. மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாளிப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..
உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய, நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம். தர்மம் தலைகாக்கும்.

உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்
Somali refugees need your help now!
End Famine in Somalia – Somalia Famine: Millions are hungry!
Somalia Emergency – Food and shelter urgently needed!
United Nation High commission for Refugees (UNHCR)
http://www.unhcr.org/emergency/somalia/global_landing.html?gclid=CJyA7M_GrqsCFUp76wod2mDlKA
International Committee of the Red Cross (ICRC)
http://www.icrc.org/eng/donations/index.ஜ்ச்ப்
http://www.globalgiving.co.uk/pr/8500/proj8493a.html?rf=ggadgguk_goog_even_somalia_4&gclid=CO3xu8zKr6sCFQUb6wodO2hueQ
Somalia’s Children Caught in the Crossfire
https://takeaction.amnestyusa.org/site/c.6oJCLQPAJiJUG/b.6662481/k.2BA2/Donate_Now/apps/ka/sd/donorcustom.asp?msource=W1108EDCRYJ&tr=y&auid=8824967


1

வாசகர் கருத்துகள் (1)
கண்டிப்பாக உதவ வேண்டும். உதவியை ஒருங்கிணைக்கும்அமைப்பு எது? அன்புடன்
இலக்குவனார்திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்! இனத்தைக் காப்போம்! /

ஐ. நா. மனித உரிமைகள்அவை இலங்கையிடம் தோல்வி அடைந்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ. நா. மனித உரிமைகள் சபை இலங்கையிடம் தோல்வி அடைந்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பதிவு செய்த நாள் : 23/09/2011


ஐ. நா. மனித உரிமைகள் சபை, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஓராண்டுகால நடவடிக்கைகள் குறித்து 69 பக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில் 2010 ஜூலை மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பணிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகளில் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் விடயத்தில் நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபை தவறிவிட்டது என்று கண்காணிப்பகம் சாடியுள்ளது.
அறிக்கையில் இலங்கை குறித்து ஒன்றரைப் பக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டும் கண்காணிப்பகம், நிபுணர் குழு சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசு வெறுமனே குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததாகவும் சாடி உள்ளது.
அத்தகைய அறிக்கையைப் பெறுவதற்காக, நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் அதிகாரம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இல்லை என்று இலங்கை அரசு தவறாகக் கூறிவருகிறது. இது நிபுணர் குழுவில் அடங்கியிருந்தவர்களின் பக்கச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
அறிக்கையின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று மனித உரிமைகள் சபை உள்ளிட்ட ஐ.நா.வுக்கு, இலங்கை ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.
2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையின் மீது மீண்டும் கவனம் செலுத்துமாறு நிபுணர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்தபோதும், மனித உரிமைகள் சபை கடந்த ஜூன் மாதம் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபை மீளாய்வு செய்யவேண்டும்.
மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்துக்கு, தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்காதது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி பான் கீ மூனுக்கு மனித உரிமைகள் சபை அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.
குறிப்பாக போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்துச் செயற்படவேண்டும்
என்று இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நாவுக்கு உள்ளே பாலத்தினியர்களின் விடுதலை அறிவிப்பு – ஐ.நாவுக்கு வெளியே ஈழத்தமிழர்களின் பொங்குதமிழ் அறிவிப்பு

ஐ.நாவுக்கு உள்ளே பாலஸ்தினியர்களின் சுதந்திர பிரகடனம் – ஐ.நாவுக்கு வெளியே ஈழத்தமிழர்களின் பொங்குதமிழ் பிரகடனம்

நாதம் ஊடகசேவை
பதிவு செய்த நாள் : 23/09/2011


நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் வருடாந்திர கூட்டத்தில் இன்றைய நாள் (செப் 23)  முக்கிய வரலாற்று நாளாக அமையுமென நம்பப்படுகின்றது.
பாலஸ்தீன தலைவர் முகமெட் அப்பாஸ் அவர்கள் பாலஸ்தீன தனிநாட்டு பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த இருக்கின்றார்.
பாலஸ்தீனியர்களின் நீணட சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று வெள்ளிக்கிழமை அமையவிருக்கின்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்கான தங்களது விடுதலை அவாவை, பொங்குதமிழ் பிரகடனமாக ஈழத் தமிழர்களும் ஐ.நா.வுக்கு முன்னால் வெளிப்படுத்தவுள்ளனர்.
ஐ.நா.வின் வருடாந்திர கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள இந்த பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
தமிழீழ தேசிய அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள்  இந்நிகழ்வில் பங்கெடுக்கின்றார்.
இதேவேளை, இந்நிகழ்வில் பங்கெடுக்க கனடிய அமெரிக்க தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

தமிழ்மக்களின் குருதி படிந்த கையோடு அமெரிக்கா வந்துள்ள மகிந்தா இராசபக்சேக்கு எமது எதிர்ப்பைக் காட்டுங்கள்:

தமிழ்மக்களின் குருதி படிந்த கையோடு அமெரிக்கா வந்துள்ள மகிந்தா இராசபக்சேக்கு எமது எதிர்ப்பைக் காட்டுங்கள்:

தமிழ் படைப்பாளிகள் கழகம் கனடா.
பதிவு செய்த நாள் : 23/09/2011


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்திய சுதந்திரப்போரில் வந்தே மாதரம் எப்படியோ அப்படியே தமிழீழ விடுதலைப் போரில் பொங்கு தமிழுக்கு இடம் உண்டு. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழித்த சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஐ.நா பொதுச் சபையில் பேச இருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து தமிழ்மக்களை விடுவிக்கவே மனிதாபிமானப் போர் தொடுத்ததாகச் சொல்லும் இராபக்சே முள்ளிவாய்க்காலில் 70,000 தமிழ்மக்களைக் கொத்துக் குண்டுகள் போட்டுப் படுகொலை செய்துள்ளார்.
போர் முடிந்து இரண்டு ஆண்டுக்கு மேலாகியும் எமது மக்களுக்கு இயல்பு வாழ்வு கிடைக்கவில்லை. சிங்கள இராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி  அல்லல்படுகிறார்கள். அவர்களது அடிப்படைச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு அடிமைகளைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடி அமர்த்தப்படவில்லை. அவர்கள் வாழ்ந்த நிலத்தில் பாரிய இராணுவ முகாம்கள் உருப் பெற்றுள்ளன. சிங்களவர்கள்  குடியேற்றப்பட்டுள்ளார்கள். பவுத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.
புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் தமிழர்களது வாழ்வாதாரம் மற்றும் பண்பாடு சிதைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் சிறிலங்கா அரசு போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் புரிந்ததுக்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருப்பதாகவும் அதையிட்டு ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா வல்லுநர் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையை ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா.வின் மனித உரிமை அவைக்கு இந்த மாத முற்பகுதியில் அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மகிந்தா இராசபக்சாவும் அவரது இராணுவ தளபதிகளும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கும் நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இப்போது தமிழ்மக்களின் குருதி படிந்த கையோடு ஐ.நா அவையில் உரையாற்ற வந்துள்ள மகிந்தா இராசபக்சேக்கு எமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும். மகிந்த இராசபக்சேயின் கோர முகத்தை அமெரிக்காவில் வைத்துக் கிழிக்க வேண்டும்!
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வீச்சுடன் முன்னோக்கி  நகர்த்தும் வகையில் நாம் அனைவரும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து இப் பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். எனவே அவரது அழைப்பை ஏற்று இந்தப் பொங்குதமிழ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு இன உணர்வாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

Release comes according to law: மன்னித்துவிடுதலை செய்வது என்பது சட்டப்படியான ஒன்று

தண்டனை பெற்றவர்களை மன்னித்துவிடுதலை செய்வது என்பது சட்டப்படியான ஒன்று. சட்டத்திற்கு  எதிராக ஆளாளுக்கு இப்படிப் புறப்பட்டால் நீதித்துறை தன் கடமையைச் செய்ய இயலாது. தங்கள் பதவி ஆசைகளுக்காக உண்மையை உரியவர்களிடம் கூறாமல் அப்பாவிகளைத் தூக்கிலேற்ற வேண்டும் எனக் கூலிக்குப் போராடுபவர்களைச் சட்ப்படிச் சிறையில் அடைக்க வேண்டும்.  தமிழனாக அல்ல மனிதனாகக்கூட நடந்து கொள்ளாதவர்கள் பற்றிய செய்திக்கு முதன்மை அளிப்பதை விட்டுவிடுவதே நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

MDMK M.P. met muuvar : சாந்தன், முருகன், பேரறிவாளனுடன் மதிமுக நா.உ.., சந்திப்பு

சாந்தன், முருகன், பேரறிவாளனுடன் மதிமுக எம்.பி., சந்திப்பு

First Published : 23 Sep 2011 01:37:54 AM IST


வேலூர், செப். 22: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.  அவருடன் மதிமுக மதுரை மாவட்டச் செயலர் பூமிநாதன், சிவகங்கை மாவட்டச் செயலர் செவந்தியப்பன் ஆகியோரும் சென்றனர். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது.  பின்னர், கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது:  மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேரையும் சந்தித்தோம்.  தற்போது நடைபெறும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமோ என்ற சந்தேகம் குறித்து மூவரும் விசாரித்தனர். நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஏற்கெனவே, மதிமுக பொதுச் செயலர் வைகோவும், நானும் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்தினோம்.  ராம்ஜேத்மலானி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞர்கள் மூலம் வைகோ மேற்கொண்ட முயற்சியால் 8 வார காலத்துக்கு தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ் உணர்வுள்ள அனைவருடனும் இணைந்து மூவரையும் தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கத் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார் அவர்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

செருமனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்றுள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதிய அரசவை உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளின் அறிமுகஅரங்கம் ஜேர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17-09-2011) மதியம் 14:00 மணிக்கு Gartenverein NORA , Eberstr 46 , 44145 Dortmund இடத்தில் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், பிரதிஅவைத் தலைவர் சுகன்யா புத்திசிகாமணி, அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர், தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா, கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.
புதிய அரசவை உறுப்பினர்களது விபரம் :
கனடா :
நிமல் விநாயகமூர்த்தி
வின் மாகாலிங்கம்
ஜெயபாலன் அழகரட்ணம்
சிறிசங்கர் சின்னராஜா
கென்றி கிருபைராஜா
தனபாலன் மார்க்கண்டு
டென்மார்க் :
இளையராஜ் கண்ணன் சிதம்பரநாதன்
ஜேர்மனி :
வாசுகி தனகராஜா
சுப்பிரமணியம் பரமானந்தன்
தணிகா சுப்பிரமணியம்
பிரியதர்சினி மனோகரன்
நோர்வே :
தோமஸ் அலோசியஸ்
பிரித்தானியா :
மணிவண்னன் பத்மநாபன்
நிமலன் சீவரட்ணம்
சொக்கலிங்கம் யோகலிங்கம்
சிவயூசம் சுகுமார்
நாதம் ஊடகசேவை

புதன், 21 செப்டம்பர், 2011

னது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் எனக் கூறிய மாணவன்

எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் எனக் கூறிய மாணவன்

பதிவு செய்த நாள் : September 21, 2011


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது  புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேசுவரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு.
வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது முந்தைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளான போதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் முல்லைத்தீவில் மிகவும் கடின சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்’ என கூறினான்.
இவ்வைபவத்தில், அமைச்சர் டக்ளசு தேவானந்தா, வட மாகாண ஆளுநர். சீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags: 


வாசகர் கருத்துகள் (1)
  1. தம் இனத்தை வஞ்சகமாகக் கொன்று குவித்ததுடன் தொடர்ந்து அழிப்புப்பணியில் ஈடுபட்டு வரும் கொடுங்கோல் அரசின் அமைச்சரின் காலில் வீழா இச்சிறுவனின் தன்மானம் பாராட்டத்தக்கது.பரமேசுவரன் சேதுராகவன் பாரில் புகழ் பெற்றுச் சிறந்து விளங்குக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

Indira Gandhi assasination: conspiracy of cong.











Muthamizh Vendhan  
 
 
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை
பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம
முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக்
கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின்
இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும்
தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி
செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய
முடியாமல், அது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது ராஜீவ் மரணத்துக்கு இழைத்த மிகப்
பெரும் அநீதியாகும்.

<http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/sanjayindira.jpg>ராஜீவ்
கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் மற்றும் ராஜீவ் பாதுகாப்புக்கு உரிய
ஏற்பாடு செய்யாதவர்களைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் ஆட்சி துடிப்புடன்
செயல்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர்
தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ், தனது
ஆதரவோடு சந்திரசேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி யிருந்தது.
சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை
நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற
உச்சநீதிமன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை
அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ்
காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா
என்பது குறித்து ஆராய்வதே இந்த ஆணையத்தின் பணி என்று உள்துறை அமைச்சகம்
அறிவித்தது. இதை அப்போது காங்கிரஸ் எதிர்த்தது. ராஜீவ் கொலையின் சதித்
திட்டங்கள் பற்றியும், விசாரணை வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் என்று அப்போது
காங்கிரஸ் தலைவராக இருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமர் சந்திரசேகருக்கு கடிதம்
எழுதினார். ஆனால், ஜெ.எஸ். வர்மா பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளை
மட்டுமே தம்மால் விசாரிக்க முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதன்
காரணமாகவே ஜெ.எஸ். வர்மா விசாரணை வரம்பிலிருந்து ஒதுக்கப்பட்ட அயல்நாட்டு சதி
தொடர்புகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி. ஜெயின்
தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் 1991 ஆக. 23 இல் அமைக்கப்பட்டது.

சந்திரசேகர் ஆட்சியின்போதும் அடுத்த சில மாதங்களில் அமைந்த நரசிம்மராவ்
தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போதும் நீதிபதி வர்மா ஆணையம் செயல்படுவதற்கான
நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அலுவலக செயலாளரோ,
பணியாளர்களோ நியமிக்கப்பட வில்லை. மனம் குமுறிய ஜெ.எஸ். வர்மா, வெளிப்
படையாகவே, “இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி, எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது
காட்டு கிறது. இது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. உலக மக்கள்
இதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்” (2.5.1991 ‘இந்து’ நாளேடு) என்று கூறினார்.
ஒரு வழியாக நீதிபதி சர்மா, 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கையை மத்திய அரசிடம்
சமர்ப்பித்தார். 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தான் நரசிம்மராவ் ஆட்சி,
அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தது. உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் சர்மா
அறிக்கையின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்தார். ஆனால், காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்களே, இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்ததால், பிரதமர்
நரசிம்மராவ், அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது. அதன்
பிறகும், இரண்டு ஆண்டுகாலம் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு
எதிர்கட்சிகள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு
ஒன்று அறிக்கையை பரிசீலித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டது.

வர்மாவின் அறிக்கை மத்திய மாநில ஆட்சிகளின் காவல்துறை, உளவுத் துறையைக்
கடுமையாகக் குறை கூறியது. ராஜீவ் கொலை நடந்தபோது மத்தியில் நடந்த சந்திரசேகர்
ஆட்சியும், தமிழ்நாட்டில் நடந்த ஆளுநர் ஆட்சியும் காங்கிரசின் ‘பினாமி’
ஆட்சிகள் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ராஜீவுக்கு பாதுகாப்பு
வழங்குவதில் தமிழக காவல்துறை, தமிழக அரசு, இந்திய உளவுத் துறை மற்றும் ராஜீவ்
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த காங்கிரசார் தங்கள் கடமையிலிருந்து நழுவி விட்டனர்
என்று குற்றம்சாட்டியது வர்மா அறிக்கை, இவர்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால்
ராஜீவ் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று கூறியது.

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கும், தமிழ்நாடு
காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததால், மரகதம் சந்திரசேகர்,
தமிழக காங்கிரசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, தானே ஏற்பாடு
செய்தார் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியும், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல்
ஒதுங்கி நின்றார் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது. வர்மா விசாரணை
ஆணையத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எவ்வித ஒத்துழைப்பையும் தரவில்லை
என்று கூறிய அந்த பரிந்துரை, “ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டம் நடந்த இடத்தில்
காங்கிரஸ் கட்சிக் காரர்களின் செயல்பாடுகள் எந்தவிதமான ஒழுக்கமும் இல்லாமல்
பொது இடத்துக்குரிய பொறுப்பு இன்றி இருந்தது” என்று கடுமையாக காங்கிரசாரை
இடித்துரைத்தது.

வர்மா அறிக்கை பற்றி பரிசீலிக்க அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு, கடமை தவறிய
சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
கடமை தவறிய நான்கு மூத்த அதிகாரிகளிடம் அமைச்சரவைக் குழு நேரில் விசாரணை நடத்தி
விளக்கம் கேட்டது. உளவுத் துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறை செயலாளர்
ஜி.எஸ். மணிசர்மா, பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய், அமைச்சரவை செயலாளர்
வினோத் பாண்டே ஆகியோர் தான், விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள். ஆனால், இவை
எல்லாமே கண் துடைப்பு நாடகம் தான். வர்மா, பரிந்துரையை சமர்ப்பித்தபோது, இந்த
அதிகாரிகள் பதவியில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற
பிறகே, விசாரணை நடத்தி விளக்கம் கேட்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற பிறகு,
நடவடிக்கை எடுக்க இயலாது என்பதைத் தெரிந்தே, காங்கிரஸ் ஆட்சியினர், இப்படி ஒரு
விசாரணை நாடகத்தை நடத்தினர். உடனடியாக, அந்த நான்கு அதிகாரிகளும், தங்களிடம்
விளக்கம் கேட்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக மன்றத்திடம் முறையீடு
செய்தனர். ஓய்வு பெற்ற பிறகு, இவர்களிடம் விளக்கம் கேட்பது, முறையற்றது என்று
நிர்வாக மன்றம் தீர்ப்பளித்து விட்டது. ராஜீவ் கொலையில் கடமையை செய்யாமல்
தவறிழைத்த அதிகாரிகளை காங்கிரஸ் ஆட்சியே இப்படி திட்டமிட்டு காப்பாற்றியது.
வர்மா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படை யில் எந்த ஒரு நடவடிக்கையையும்
காங்கிரசாரோ, காங்கிரஸ் ஆட்சியோ இதுவரை எடுக்கவில்லை என்பதோடு
குற்றம்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றி விட்டார்கள்.

ராஜீவ் கொலை நடந்தபோது, இந்தியாவின் உளவுத் துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே.
நாராயணன். ஜெ.எஸ். வர்மா ஆணையம், தனது அறிக்கையில் எம்.கே. நாராயணன் ‘நம்பகத்
தன்மை’ குறித்து கேள்விகளை எழுப்பியது.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் மீது குண்டு வெடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ
படத்தின் மூலப் பதிவு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இருந்தது போலவே, உளவுத்
துறை இயக்குனர் எம்கே. நாராயணனிடமும் இருந்தது. ஆனால், இந்த வீடியோ மூலப் பதிவை
சிறப்புப் புலனாய்வுக் குழுவும் எம்.கே. நாராயணனும், வர்மா ஆணையத்திடம்
தரவில்லை. தங்களிடம் அப்படி எந்த ஒரு ‘வீடியோ கேசட்டும்’ இல்லை என்றே சிறப்புப்
புலனாய்வுக் குழுத் தலைவர் கார்த்திகேயன், ஆணையத்திடம் கூறி விட்டார் என்று
அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதன் பிறகு, இந்த வீடியோ காட்சிகளில் ஏதேனும்
அழிக்கப்பட் டுள்ளதா என்று வெளிநாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக
கார்த்திகேயன் வர்மா ஆணையத்தில் தெரிவித்து விட்டார். கடைசி வரை அந்த படப்பதிவு
ஆணையத்திடம் தரப்படவில்லை. விசாரணையின் கடைசி அமர்வில்கூட இது பற்றி நீதிபதி
வர்மா கேட்டார். அப்போதும்கூட ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவே,
ஆணையத் திடம் கார்த்திகேயன் சார்பில் கூறப்பட்டது.

வர்மா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பிரதி எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவுகளில்
வெடிகுண்டுப் பெண் ராஜீவுக்கு மாலையிட முயன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்யும்
காட்சிகள் தெளிவின்றி திட்டமிட்டே மங்கலாக்கப்பட் டிருந்தன என்று வர்மா, தனது
பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான இந்தக் காட்சிகள் மட்டும்
ஏன் மங்கலாக்கப்பட்டன என்ற கேள்வியை நீதிபதி வர்மா எழுப்புகிறார். பாதுகாப்பு
குறைபாடுகள் பற்றி விசாரணை நடத்திய வர்மா, ஆணையத்திடம் வீடியோ கேசட் மூலப்பதிவை
தர மறுத்த அதே சிறப்புப் புலனாய்வுக் குழு, அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய
ஜெயின் ஆணை யத்திடம் நான்கு வீடியோ கேசட்டுகளை வழங்கியது. காரணம், பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் நோக்கம்
தான். இது தவிர, ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து இறங்கி,
ஸ்ரீபெரும்புதூர் சென்றது வரை எடுக்கப்பட்ட வீடியோ கேசட், தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியிடம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள், அந்த
வீடியோ பதிவு தங்களிடம் இல்லை என்றும், அதை காவல்துறை கைப்பற்றியிருக்கலாம்
என்றும், வர்மா ஆணையத்திடம் கூறி விட்டனர். ராஜீவுடன் வந்த காங்கிரஸ்காரர்கள்
ஏன் ஸ்ரீபெரும் புதூர் போகவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என்ற
அச்சம்தான் இதற்குக் காரணம். இது குறித்து வர்மா தனது வருத்தத்தைப் பதிவு
செய்துள்ளார். ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ நூலில் அதன் ஆசிரியர் ராஜீவ்
சர்மாவும் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.

ராஜீவ் படுகொலையில் இறுதி வினாடி வரை, அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு
செய்யப் பட்டதா? கொலை சதிக்கு திட்டமிட்டவர்கள் மீது கேமிரா பார்வை விழுந்ததா?
தாணு மற்றும் சிவராசன் அருகில் யார் யார் நின்றார்கள்? அல்லது அமர்ந்தார்கள்?
கேமிராவில் உள்ள சில பதிவுகளை திட்டமிட்டு மங்கலாக்கியது யார்? இதற்கு ஆணை
யிட்டது யார்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எம்.கே. நாராயணன் பற்றி வர்மா ஆணையம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும்
குறிப்பிடப்பட வேண்டியதாகும். “ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட் டிருந்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் எம்.கே. நாராயண னுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை
இந்த ஆணையம் உணருகிறது. ஆனால் வெளியே சொல்ல முடியாத காரணங்களால், அவரால் இதற்கு
எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது பற்றி, இன்றைய நாள்வரை எம்.கே.
நாராயணன் வாயை மூடி மவுனம் சாதிக்கிறார். உயர்மட்டத்தில் நடக்கும் இந்தக்
குறைபாடு களுக்கான காரணங்களை கண்டறிந்து, உடனே களைய வேண்டும்” என்று வர்மா
ஆணையம் குறிப்பிடுகிறது. இது குறித்து ராஜிவ் சர்மா, தனது நூலில் பல கேள்விகளை
எழுப்பியுள்ளார்.

“ராஜீவ் உயிருக்கு திட்டவட்டமான அச்சுறுத்தல் உள்ளது என்பதை எம்.கே. நாராயணன்
முன்கூட்டியே தெரிந்திருந்தாரா? அல்லது ராஜீவ் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி
செய்ய விரும்பினாலும், ‘அதிகார பலம் கொண்ட மேலிட உத்தரவினால்’ அவரால் செயல்பட
முடியாமல் போனதா? ராஜீவ் மரணத்தால், அரசியல் ரீதியாக பயனடைந்தவர்கள் யார்?
ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் மே 20 அன்று அப்போதைய உளவுத் துறையின்
இணை இயக்குனர் எஸ்.கே. தாக்கூர் அனைத்து மாநில காவல்துறை தலைமை
அதிகாரிகளுக்கும், ராஜீவ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி, ஒரு கடிதம்
எழுதியிருந்தார். அப்படியானால், அடுத்த நாள் ராஜீவ் கொலை நடக்கப் போகிறது
என்பது முன்கூட்டியே தெரியுமா? ஏன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற
கேள்விகளை அவர் முன் வைக்கிறார்.

1991 இல் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உள்துறை
செயலாளர் பார்கவா தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில்
உளவுத் துறைத் தலைவர் எம்.கே. நாராயணனும் கலந்து கொண்டார். அப்போது ராஜீவுக்கு
தரப்படும் பாதுகாப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எனவே எம்.கே. நாராயண னுக்கு,
ராஜீவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த எல்லா விவரங்களும் தெரியும்
என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உள்துறை அமைச்ச கத்தின் இணைச் செயலாளர்
என்.கே. சிங், என்பவர் வர்மா ஆணையத்தின் முன் தெரிவித்தார். ஆனால், அதுபற்றி
தனக்கு எதுவுமே தெரியாது, அப்படி ஒரு கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவே இல்லை
என்று எம்.கே. நாராயணன் மறுத்தார். நீதிபதி வர்மா விடவில்லை. இருவரையும்
எழுத்துப் பூர்வமாக தங்கள் கருத்துகளைக் கூற முடியுமா என்று கேட்டபோது, என்.கே.
சிங், எழுத்துபூர்வமாக அக்கூட்டத்தில் பங்கேற்றது உண்மையே என்று எழுதிக்
கொடுத்தார். எம்.கே. நாராயணன் எழுத்துப் பூர்வமாக தர முன்வரவில்லை. எம்.கே.
நாராயணன், ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு
தனக்குக் கிடைத்த உயர்மட்ட கூட்டத்தின் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை
என்ற முடிவுக்கு தாம் வந்ததாக வர்மா, தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.கே. நாராயணன், பொய் கூறுவதற்கும் தயங்காத ஒரு மனிதர் என்பதையே, இது
காட்டுகிறது.

இந்திய உளவுத் துறையை கடுமையாக விமர்ச்சிக்கிறது வர்மா அறிக்கை. “உளவுத்
துறையில் அரசியல் தலையீடுகள் மிக சாதுர்யமாக நடக் கின்றன. அதன் செயல்பாடுகள்
புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு கறை படிந்து கிடக்கின்றன. அதன் நம்பகத்
தன்மை நடைமுறையானாலும், கற்பனையானாலும் மோசமான பாதிப்புக்குள்ளாகி விட்டது.
அரசியல் சார்பு, அடியாட்கள் அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான
அதிகாரிகளைக் கொண்ட புதிய அமைப்பாக உளவு அமைப்புகள் உருவெடுக்க வேண்டும்” –
என்று வர்மா நெத்தியடியாகக் கூறுகிறார்.

ராஜீவ் கொலையில் ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்க காங்கிரஸ் ஆட்சி நியமித்த ஜெயின்
விசாரணை ஆணையத்தின் கதையோ, இதைவிட மிக மோசம்!

1991 ஆகஸ்டு மாதம் இந்த விசாரணை ஆணை யத்தை அமைத்ததே நரசிம்மராவ் தலைமையில்
நடந்த காங்கிரஸ் ஆட்சி தான். காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்களின்
வற்புறுத்தலினால்தான் அது வந்தது. ஆனால், பெற்ற குழந்தையை தாயே, கழுத்தை
நெறித்து சாகடிப்பது போல், இந்த ஆணையத்தின் செயல்பாட்டையும் காங்கிரஸ் ஆட்சி
முடக்கிப் போடவே துடித்தது.ஜெயின் ஆணையம் எப்படி எல்லாம் காங்கிரஸ் மைதானத்தில்
பந்தாடப்பட்டது என்ற விவரங்கள் அதிர்ச்சித் தரக்கூடியதாகும். “ராஜீவ் கொலையை
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?” என்று கசிந்துருகி கண்ணீர் வடிக்கும்
காங்கிரஸ் கட்சியினர் இந்த விசாரணை ஆணை யத்தை முடக்கி, ராஜீவ் கொலையில் அன்னிய
சதியை மூடி மறைக்க எடுத்த முயற்சிகள் அதிர்ச்சியூட்டு பவையாகும். அந்த துரோகச்
செயல்பாடுகளை, அப்படியே பட்டியலிட்டுக் காட்டுகிறோம்.

நீதிபதி ஜெயின், தனது விசாரணையைத் தொடங்கு வதற்கு முன்பு, விசாரணைக்கான வரம்பை
நிர்ணயிக்க விரும்பினார். எனவே ஏற்கனவே ஜெ.எஸ். வர்மா, விசாரணை ஆணையத்தை
நியமித்து அரசு பிறப்பித்த மூல அறிக்கை அடங்கிய கோப்பை, உள்துறை அமைச்சகத்திடம்
கேட்டார். ஆனால். அந்த கோப்பே தொலைந்து போய் விட்டதாக அமைச்சகம் கூறிய பதில்,
நீதிபதியை அதிர்ச்சியடையச் செய்து விட்டது.

• நாடாளுமன்றத்தில், அரசின் அலட்சியத்தைக் கண்டித்து உறுப்பினர்கள்
கொந்தளித்தனர். நாடாளுமன்றமே குலுங்கியது. இதைத் தொடர்ந்து காணாமல் போன
கோப்பைத் தேடி கண்டுபிடிக்க கோப்பைத் தேடும் ஒரு ‘சிறப்புப் பிரிவு’
உருவாக்கப்பட்டது.

• கோப்புகளைத் தேடிப் பிடிக்க சிறப்புப் பிரிவு அமைத்த சம்பவம், அநேகமாக இதுவே
முதல் முறையாக இருக்கும். வலை வீசித் தேடக் கிளம்பிய சிறப்புப் பிரிவு பிரதமர்
அமைச்சகம், சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்
தேடியும், கோப்பு கிடைக்காத நிலையில், அந்தக் கோப்பைக் கண்டுபிடிக்க
முடியவில்லை என்று நரசிம்மராவ் ஆட்சி அறிக்கை வெளியிட்டது.

• இதனால் ஒரு வருட காலம், ஆணையத்தின் பணி முடங்கியது. பிறகு, முதன்முதலாக பொது
மக்கள் கருத்து கேட்கும் பணியைத் தொடங்க, ஆணையம் முன் வந்தது. அப்போது, மத்திய
அரசின் வழக்கறிஞரே (அட்டர்னி ஜெனரல்) , ஜெயின் ஆணையத்தின் விசாரணை அதிகாரம்
பற்றிக் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் தருமாறு சட்ட
அமைச்சகத்திடம் நீதிபதி ஜெயின் கேட்டார்.

• ஆனால், நீதிபதிக்கு பதில் தருவதற்கு, சட்ட அமைச்சகம் எடுத்துக் கொண்ட கால
அவகாசம், மீண்டும் ஒரு வருடம். ஒரு வருடத்துக்குப் பிறகு, சட்ட அமைச்சகம் தந்த
பதிலில் ஏற்கனவே தமிழ் நாட்டில் சி.பி.அய். (சிறப்புப் புலனாய்வுக் குழு)
நடத்திய விசாரணையில் ஜெயின் ஆணையம் தலையிடக் கூடாது என்றும், சி.பி.அய்.
விசாரித்த நபர்களை ஜெயின் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்றும், அதற்கான அதிகாரம்
ஜெயின் ஆணையத்துக்கு இல்லை என்றும் பதில் தந்தது.

• ஜெயின் இதை ஏற்க மறுத்தார். ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்கும்போது,
எல்லாவற்றையும் விசாரிக்கும் உரிமை தனக்கு உண்டு என்று 60 பக்கங்களில் விரிவான
ஆணையை ஜெயின் வெளியிட்டார். சி.பி.அய். செய்த தவறுகளை விசாரிக்கவும்,
சி.பி.அய். விசாரணைப் பணிகளை நேரில் பார்வையிடவும், தமக்கு அதிகாரம் உண்டு
என்றார் ஜெயின்.

• ஜெயின், தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய
அரசு, அதுவரை, ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்
என்று கேட்டது. இடைக்காலத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயின் மறுத்து
விட்டார்.

• இதைத் தொடர்ந்து ஆணையத்தை நீதிமன்றம் வழியாக முடக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டன. டெல்லியைச் சேர்ந்த முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞர் டெல்லி
உயர்நீதிமன்றத்தில், ஜெயின் ஆணையத்தை நியமித்த அரசு ஆணை செல்லாது என்று
‘பொதுநல’ வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஏற்கனவே, சி.பி.அய். குற்றவாளிகளைக்
கண்டறிந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், ஜெயின் ஆணையம்,
மீண்டும் குற்றவாளிகளைக் கண்டறிய முற்படுவது நேர் எதிரான விளைவுகளை
உருவாக்கிவிடும். சி.பி.அய். கண்டறிந்தவர்கள் மட்டுமே குற்ற வாளிகள். ஜெயின்
ஆணையம், வேறு குற்ற வாளிகளைக் கண்டறிந்தால், வழக்கு விசாரணையை பாதிக்கும்”
என்று அவர் கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம்,
ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் சி.பி.அய்.
சாட்சிகளை வர்மா ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பிறகு வழக்கை
விசாரித்த உயர்நீதிமன்றம், 1995 நவம்பரில், டெல்லி வழக்கறிஞர் மனுவை தள்ளுபடி
செய்தது, ஜெயின் ஆணையத்தின் விரிவான விசாரணை அதிகாரத்தை உறுதிப் படுத்தியது.

• பதறிப் போன மத்திய காங்கிரஸ் ஆட்சி, முகமூடியைக் கிழித்துக் கொண்டு வெளியே
வந்தது. முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞரின் தனி நபர் மனுவை மத்திய அரசே,
உச்சநீதி மன்றத்துக்குக் கொண்டு போனது. ஆக, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து, தனது
சார்பில், ‘பொது நல’ வழக்கைத் தொடர்ந்ததே, மத்திய அரசு தான் என்ற உண்மை
வெளிச்சத்துக்கு வந்தது. தனி நபர் தொடர்ந்த பொது நலன் வழக்கில் அரசு
மேல்முறையீடு செய்ததை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டது. அதன் பிறகு, மத்திய அரசே
தயாரித்துக் கொடுத்து தனி மனிதர் வழியாக தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவை
திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

• ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் ராஜீவ் கொலையில் தொடர்புடைய அரசியல்
பிரமுகர்கள் அம்பலமாகி விடுவார்களோ என்று அஞ்சி, அதை முடக்கத் துடித்தது
காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் உறுப்பினர்களின் வலியுறுத்த லால் வேறு வழியின்றி
அமைக்கப்பட்டஜெயின் ஆணையத்தை செயல்படவிடாமல் தடுக்க மேற்கொண்ட கடும் முயற்சிகள்
பலத்த சந்தேகங்களை மக்கள் மன்றத்தில் எழுப்பி நிற்கின்றன.

ஜெயின் ஆணையமோ விரிவான விசாரணையை நடத்தியது. 1987 ஆம் ஆண்டு முதல்
சந்திராசாமியின் சர்வதேச ரகசிய தொடர்புகள், வெளிநாட்டு வங்கிகளில் போட்ட பணம்,
சுப்ரமணியசாமி தொடர்புகள் பற்றி இந்திய உளவுத் துறை தயாரித்து வைத்திருந்த
ஆவணங்கள், ஜெயின் ஆணையத்திடம் வந்து சேர்ந்தன. அந்த ஆவணங்கள் அரசிடம்
சமர்ப்பிக்கப்படாமல் உளவுத் துறை வசமே இருந்தன. 1998 பிப்ரவரியில் ஜெயின்
ஆணையத்தின் செயலாளராக இருந்த டி.ஆர். லுத்ரா, மத்திய உள்துறை செயலாளர் பி.பி.
சிங் என்பவருக்கு அதுவரை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு போகாமல், உளவுத்
துறை, தன் வசம் ரகசியமாக வைத்திருந்த அந்த ஆவணங்களை, அரசுக்கு அனுப்பி
வைத்தார். 1991 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையம் 12 முறை கால நீட்டிப்பு
பெற்றிருந்தாலும், அரசுக்கு புதிய ஆவணங்கள் தரவுகள் கிடைத்துள்ளதால்
சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, அன்னிய சதிகள் பற்றி கண்டறிய மேலும், ஓராண்டு
கால அவகாசம் தருமாறு ஆணையத்தின் சார்பில் அதன் செயலாளர் டி.ஆர். லுத்ரா அரசிடம்
கேட்டார். அப்போது குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி
நடந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் குஜ்ரால் ஆட்சியில் பங்கேற்கவில்லை; வெளியிலிருந்து ஆதரவு தந்தது.
காங்கிரஸ் பலத்தை நம்பியே குஜ்ரால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய
நிலை! ஜெயின் ஆணையத்தின் விசாரணகள் தொடருவதை விரும்பாத காங்கிரஸ் தலைமை கால
நீட்டிப்புத் தரவேண்டாம் என்றே குஜ்ரால் ஆட்சியை மிரட்டியது; இல்லாவிட்டால்
ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். எனவே, “கால
நீட்டிப்பு தரஅரசு விரும்பவில்லை; அடுத்த ஏழு நாட்களில் ஆணையம் இறுதி அறிக்கை
தந்தாக வேண்டும்” என்று 1998 பிப்.27 அன்று நள்ளிரவு உள்துறை அமைச்சகம் ஜெயின்
ஆணையத்துக்கு ஆணையிட்டது நீதிபதி ஜெயின் பதறிப் போனார்.

குஜ்ரால் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நீதிபதி ஜெயினை தொலைபேசியில் அழைத்து,
“ஆணையம் விரிவான அறிக்கை தரத் தேவை யில்லை. மேலோட்டமான அறிக்கையை சமர்ப்
பித்தாலே போதுமானது. மேலோட்டமான அறிக்கை என்பதால் நாடாளுமன்றத்தில் வைக்கத்
தேவையில்லை. அது நேரடியாகவே அமைச் சரவைக்கு வந்து சேர்ந்து விடும். அத்துடன்,
செயல்பாட்டுக்கான அறிக்கையை (action taken Report) சமர்ப்பிக்க வேண்டிய
அவசியமும் இல்லை” என்று கூறினார்.

இறுதி அறிக்கை தயாரிப்பில் பரபரப்பாக இருந்த ஆணையத்தை சி.பி.அய். அதிகாரிகளும்
மிரட்டினர். ஏற்கனவே ஆணையத்தின் அறிக்கை ஊடகங்களில் கசிந்திருந்தன. அவை
காங்கிரசுக்கு எதிராகவே இருந்தன. கசிய விட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று, சி.பி.அய். அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். நீண்ட நேரம்
சி.பி.அய். அதிகாரிகளுக்கும் ஜெயின் ஆணையத் திற்குமிடையே கடும் வாக்குவாதம்
நடந்தது. ஜெயின் ஆணையம் கடும் நெருக்கடிகளை மிரட்டல்களை சந்திக்க
வேண்டியிருந்தது. அறிக்கை தயாரிப்புக்கு எதிராக, நீதிபதிக்கு தொலைபேசி
மிரட்டல்கள் வந்தன. நீதிபதியே உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த
தொலைபேசி மிரட்டல்களைப் பதிவு செய்தார். இதே நீதிபதி 1997 ஆம் ஆண்டு அப்போதைய
உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவிடம், ஊடகங்கள் புடை சூழ, 2000 பக்க
அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து நிர்ப்பந்தத் தால்
சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை முற்றிலும் முரண்பட்டதாகவே இருந்தது.
மிரட்டலுக்கு அஞ்சிய ஜெயின் தனது பரிந்துறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு
உள்ளனார். முதல் அத்தியாயத்தின் முதல் பக்கத்தில் ராஜீவ் காந்தி படத்தை அறிக்கை
தாங்கியிருந்தது. முதல் அத்தியாயம் முழுவதிலும் ராஜீவ் காந்தியின் பெருமைகளையே
ஜெயின் புகழ்ந்து தள்ளியிருந்தார். எந்த ஒரு விசாரணை ஆணையமும், இப்படி, தனிநபர்
புகழ் பாடிய முன் உதாரணங்கள் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் விரும்பியவாறே
அறிக்கை வடிவம் பெற்றது. ஒரு வாரம் கழித்து, நீதிபதி ஜெயின், அவரது சொந்த ஊரான
ஜோத்பூருக்குப் போனார். அங்கே எதிர்பாரத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சோனியா
காந்தி – நீதிபதி இல்லம் தேடி வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எந்த ஜெயின் ஆணையத்தை கடமையை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், அலைக் கழித்ததோ, அதே
விசாரணை ஆணையத்துக்கு சோனியாவின் பாராட்டும் நன்றியும் கிடைத்தது. வர்மா
ஆணையத்தின் பரிந்துரை முடக்கப்பட்டது. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரை மிரட்டலால்
வளைக்கப்பட்டது. இதுவே விசாரணை ஆணையங்களின் சோகமான முடிவு. இதே சோக முடிவைத்
தான் இந்திரா காந்தி கொலையை விசாரிக்க அவரது ‘தவப்புதல்வன்’ ராஜீவ் காந்தியால்
நியமிக்கப்பட்ட தாக்கர் ஆணையமும் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்திரா கொலை பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விதிகளின் கீழ் தாக்கர் ஆணையம்
நியமிக்கப் பட்டது. ஆணையமும் விசாரணை நடத்தி அறிக்கை தந்தது. ஆனால், பிரதமர்
ராஜீவ் அதை நாடாளு மன்றத்தில் வைக்க மறுத்தார். விசாரணை அறிக்கை யில்
அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவே முயன்றார். விதிகளை சுட்டிக்காட்டி
உறுப்பினர்கள் எதிர்த்தனர். உடனே ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தின் விதிகளையே
திருத்தி அறிக்கையை வெளி வராமல் தடுத்தார். ஆனாலும், ஆணையத்தின் முக்கிய
பரிந்துரைகள் ஊடகங்களில் கசிந்துவிட்டன. அந்த செய்திகள் அதிர்ச்சியூட்டு
பவையாகும்.

“இந்திரா கொலையில் அவரது இல்லத்துக் குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. அரண்மனை
சூழ்ச்சி போன்ற (Palace Intrigue) பெரிய சதிகள் அடங்கியுள்ளன. இந்தக் கொலையில்
இந்திராவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது.
இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று பரிந்துரை கூறியது. (‘சண்டே’
ஆங்கில வார ஏடு 3.2.1991)

தாக்கர் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய ஆர்.கே. தவான், இந்திராவின் உதவியாளர்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் ஆட்சி எடுக்க வில்லை. ராஜீவ் சில காலம்
ஒதுக்கி வைத்திருந்தார். பிறகு சோனியாவின் செல்வாக்கு ஓங்கிய நிலையில் ஆர்.கே.
தவான், டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்
பட்டார். காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் முதலிடம்
பெற்றிருந்ததே ஆர்.கே. தவான் பெயர் தான். அதன் பிறகு, சீத்தாராம் கேசரி
காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், ஆர்.கே. தவான், காங்கிரஸ் கட்சியின்
செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது இந்திராவின் ‘அரண்மனையில்’ இருந்த
அவரது ஒரே குடும்ப உறுப்பினர் சோனியாதான். அப்படியானால் தாக்கர் கூறிய
அரண்மனைச் சதி என்பதன் பெருள் என்ன? இதற்கும் ஆர்.கே. தவானுக்கும் உள்ள தொடர்பு
என்ன? குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை உயர் பதவியில் உட்கார வைத்து அலங்கரிக்க
வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை.

இந்திரா தனது வீட்டு வளாகத்தில் உள்ள அலுவலகம் வந்தபோது, வழக்கமாக அணியும்
குண்டு துளைக்காத கவசத்தை சம்பவம் நடந்த அன்று அணியாமல் வந்தார். அந்த செய்தி
‘அரண்மனைக்குள்’ இருந்தவர்களால் இந்திரா பாதுகாவலர்களில் ஒருவரான பென்சிங்
என்பவருக்கு தரப்பட்டதால், பாதுகாவலர் வயிற்றைக் குறி பார்த்து சுட்டார் என்று
கூறியது. தாக்கர் ஆணையம்! இந்திராவை சுட்ட அந்தப் பாதுகாவலரை, காவலாளிகள்
உயிருடன் பிடிக்காமல், உடனே சுட்டுக் கொன்று விட்டனர். உண்மைகள் மூடி
மறைக்கப்பட்டுவிட்டன. இந்திரா கொலையில் பொய்யாக வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டு
காலம், சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு அரசாலே வழக்கை திரும்பப்
பெறப்பட்டவர் கிம்ரஞ்சித் கிங் மான். பென்சிங்கை சுட்டுக் கொன்றது ஏன் என்ற
கேள்வியை எழுப்பிய அவர், இந்திரா கொலையில் இத்தாலி நாட்டின் தொடர்பு
இருக்கிறது. அப்பாவிகள் தூக்கிலிடப்பட்டு விட்டனர். எனவே மறுவிசாரணை நடத்தப்பட
வேண்டும் என்றார். (‘தி இந்து’ 1.4.1990)

மத்திய காங்கிரஸ் ஆட்சி தனது அதிகாரத்தை உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளைக்
காப்பாற்றவே முயன்றிருக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பன
சூழ்ச்சி யோடு குலைக்க தொடர்ந்து சதித் திட்டங்களையும், குழி பறிப்புகளையும்
அரங்கேற்றியே வந்திருக்கிறது. இந்த உண்மைகளை நமது தமிழின இளைஞர் களிடம்
விளக்கிடும் முயற்சியே இந்தத் தொடர்!

‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற நூலை உளவு நிறுவன ‘ஆசியுடன்’ எழுதிய
ராஜிவ் சர்மா விடுதலைப் புலிகள் மீது சுமத்திய வீண் பழிகள் அவதூறுகளுக்கு உரிய
தரவுகளோடு மறுப்பு எழுத வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்தத் தொடர், அதன்
எல்லைகளைக் கடந்து, வேறு பல உண்மை களையும் உணர்த்திட முயன்றிருக்கிறது! இந்த
உண்மைகளை தமிழர்களிடம் கொண்டு சென்றால் இந்த கடும் உழைப்பின் நோக்கம்
முழுமையடையும்.

தொடரைத் தொடர்ந்து படித்து உற்சாகமூட்டிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்து
முடிக்கிறேன்.

(‘புலிகளுக்கு அப்பால்’ நூலை எழுதிய ராஜீவ் சர்மா, விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் மீது களங்கம் சுமத்தி, சேறு வாரி இரைத்தது உண்மை. ஆனாலும்,
புலனாய்வுத் துறை ஆதரவுடன் வெளி வந்த அந்த நூலில் பல ரகசிய ஆவணங்கள்
வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜெயின், வர்மா
ஆணையங்கள் தொடர்பாக பல வெளி வராத செய்திகளை ராஜிவ் சர்மா நூல் பதிவு
செய்துள்ளது. அதிலிருந்தே விசாரணை ஆணை யங்கள் தொடர்பான தரவுகள் இத் தொடரில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.)

(நிறைவு)

- விடுதலை க.இராசேந்திரன்,

பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

*http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murd...<http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murder/>

செருமனியில் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் சீருந்து

ஜெர்மனியில்
 
 டிரைவர் இல்லாமல் ஓடும் கார்
பெர்லின், செப். 21-
 
கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வீசி தாக்கி விட்டு மீண்டும் திரும்புகின்றன. அதே போன்று டிரைவர் இல்லாமல் “ரிமோட் கண்ட்ரோல்” மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜெர்மனி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ. 25 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கார்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
 
இதில் பல்வேறு குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து சிக்னல்களை கண் காணித்து இயங்கும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் முன் பகுதியில் காமிரா மற்றும் லேசர் ஸ்கேனிங் கருவிகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
 
சோதனை ஓட்டத்தின் மூலம் இந்த காரின் செயல்பாடு பெர்லின் நகர வீதியில் நடத்தப்பட்டது. எதிர் காலத்தில் இக்கார் வீதிகளில் உலாவரும் என பெர்லின் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தலைவர் ராவுல் ரொஜாஸ் தெரிவித்தார்.