சனி, 2 ஜனவரி, 2021

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

  அகரமுதல


மார்கழி 18, 2051/சனவரி 2, 2021

அன்புடையீர் வணக்கம், 

பாணர் பொருநர் விறலியர் கூத்தரென

பாருலவித் திரிந்தவரை -மீண்டும்

பார் பார்க்க செய்ய வைக்க

பேரவையும் முனைந்ததிங்கே!

யாழிசைத்துப் பண்ணமைத்து

நாட்டியம் தன்னோடு கூத்தையும்

கலந்தமைத்து

இசைத்தமிழ்தனை வளர்த்த

பாணர் தம் வரலாற்றை

இலக்கியம் , தொல்லியல் சான்று வழி

ஆற்றுப்படுத்த முனைகிறார்

முனைவர் சு.பழனியப்பன்.

அவர்களின் தமிழருவியில் உளம் நனைக்க,

மார்கழி 18, 2051/சனவரி 2 ஆம் நாள் சனிக்கிழமை, கிழக்கு நேரம்  இரவு 8.30 மணிக்குக் கலந்து கொள்ளுங்கள்! 

http://tinyurl.com/fetna2020ik

2500 ஆண்டுக் காலப் பாணர்தம் தொன்று தொட்ட வரலாறு காண வாருங்கள்!

பேரவையின் முகநூல் இணைப்பில் விருப்பம் தெரிவித்துப்  பேரவை நிகழ்ச்சி குறித்த தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு   அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

https://www.facebook.com/fetnaconvention

இதற்கு முந்தைய இலக்கியக் கூட்டங்களின் காணொளியைக் கீழ்க் காணும் இணைப்பில் சென்று பார்க்கலாம்

https://www.youtube.com/playlist?list=PLQkQAGwIwW5SVO0XzO4LlP9jQMIOuXOzc





குவிகம் வினாடி வினா, 2021

 அகரமுதல


மார்கழி 17, 2051 / 01.01.2021 முதல்
மார்கழி 26, 2051 / 10.01.2021 வரை
குவிகம் வினாடி வினா
தேர்வுச்சுற்று இணையத்தில்
இறுதிச்சுற்று 04, 2021 / 17.01.2021

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

குவிகம் நடத்தும் இலக்கிய வினாடி வினாவிற்கு உங்கள் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.

முதல் பரிசு உரூ. 3000, இரண்டாம் பரிசு உரூ. 2000,

மூன்றாம் பரிசு உரூ.1000/-

விவரங்களும் விதிமுறைகளும்
http://ilakkiyavaasal.blogspot.com/2020/12/blog-post.html   
இணைப்பில்





வெள்ளி, 1 ஜனவரி, 2021

குவிகம் இணையவழி அளவளாவல் 03/01/2021

 அகரமுதல 

மார்கழி 19, 2051 03.01.2020

மாலை 6.30

குவிகம் இணையவழி அளவளாவல்

நூல்கள் வெளியீடு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்

கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்கோடு / Passcode: kuvikam123   
நிகழ்வில்
 இணைய”

https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09




செவ்வாய், 29 டிசம்பர், 2020

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா

 அகரமுதல



 


இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய விழா மார்கழி 12, 2051 / 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை அரவிந்து அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவானது தமிழ்ச்சங்க முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு இலக்கிய விழாவாக நடந்தது.

இந்த விழாவுக்குச் செயலாளர் மரு. பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

தொடக்கமாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துகளை இலதா சேசாத்திரி பாடினார். விழா அறிமுகத்தையும் வரவேற்பையும் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் கூறினார்.

மகளிர் அணித்தலைவி மரு. திருமதி மதுரம் அராவிந்தராசு அமரர் த. குழந்தை(ச் செட்டியார்) படத்தைத் திறந்து வைத்தார்.

சாத்தூர் மரு. த.அறம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

பார்த்திபன், சந்தக் கவிஞர் நா.வேலுச்சாமி துரை, இரா. இராம்மோகன், கே. செந்தில் குமார் முதலனாோர் உரை நிகழ்த்தினர்.

தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மை. அத்துல் சலாம் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் ஆ. இரவிச்சந்திர இராமவன்னி, அ. அபீபா அத்துல் சலாம், கா. இராமகிருட்டிண சுவாமிகள், பாத்திமா சின்னத்துரை, தமிழரசி உதயக்குமார் முதலானோர் அவரவர் துறைகளில் சிறந்து விழங்கியதற்காக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். விருதாளர்களைக் கு.விவேகானந்தன் அறிமுகம் செய்து வைத்தார்.

கு. இளங்கோவன் நன்றியுரை நிகழ்த்தினார்.  காளீசுவரி சுகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துணைத்தலைவர் மு.ச. கருணாநிதி, பொருளாளர் கா. மங்கள சுந்தரமூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சியில் பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. அதாயத்துல்லா, ஊடகவியாளர் முதுவை இதாயத்து, இலக்கிய ஆர்வலர் பெருமாள், கவிஞர் குத்துபுதீன் ஐபக்கு முதலானோர்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

– முதுவை இதாயத்து