இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த, இந்து ராம் மீது, தமிழக
காவல்துறை கூட்டுச் சதி, அத்து மீறி நுழைதல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமி என்பவர் சேரன்
என்டர்பிரைசஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து
பத்திரிக்கையை நடத்தி வரும் கஸ்தூரி அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் துணை
நிறுவனம், ஸ்போர்டிங் பாஸ்டைம் இன்டியா லிமிட்டெட் (எஸ்.பி.ஐ.எல்) என்ற
நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த எஸ்.பி.ஐ.எல் நிறுவனம், கிழக்குக்
கடற்கரைச் சாலையில் 400 ஏக்கர் நிலத்தை சர்வதேச தரத்தில் கோல்ஃப் மைதானம்
அமைப்பதற்காக வாங்குகிறது. எஸ்பிஐஎல் நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தில்
இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், 3 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்நஷ்டம்
தொடர்ந்து ஏற்பட்டதால் 24 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து,
இந்நிறுவனத்தை விற்க கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனம் முடிவெடுக்கிறது.
2004ம் ஆண்டு, கே.சி.பழனிச்சாமியின் சேரன் நிறுவனம், எஸ்.பி.ஐ.எல்
நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகிறது. 2004ல் இந்நிறுவனம்
வாங்கப்படும் போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த 400 ஏக்கர்
நிலத்தின் மதிப்பு, 30 கோடி ரூபாய். 2007ல் இந்நிலத்தின் மதிப்பு 300
கோடியாகிறது. 2007ல் திமுக பதவியேற்றவுடன், இந்து ராம், கருணாநிதியோடு
காண்பித்த நெருக்கம் ஊரறிந்தது. கருணாநிதியின் சொம்பாகவே ராம்
மாறிப்போனார். இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, 2007ல் சேரன்
நிறுவனத்திடமிருந்து 400 ஏக்கர் நிலத்தை 2004ல் வாங்கிய அதே விலைக்கு
தருமாறு மிரட்டுகிறார்கள் சிங்கள ரத்னா ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன்
ஆகியோர். 2005 முதல் சேரன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சி.ஜி ஹோல்டிங்ஸ்
நிறுவனத்துக்கும், ஃபேர் பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்துக்கும் சிவில்
வழக்குகள் நடந்து வருகின்றன.
இதன் நடுவே சேரன் நிறுவனம் மீது குற்ற எண் 776/2007 என்ற எண்ணில் சென்னை
மத்தியக் குற்றப்பிரிவில், போலி ஆவணம் தயாரித்ததாக ஒரு வழக்கு பதிவு
செய்யப்படுகிறது. அந்த வழக்கின் விசாரணைக்காக மத்தியக் குற்றப்பிரிவு
ஆய்வாளர் லாமெக் என்பவர் 25.02.2008 அன்று கோவையில் உள்ள சேரன் நிறுவன
அலுவலகத்தில் சோதனையிட வருகிறார். அன்று சோதனை நடத்தியவர் காலை 11 மணி
முதல் மதியம் 2.30 மணி வரை சோதனை நடத்தி விட்டு, எந்தப் பொருளும்
கைப்பற்றப்படவில்லை என்று மகஜர் ஒன்றை தயாரித்து, சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவன
கணக்காளர்கள் கருணாகரன் மற்றும் வினோத் குமார் ஆகியோரிடம் சாட்சிக்
கையெழுத்துப் பெற்று விட்டு, சென்று விடுகிறார்.
அன்று மாலையே 5.30 மணிக்கு மீண்டும் அதே அலுவலகத்துக்கு இன்ஸ்பெக்டர்
லாமெக் வருகிறார். இரண்டாவது முறை வருகையில் அவரோடு யூனிபார்ம் அணியாத
நான்கு நபர்கள் வருகிறார்கள். அவர்கள் யார் என்று கேட்டால், வழக்கறிஞர்கள்
என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.
வழக்கறிஞருக்கு போலீஸ் சோதனையில் என்ன வேலை என்று கேட்க முடியாமல்
அந்நிறுவனத்தினர் திகைத்து நிற்கிறார்கள். இந்த லாமெக் இன்ஸ்பெக்டர் இந்த
வழக்கிற்கு சம்பந்தமில்லாத, மற்ற விலை மதிப்புள்ள ஆவணங்களை எடுத்துச்
செல்கிறார்கள். அவர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்களுக்கு எவ்வித பட்டியலும்
தயாரிக்கப்படவில்லை. சோதனை என்ற பெயரில் இந்தக் கொள்ளை நடந்த பிறகு,
விசாரித்தால், வழக்கறிஞர் என்ற போர்வையில் வந்த அந்த நபர்கள் இந்து
நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அடியாட்கள் என்பது தெரிகிறது. இந்து நிறுவனம்
இப்படி ரவுடித்தனத்தில் இறங்கியதற்கான காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில்
அந்த 400 ஏக்கர் நிலம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் நிலம் தொடர்பான
ஆவணங்களை சமர்ப்பித்து எப்படியாவது நிலத்தை அபகரிக்க வேண்டும்
என்பதற்காகத்தான். அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நிலம்
எங்களுடையது என்று மோசடியாக வழக்கை ஜெயிப்பதற்காகத்தான்.
அந்த ஆவணங்கள் கிடைக்காததால் அவர்கள் அள்ளிச் சென்ற மற்ற ஆவணங்கள் என்ன
தெரியுமா ? ஃபேர்பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தோடு லண்டனில் உள்ள சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில் முன்பாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கான்ட்ராக்ட்
தொடர்பாக நடக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள்.
இந்து நிறுவனத்தின் ரமேஷ் ரங்கராஜன் மற்றும் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்தின்
பால் ரிவெட் ஆகியோர் அப்போது சென்னை மாநகர ஆணையாளராக இருந்த நாஞ்சில்
குமரனை 13.12.2007 அன்று நேராகச் சந்தித்து, இரண்டரை மணி நேரம் எப்படி அசல்
ஆவணங்களை கைப்பற்றுவது என்று விவாதித்தாக கே.சி.பழனிச்சாமி தன் புகாரில்
தெரிவிக்கிறார். நாஞ்சில் குமரன் இரண்டரை மணி நேரம் இவர்களோடு
விவாதிக்கிறார் என்றால் சும்மா விவாதித்திருப்பாரா… சென்னை மாநகரின்
கமிஷனராக எப்படியாவது ஆகி விட வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் தவம்
கிடப்பதன் பொருள் புரிகிறதா ?
நாஞ்சில் குமரன்
இந்த சட்டவிரோதச் சோதனையின் பின்னணியில் கருணாநிதியின் மகள் செல்வியின்
மருமகன் ஜோதிமணியிம் இருப்பதாக மனுதாரர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவுப்
போலீசார், குற்ற எண் 85/2012ல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120-B,
457 மற்றும் 395 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் 395
பிரிவுக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்து ராம், என்று அழைக்கப்படும் நரசிம்மன் ராம், இந்தியா மட்டுமல்லாமல்
உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ராம் ஒற்றை ஆளாகவே ராஜீவ் காந்தியின்
வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. போபர்ஸ் ஊழல்
வெளி வருவதற்கு இந்துவில் அப்போது பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் மற்றும்
ராம் பெரிய அளவில் காரணமாக இருந்தார்கள். இந்து நாளேடு வெளியிட்ட போபர்ஸ்
ஆவணங்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்தன.
இடது சாரி சிந்தனையாளராக பரவலாக அறியப்பட்ட ராமின் உண்மை முகம், இந்து
பத்திரிக்கையை தொடர்ந்து கையகப்படுத்தி வைத்திருப்பதில் அவர் கையாண்ட
தந்திரங்களின் மூலம் வெளியானது. ஒரு மிகப்பெரிய ஊழலை வெளிக் கொணர்ந்து
எப்படி உலகப்புகழ் அடைந்தாரோ, அதே போல, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,
மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க சிறிதும் வெட்கமின்றிப்
பணியாற்றினார் ராம்.
இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக தொடர்ந்து நீடிக்க, ராம் செய்த
தந்திரங்களை அவரது சொந்த சகோதரர் என் ரவி எப்படி வெளிப்படுத்துகிறார்
என்பதை அவர் வார்த்தையிலேயே பாருங்கள்.
When I had proposed 65 as the age of
retirement for a Director from any active role, it was with a view to
ensuring a smooth succession at the top leadership of the company and of
the newspaper while giving professionally qualified younger family
members an opportunity to move to the top most echeleons. That
suggestion was accepted by all concerned including the Editor-in-Chief
who convened an informal meeting of all the five editorial directors on
the same day i.e., 25th September 2009. An editorial
succession plan was also agreed upon as follows: N. Ram to step down
from any active role on May 4, 2010 and N. Ravi who had been the Editor
between 1991-2003 would take over as Editor-in-Chief; Malini
Parthasarathy would become Editor of The Hindu, Nirmala Lakshman would become Editor of the Sunday Magazine, features and Frontline and K.Venugopal, the Editor of Businessline. Ram
confirmed his commitment to retire and also this succession plan to me
not once but twice shortly after. When everyone took his word at face
value and in good faith, in the month of February 2010, he reneged on
his commitment to retire to my utter shock and dismay.
That act of breach of faith triggered a
whole series of unsavoury events which have taken an ugly turn and
which are all now in the public domain.
பதவி விலகுகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அந்த
வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய மோசடிப் பேர்விழி என்று ராமை அவர் சொந்த
சகோதரரே கூறுகிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராமின் அயோக்கியத்தனங்களை மேலும் வெளிப்படுத்துகிறார் ரவி.
In my book, the two major blots on the journalistic record of The Hindu
over the last forty years relate to its stand on the Emergency that was
in force between June 1975 and March 1977 and on the largest scam in
the history of independent India, the 2G scam. Under it’s then Editor,
G.Kasturi, The Hindu disgracefully extended tacit support to
and even collaborated with the Emergency regime. On the 2G scam, under
the Editor-in-Chief N. Ram, The Hindu shamefully acted as an apologist and mouthpiece of the prime accused A.Raja. It had only muted coverage of the 2G scam. While The Hindueditorially
asked for the resignations of Ashok Chavan, Suresh Kalmadi and
B.S.Yeddyyurappa, there was not even a whisper about A.Raja’s
resignation. On the other hand, two obliging interviews of A.Raja were
specially arranged to be done, not by the Correspondent covering
telecom, but shockingly by R.K.Radhakrishnan who used to cover matters
relating to DMK. After A.Raja’s resignation and arrest, a change in
stance reflecting a shameless and seamless U-turn is all too obvious
even for a school kid to miss.
இதற்கு பதிலளித்து என் ராம் விளக்கம் அளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு பதிலளித்த சகோதரர் ரவி கூறுவதைப் பாருங்கள்.
Dear Ram,
The Hindu of April 23, 2011 carried on
Page 15 of the Chennai edition your refutation of a report that was not
carried in The Hindu. Fairness demands that you publish my account of
the issue of the coverage of A. Raja relating to the Telecom licences
and 2G spectrum allocation that is given below:
At the meeting of the Board of
directors of Kasturi and Sons in January, I had specifically raised the
issue of the biased coverage of the 2G spectrum scandal. While Raja was
in office, even as evidence was mounting and there were widespread
calls for his resignation, The Hindu did not demand his resignation. On
the other hand, it functioned as an apologist for Raja and even on the
day of his resignation carried an interview with him on the front page,
with the transcript published inside. In this interview as well as the
one on May 22, 2010, there were no hard questions but only the obvious
ones designed to elicit ready, scripted answers. The entire coverage up
to the point of his resignation was tailored to make him look good.
This unexplained softness towards Raja
contrasted sharply with the coverage and editorial stand on other scams
including those relating to the Commonwealth Games, Adarsh Society and
land allotment in Karnataka. In those instances, The Hindu was quick to
demand the resignations of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa
even at a stage when the evidence was far less compelling than the
material that was in the public domain on the 2G scam before Raja
resigned. All the editorial outrage was reserved for the period after
Raja’s resignation.
With regard to the advertisement that
was published in The Hindu of May 22, 2010 along with his interview on
the front page with the full transcript inside, records in the Central
Government, particularly in the Ministry of Telecommunications relating
to the clearance of this particular advertisement and of some others
would go to establish by whom and how this advertisement was cleared.
Of all the newspapers that are said to have carried the advertisement,
only The Hindu published a friendly interview and not the others. People
in the media are aware that promotional advertisements of this type
unrelated to any occasion or to any specific announcements are issued as
much as rewards to the media as for publicity for the Minister. The
Minister’s intention to hugely reward The Hindu that had been so
friendly to him in its coverage was obvious. Publication in other
newspapers was just a cover, it would have been untenable for any
Ministry to have issued an advertisement to just one newspaper.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாள்தோறும் வட இந்திய ஊடகங்களில் குறிப்பாக
தி பயனீரில் ஆதாரங்கள் குவிந்த வண்ணம் இருந்தபோது, அந்த ஊழல் குறித்து வாய்
திறக்காமல் இருந்தது இந்து. இந்து நாளேடு, நடுநிலை தவறாமல் இருக்க
வேண்டும் என்பதில் எப்போதும் கறாராக இருந்து வந்தது. இந்த காரணத்தாலேயே,
இந்து நாளேடு பார்ப்பன நாளேடு என்ற பொருளில், கருணாநிதி இந்துவை மவுன்ட்
ரோடு மகா விஷ்ணு என்று அழைப்பார். ஆனால், அவர் மகளை மட்டும் மகாவிஷ்ணுவின்
அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்தார் என்பது வேறு கதை.
அப்படி இருந்த இந்து, ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைத்ததோடு அல்லாமல், அந்த
ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஆ.ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் பேட்டியை
ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிட்டது. ‘It's institutional aberration that needs intervention'.
அந்தப் பேட்டியை எடுத்தவர் இந்துவின் நீண்ட நாளைய மூத்த
பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்பவர். இவரை பத்திரிக்கையாளர்
என்பதை விட, கருணாநிதியின் ப்ரோக்கர் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும்.
கருணாநிதியின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என்று சொல்லிக்
கொள்வதில் இவருக்கு அலாதிப் பெருமை. இந்து நாளேட்டில், தொலைத் தொடர்புத்
துறைக்கென்று தனியான செய்தியாளர் இருக்கையில், இந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணனை
வைத்து அந்தப் பேட்டியை எடுத்து வெளியிட்டார் என்.ராம். அந்தப் பேட்டி
வெளியான ஒரு சில நாட்களிலேயே மத்திய தொலைத் தொடர்புத் துறையின் பல லட்ச
ரூபாய் மதிப்பிலான விளம்பரங்கள், இந்து நாளேட்டில் வெளி வந்தன. இந்தச்
செயலைச் செய்ததன் மூலம், ஒரு உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளராக
அறியப்பட்ட ராம், பத்திரிக்கைத் துறையின் வேசியாக மாறினார்.
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
2ஜி ஊழலில் ராசா தவறே செய்யவில்லை என்பது போல, ராசா மன்மோகன்
சிங்குக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எழுதிய கடிதங்களை ஒரு
முழுப்பக்கத்துக்கு வெளியிட்டு ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார்
என்.ராம்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி செய்த அத்தனை ஊழல்களையும், மறைத்து,
அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் ராம்.
கருணாநிதிக்கு அவ்வப்போது நடக்கும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வது,
அவர் எடுக்கும் திட்டங்களைப் பாராட்டி செய்தி வெளியிடுவது என, ஏறக்குறைய
ஆங்கில முரசொலியாகவே இந்துவை மாற்றினார் என்.ராம்.
இவற்றையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள்
விஷயத்தில் ராமின் சிங்கள சார்பை ஒரு நாளும் மன்னிக்க முடியாது. இலங்கைத்
தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில், ராம் சிங்களக் கைக்கூலியாகவே
செயல்பட்டார் என்றால் அது மிகைச் சொல் அல்ல.
நினைவு தெரிந்த நாள் முதலாகவே, என்.ராம், சிங்கள சார்பாகவே
செயல்பட்டார். அவரின் “சிறப்பான சேவையை” பாராட்டியே, இலங்கை அரசு,
ராமுக்கு லங்கா ரத்னா விருது வழங்கி 2005ம் ஆண்டு கவுரவித்தது. இந்த
விருது, இந்தியாவின் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத்
தக்கது. இப்படி தொடர்ந்து தனது சிங்கள ஆதரவு நிலையை கடைபிடித்து வந்த
ராம், இலங்கையில் அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்ட போது
கூட சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நிலைபாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்
தக்கது.
2010ல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பேட்டியை வெளியிட்டார் ராம். N. Ram interviews Sri Lanka's President Mahinda Rajapaksa
அந்தப் பேட்டியை எடுத்த ராம், இலங்கை அரசின் இனப் படுகொலையை
மறைப்பதற்காகவே இப்படிப்பட்ட ஒரு பேட்டியை வெளியிட்டார் என்று பரவலான
குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு தலைச் சிறந்த பத்திரிக்கையாளரான ராம்,
ராஜபக்ஷேவின் ஊதுகுழலாக செயல்பட்டார் என்று ரெட்டிஃப் இணையதளம் செய்தி வெளியிட்டது.
ஒருவர் தீவிரமான புலிகள் எதிர்ப்பாளராகவே இருக்கட்டும். விடுதலைப்
புலிகள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கட்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதர் கூட,
சிங்களப் படைகளின் படுகொலைகளை நியாயப்படுத்த முடியுமா ? அந்தத் தமிழ்
மக்கள் சிங்களக் காடையர்களின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாகி கையிழந்து,
காலிழந்து தவித்ததைக் கண்டு மனிதனாக உள்ள யாருக்காவது மனம் பொறுக்குமா ?
11 மே 2009 அன்று பிபிசியும், இந்து நாளேடும் வெளியிட்ட செய்திகளில் வேறுபாடுகள்
ஆனால் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி, ராஜபக்ஷேவின் செய்தித்
தொடர்பாளராகவே செயல்பட்டார் என்.ராம். போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்ததன்
மூலம், ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் ஆதர்சமாக இருந்த ராம், எப்படி இருக்கக்
கூடாது என்ற முன்னுதாரணமாக மாறிப் போனது சோகமான உண்மை. பெருமைக்கும்,
ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்கிறார் வள்ளுவர். தன்
செயல்களால் இழிவான சிறுமையில் வீழ்ந்து விட்டார் ராம்.
400 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக, ரவுடிகளைப் பயன்படுத்தி ஆவணங்களைக்
கொள்ளையடித்த குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருக்கும் என்.ராமுக்கு சிறிதாவது
மனசாட்சி இருக்குமென்றால், தற்போது இந்து பத்திரிக்கை தொடங்கியிருக்கும், The Hindu Centre for Politics and Public Policy
என்ற அமைப்பின் நிர்வாகக் குழுவிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய
வேண்டும். தொலைக்காட்சிகளில் தோன்றி பத்திரிக்கை உலக ஜாம்பவான் போல
நடிப்பதை நிறுத்த வேண்டும்.
இலங்கையில் அல்லலுற்ற மக்கள், தமிழரல்லாதவராகவே இருக்கட்டும். ஒரு
மக்கள் கூட்டமே, ஒரு இனமே அழிக்கப்படுகையில், அழிப்பவனுக்கு ஆதரவாக
நிலையெடுத்ததன் மூலம், ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் தகுதியை மட்டுமல்ல….
ஒரு உணர்வுள்ள மனிதன் என்ற தகுதியையே இழந்து விட்டார் ராம். அந்த மக்கள்
இட்ட சாபம் வயிரெறிந்து விட்ட சாபமல்லவா ?
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், பெரும் செல்வத்தையே தேய்க்கும் படையல்லவா ?
|