வெள்ளி, 29 மார்ச், 2019
வியாழன், 28 மார்ச், 2019
தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா
அகரமுதல
தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில்
தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா
பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019 காலை 10.00 முதல் 11.30 மணி வரை
இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர்
தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன்
முன்னிலை:
இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்)
சிறப்பு விருந்தினர்:
இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்)
நினைவுரை:
சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி நாராயண(ப் பிள்ளை):
அருண் வாசுதேவு கிருட்டிணன் (தலைவர் – தமிழர் பேரவை இளையர் பிரிவு, இயக்குநர் – இளமை 2.0)
தமிழுக்குக் கட்டடம் தந்த வள்ளல் உ.இராமசாமி (நாடார்) :
செல்வி. இலக்கியா மதியழகன் (என்யுஎசு உயர்நிலைப்பள்ளி மாணவி, உயர்நிலை 5)
மலாயாப் பெரியார் அ.சி.சுப்பய்யா:
அரு சுப்பு அடைக்கலவன் (நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக் கழக மாணவர் தலைவர் – என்டியூ தமிழ் இலக்கிய மன்றம்
புதன், 27 மார்ச், 2019
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
அகரமுதல
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.
எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது.
தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் குறித்த https://tgteelection.org/tamil/ இணையத்தளத்தின் வழியே பெற்றுக் கொள்ளலாம்.
நாடுவாரியான தேர்தல் ஆணையங்களின் தொடர்பு விவரங்கள்:
செருமனி : திரு இரா.பாசுகரன்
மின்வரி: berlintamil@web.de
பிரான்சு : திரு குமாரசாமி பராசா
மின்வரி: tgtefranceelection@gmail.com
பேசி: 07 53 31 85 45
சுவிசு: திரு ஞானசம்பந்தன் குகநாதன்
மின்வரி: swiss.ec@tgte.org
பிரித்தானியா : திரு சி.சிதம்பர(பிள்ளை)
மின்வரி: info@tgteelection.org
அமெரிக்கா திரு இராசன் மனோரஞ்சன்
மின்வரி: ranjan@3sg.com
தென்மார்க்கு – நோர்வே – சுவீடன் – பின்லாந்து: திரு எசு.கே.கதிர்
மின்வரி: kathirkar@hotmail.com
பேசி : 4591403739
ஆத்திரேலியா – நியூ சிலாந்து : திருவாட்டி இலட்சுமி உலோகதாசன்
மின்வரி: ausnzl.ec@tgte.org
கனடா : திரு சிவ இரத்தினசிங்கம்
மின்வரி: siva.mtg@gmail.com
தேர்தல் தொடர்பிலான நாடுவாரியான விவரங்களை அந்தந்த நாடுகளின் தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 26 மார்ச், 2019
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019
அகரமுதல
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR)
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ
[32 ஆம் பேரவைத்தமிழ் விழா,
சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா]
ஆனி – 19-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 4 – 7, 2019
மையக் கருத்து: கீழடி நம் தாய்மடி
திங்கள், 25 மார்ச், 2019
வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அகரமுதல
இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் ! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கொழும்பு, மார்ச்சு 23 இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட இறுதிப் போரில் 1,40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவை அனைத்துக்கும் அப் போதைய இலங்கை அதிபர் இராசபக்சேவும் முதன்மைக் காரணமாக இருந்தார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இலங்கை அரசுத் தரப்பு தகவலின்படி இறுதிப் போரின் போது 20,000 தமிழர்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை நாடாளு மன்றத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கை இனப்படுகொலைக் குற்றம் குறித்து முழுவதும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். இலங்கை அரசமைப்புச் சட்டம், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என்று கூறுவது தவறானது என்றார்.
நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா
அகரமுதல
நாள் : பங்குனி 14, 2050 வியாழன் 28-3-2019 மாலை 6 மணி
இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்
நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா
நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள்
இரண்டு தொகுதி
ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி
நிகழ்ச்சி நிரல்
இறைவணக்கம்
வரவேற்புரை
நிரலுரையாளர் :
கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி
தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்:
முனைவர் ஒளவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
நூல் பெறுபவர் :
திரு. கே.ஏ. நாராயணசாமி, இ.கா.ப.(ப.நி.)
சிறப்பு விருந்தினர் : பேராசிரியர் வ.வே. சுப்பிரமணியம்
மேனாள் முதல்வர், விவேகானந்தர் கல்லூரி, சென்னை .
நூலாசிரியர் கருத்துரை :
பெரும்புலவர் திரு. க.அ. இராமசாமி
நன்றியுரை: முனைவர் எசு.செயராமன்
மேனாள் முதல்வர், குருநானக்கு கல்லுரி,
வேளச்சேரி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
பொன்னேரி பிரதாபு
செயலாளர், நல்லறிவுக்கூடம்
96000 64311
தங்கள் நல்வரவை
ஆவலுடன் எதிர்நோக்கும்
இரா. இராமநந்தன்
இரா. விசய்
ஞாயிறு, 24 மார்ச், 2019
வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் – நிகழ்வு ஞாயிறு நடைபெறுகிறது
அகரமுதல
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2348 ஆம் நிகழ்வு
வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம்
வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு 24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது.
தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
கருத்துரை:
முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),
முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம் (துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம்),
முனைவர் ச.சு.இராமர் இளங்கோ (மேனாள் இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்),
பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன்,
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)