Last Updated :
சென்னை, அக். 14: ""இலங்கைத் தமிழர்கள் சமஉரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்'' என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை: ""இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொடி உயர்த்தினார் ஈழத் தந்தை செல்வா. "ஈழம்' என்ற எக்காள முழக்கம்; "சம்பாதனை' விரும்பிகளின் சதியினால் தூண்டிவிடப்பட்ட சகோதர யுத்தங்களாக மாறியது. இறுதியில், ஈன சுரமாக ஒழித்து, இன்றைய நமது கவலைக்குக் காரணமாயிற்று. அந்தக் கொடி கட்டாயம் மீண்டும் பறக்கும் - காந்தீய அறவழியில்; இலங்கை மக்கள் அனைவரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும். ஜெயலலிதாவுக்கு பதில்... இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வு பெற எந்த முயற்சி எடுக்கப்பட்டாலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காது. அங்கே பிரச்னை தொடர வேண்டும். தமிழர்கள் அவதிப்பட வேண்டும்; அதை வைத்துக் கொண்டு, இங்கே இவர் மத்திய, மாநில அரசுகளைக் குறைகூற வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். இலங்கைத் தமிழர் வாழ்வில் எப்படியாவது நிலையான ஒளிவீச வேண்டும் என்பது தான் நமது நிலை. அங்கே அகதி முகாம்களில் அல்லல் படுவோர் தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் நிம்மதியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகிறோம். இலங்கைத் தமிழர்களிடம் நான் எந்த அளவுக்கு அக்கறை உள்ளவன் என்பதை தமிழ் ஈழத்துக்காகப் போராடிய தந்தை செல்வா, சந்திரஹாசன், அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, சேனாதிராஜா உள்ளிட்ட பல தலைவர்கள் நன்கு அறிவார்கள். என் பொது வாழ்வுப் பயணத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்; போராட்டங்களில் கலந்து கொண்டேன்; சிறை சென்றேன்; ஆட்சியையே இருமுறை இழந்தேன் என்பதையெல்லாம் இலங்கைத் தமிழர்கள் நன்கு உணர்வார்கள். ஆனால், இதற்கெல்லாம் உள்நோக்கம் கற்பித்து ஜெயலலிதா வெளியிடும் அறிக்கைகள்தான் தமிழர்களை ஏமாற்றும் செயல்கள் என்பதை தமிழர்கள் நன்றாக அறிவார்கள். சிபாரிசுக் கடிதம் அல்ல... உஸ்பெகிஸ்தான் தூதருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எழுதிய கடிதம் சிபாரிசுக் கடிதம் அல்ல; அது ஒரு அறிமுகக் கடிதம்'' என்று விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*