புதன், 14 அக்டோபர், 2009

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 13 ஒக்ரோபர் 2009, 04:52.45 PM GMT +05:30 ]

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்) தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

தம்மை கப்பலில் இருந்து இந்தோனிசிய கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கப்பலில் இருந்து தகவல் தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட அலெக்ஸ் என்பவர், தாம் யார் எனத் தெரிந்தால் இலங்கை அதிகாரிகள் தமது மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தூம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே பயணித்தோம். இந்தநிலையில் இந்தோனேசிய கடற்படையினர் தம்மை கப்பலில் இருந்து கீழே இறக்கினால் தாம் கப்பலை வெடிக்கவைப்போம். என்றும், கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

(Photo AP)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக