தமிழக நா. குழுவின் வருகை ஜனாதிபதி மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றது - ரோஹித்த
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக நாடாளுமன்றக் குழுவினரின் விஜயம் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைசசர் ரோஹித்த போகொல்லாகம இன்று தெரிவித்துள்ளார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கை அரசின் உள்ளூர் மற்றும் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக உள்ளதை சர்வதேச சமுதாயம் பாராட்டுவதாகவும், எனவே, சர்வதேச இராணுவ நீதிமன்றிலோ அல்லது விசாரணைக் குழு முன்போ இலங்கைத் தலைவர்களை நிறுத்துவதோ அல்லது இராணுவ வீரர்களை நிறுத்துவதோ இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பான எந்தச் சட்ட ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடவில்லை என்றும், 2002 இல் இதுபோன்ற ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திடும் சந்தர்ப்பம் கிடைத்தபோதும், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதில் கையெழுத்திட மறுத்து விட்டார் என்றும் ரோஹித்த மேற்கொண்டு அப்பேட்டியில் கூறினார். ஆனால் அப்படி ஒன்று நடந்திருந்தால் புலிகள் இயக்கத் தலைவரை சர்வதேச சமுதாயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும் என்று கூறிய ரோஹித்த, இப்போது என்னவென்றால், இராணுவ நீதிமன்றில் இலங்கைத் தலைவர்களை நிறுத்த வேண்டும் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க என்றார். மேலும் இப்படிக் கூறியுள்ளதன் மூலம், நமது வீரர்களை அவர் அவமதித்துள்ளார் என்றார்.
கடந்த எட்டு தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் போகும் பாதை சரியானதே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது செயற்பாடுகளை மக்கள் ஏற்றுள்ளதையும் இது காட்டுகிறது. இதுவே தென் மாகாணத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது என்றார் அவர்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 117
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக