சனி, 17 அக்டோபர், 2009

ஜூன் 24 முதல் கோவையில்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு



சென்னை, அக். 16: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கோவையில் வரும் ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை (4 நாள்கள்) நடத்த தமிழறிஞர்கள் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக ஆய்வுக் கட்டுரைகளை தயாரிக்கவும், பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் எழுந்த கோரிக்கையை ஏற்கப்பட்டு, 2010-ம் ஆண்டு ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. இந்த முடிவைக் கூட்டம் வரவேற்கிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கோடை விடுமுறை நிறைவடையும் முன்பும், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு இந்தக் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது. அதற்கு இணங்க, வரும் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நான்கு நாள்களுக்கு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தலாம் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு: தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவிடம் தெரிவித்தபடி, முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதிக்கும், இந்திய அரசுக்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள தமிழர்களும் இத்தகைய மகிழ்ச்சியினைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை இலங்கை அரசு உருவாக்கிட வேண்டும்; அதற்கு இந்தியா ஆவன செய்திட வேண்டும் என்று கேட்டுகொள்ளப்படுகிறது. இலங்கையில் எல்லா மக்களும் இன உரிமை, மொழி உரிமை பெற்றிடும் வகையில் அந்த நாட்டில் அரசியல் தீர்வு காண்பது ஒன்றே சிறந்த வழி. இதை உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய, இலங்கை அரசுகள் முன்வர வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.கூட்டத்தில்... இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் க. அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஐம்பெருங்குழு, எண்பேராயம் துணைத் தலைவர் வா.செ. குழந்தைசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன், கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன், எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர்கள் அப்துல் ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

ஆனால், நாடாளுமன்ற தி.மு.க.க் குழு ஈழம் சென்று வந்த நாடகத்திற்கு துறை சார்நத கூட்டத்தில் நன்றி தெரிவிப்பதன் மூலம் நடுவணரசின் அமைப்பிற்குக் கட்சி்ச் சாயம் பூசியுள்ளதைத் தவிர்த்திருக்க வேண்டும். முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது தொடர்பான அறிக்கையைச் சிங்கள அரசு மறுத்துள்ள சூழலிலும் கண்ணி வெடி அகற்றுவது என்பது திட்டமிட்டுள்தை விட மேலும் கூடுதல் காலம் ஆகும் எனக் கூறி வதை முகாம்களில் இருந்து விடுவிப்பது என்பது இப்போதைக்கு இல்லை எனச் சிங்கள அரசாங்கம் அறிவித்துள்ள சூழலிலும் நடக்காத ஒன்றிற்குப்பாராட்ட நாணப்பட வேண்டுமல்லவா? இனிமேலாவது கட்சி வண்ணம் பூசப்படாத அளவிலும் மத்திய மாநில ஆளும் கட்சிகளைத் துதி பாடாத நிலையிலும் மாநாட்டு ஏற்பாடுகளில் கருத்து செலுத்துவார்களாக! மாநட்டின் ஓர் அமர்வாக உலக நாடுகளில் தமிழர்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் என்னும் தலைப்பி்ல் கட்டுரைகள் அளிக்க ஏற்பாடு செய்து சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டு உலகெங்கும் உள்ள மூத்த இனமான தமிழர்கள் உரிமையுடன் வாழவும் தமிழர் தாயகத்தைக் காணவவும் வழி வகுப்பார்களாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 2:47:00 AM

தமிழக அரசு 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்த உரிமையில்லை. அதே நேரம் உலகளாவிய தமிழ் மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தடையில்லை. அந்த அளவில் பெயரை மாற்றி மாநாடு நடத்துவது சரிதான். ஆனால், நாடாளுமன்ற தி.மு.க.க் குழு ஈழம் சென்று வந்த நாடகத்திற்கு துறை சார்நத கூட்டத்தில் நன்றி தெரிவிப்பதன் மூலம் நடுவணரசின் அமைப்பிற்குக் கட்சி்ச் சாயம் பூசியுள்ளதைத் தவிர்த்திருக்க வேண்டும். முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது தொடர்பான அறிக்கையைச் சிங்கள அரசு மறுத்துள்ள சூழலிலும் கண்ணி வெடி அகற்றுவது என்பது திட்டமிட்டுள்தை விட மேலும் கூடுதல் காலம் ஆகும் எனக் கூறி வதை முகாம்களில் இருந்து விடுவிப்பது என்பது இப்போதைக்கு இல்லை எனச் சிங்கள அரசாங்கம் அறிவித்துள்ள சூழலிலும் நடக்காத ஒன்றிற்குப்பாராட்ட நாணப்பட வேண்டுமல்லவா? இனிமேலாவது கட்சி வண்ணம் பூசப்படாத அளவிலும் மத்திய மாநில ஆளும் கட்சிகளைத் துதி பாடாத நிலையிலும் மாநாட்டு ஏற்பாடுகளில் கருத்து செலுத்துவார்களாக! மாநட்டின் ஓர் அமர்வாக உலக நாடுகளில் தமிழர்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் என்னும் தலைப்பி்ல் கட்டுரைகள் அளிக்க ஏற்பாடு செய்து சிக்கல்களுக்கான தீர்வுகளை

By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2009 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக