செவ்வாய், 13 அக்டோபர், 2009

அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இலங்கை செல்ல பரிந்துரை செய்வீர்களா? கருணாநிதிக்கு ராமதாஸ் கேள்வி

First Published : 13 Oct 2009 02:13:31 AM IST

Last Updated : 13 Oct 2009 04:18:41 AM IST

சென்னை, அக். 12: அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான மத்திய அரசின் அனுமதிக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்வாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
"இலங்கைப் பிரச்னையானாலும், வேறு எந்தப் பிரச்னையானாலும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்' என்று கூறுகிறார் முதல்வர் கருணாநிதி.
ஆனால், இலங்கைக்கு எம்.பி.க்களை அனுப்ப பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்த போதும், இலங்கைக்கு குழுவை அனுப்பிய போதும் இதனை கடைப்பிடிக்க முதல்வர் தவறி விட்டார். தனது கூட்டணிக் கட்சி எம்.பி.க்களை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்.
அவர்களும் அங்கே சென்று இலங்கை ராணுவ அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்ற முகாம்களை மட்டும் பார்த்து வருகிறார்கள். இது, இலங்கைத் தமிழர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது என்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்கள் குழுவினர் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள மக்கள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஒருவேளை அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்களை இணைத்துக் கொண்டு சென்றிருந்தால், இந்த அவல நிலையை தவிர்த்திருக்கலாம்.
பரிந்துரை செய்வாரா? அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு நீங்களும் (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்) போவது தானே? என்று முதல்வர் ஆலோசனை கூறியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறையும், ஆர்வமும் காட்டி வருகிற தேசிய கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மையாக விளங்குகிறது. அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயார்.
எங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்குமா? இலங்கை அரசிடம் பரிந்துரை செய்யுமா? "நமது கூட்டணி கட்சிகளுக்கு உதவியதைப் போல இவர்களுக்கும் உதவுங்கள்' என்று பிரதமரிடம் முதல்வர் பரிந்துரை செய்வாரா?
நாங்கள் தயார்... இலங்கையில் போரின் போது அடிக்கடி கொழும்பு சென்று வந்த இந்தியத் தூதுவர்கள் உடனடியாக கொழும்புக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். அங்கேயே முகாமிட்டு முள்வேலி முகாம்களை அகற்றி 3 லட்சம் தமிழர்களை விடுதலை செய்து திரும்பி வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கை சென்ற குழுவில் எங்களை எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை எந்ற கோபத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, இப் பிரச்னையில் முதல்வருடன் கரம் கோர்த்து செயல்படவும், அவரோடு ஓங்கிக் குரல் கொடுக்கவும் நாங்கள் தயார்'' என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்கள்

மருத்துவர் ஐயா வேண்டுமென்றே இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது. கலைஞர் எங்கே குழுவை அனுப்பினார்? வதை முகாம்களில் உள்ள தமிழர்களைக் காட்டி உலகெங்கும் பிச்சை எடுத்தும் உலக நாடுகள் உதவ மறுத்து விட்டதால் கூட்டுக் கொலைகார இந்தியத்தை இவ்வாறு ஒரு குழுவை அனுப்பி நற் சான்றிதழ் வழங்குமாறு சிங்களம் வேண்டியதால் இந்திய அடிமை,குடும்பத்தினர்க்குப் பதவிகள் தந்தமைக்கு நன்றிக்கடனாகப் போலியாக ஒரு குழுவை அனுப்பியுள்ளதாக இலங்கை இதழாளர்கள் தெரிவிப்பது இவருக்குத தெரியாதா என்ன? அப்படி மற்றொரு குழுவை அனுப்ப வேண்டுமென்றால் பன்னாட்டு அவைகளுக்கும் உலக நாடுகளுக்கும் சொன்ற மறுப்புதான் கிடைக்கும் என்று தெரியாதா? தெரிந்து கொண்டே வினாக்கணை தொடுத்தால் எப்படி அவர் இவரைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்? இவரும் நாடகம் ஆட விரும்புகிறாரா என்ன? வேண்டாம் அந்த ஆசை!இன உணர்வுடன் செயல்பட்டால் இன்றில்லாவிட்டாலும் நாளை விடியும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2009 8:07:00 AM

Tamil Eelam people, Tamilnadu is not your country/state. Stop commenting about our politicions and Tamilnadu/Indian governments. Go back to Sri Lanka and pose questions to your LTTE. Tamilnadu/India is happy that terrorist prabhakaran is dead now. At least I am happy, prabhakaran is not living anymore!

By tamizhan
10/13/2009 8:05:00 AM

**குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள்,..)! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/13/2009 7:44:00 AM

இந்த பன்னாட மு.க. ஒழுங்காக ஒற்றுமையாக தமிழினத்தை வழி நடத்தி இருந்தால் இன்று என்னுடைய சகோதர, சகோதரிகள் ஆயிரக்கனக்கானவர்கள் உயிரை விட்டிருக்கமாட்டார்கள் மற்றும் முள் கம்பி வேலியிலும் இருக்கும் நிலைமை வந்துஇருக்காது. ஒரு ஈனபிறவியிடம் என்ன தலைவா கேள்வி.

By Selva, Singapore
10/13/2009 7:30:00 AM

Q: How did India lose its influence on Sri Lanka? Part 3 In any event, Colombo was emboldened by the fact that the more it chipped away at India's more traditional role, the more New Delhi seemed willing to pander to its needs. Today, India stands more marginalized than ever in Sri Lanka. Its natural constituency-the Tamils-feels not only betrayed, but also looks at India as a colluder in the bloodbath. By Brahma Chellaney

By justice
10/13/2009 6:58:00 AM

Q: How did India lose its influence on Sri Lanka? (Continued) Part 3 Sri Lanka, for its part, practiced adroit but duplicitous diplomacy: It assured India it would approach other arms suppliers only if New Delhi couldn't provide a particular weapon system it needed. Yet it quietly began buying arms from China and Pakistan without even letting India know. In doing so, Colombo mocked Indian appeals that it rely for its legitimate defense needs on India, the main regional power. It was only by turning to India's adversaries for weapons, training and other aid that Colombo pulled off a startling military triumph. – By Brahma Chellaney

By justice
10/13/2009 5:45:00 AM

Q: How did India lose its influence on Sri Lanka? (Continued) Part 2 A “major turning point” in the war, as Sri Lankan navy chief Admiral Wasantha Karannagoda acknowledged, came when the rebels’ supply ships were eliminated, one by one, with input from Indian naval intelligence, cutting off all supplies to the rebel-held areas. That in turn allowed the Sri Lankan ground forces to make rapid advances and unravel the de facto state the Tigers had established in the island nation’s north and east. – By Brahma Chellaney

By justice
10/13/2009 5:43:00 AM

Q: How did India lose its influence on Sri Lanka? Part 1 A: Having been outmaneuvered by China's success in extending strategic reach to Sri Lanka in recent years, New Delhi got sucked into providing major assistance to Colombo, lest it lost further ground in Sri Lanka. Thus, India contributed to the Sri Lankan bloodbath through its military aid. From opening an unlimited line of military credit for Sri Lanka to extending critical naval and intelligence assistance, India provided sustained war support despite a deteriorating humanitarian situation there. – By Brahma Chellaney

By justice
10/13/2009 5:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக