திருமாவளவன் பொதுமக்களைச் சந்திக்க ராணுவம் மறுப்பு
இலங்கை தமிழர்களின் நிலமையை நேரில் ஆய்வுசெய்யவென அங்கு சென்றிருக்கும் தமிழ்நாடு நா.உ குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளமை அறிந்ததே. இக்குழுவில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவனும் அங்கம் வகிக்கிறார். நேற்று யாழ் நூலகத்துக்கு தமிழ்நாடு நா.உ குழுவை அழைத்துச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்குபற்ற அனுமதித்தனர். ஆனால் பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும் அங்கு வந்திருந்த மக்களுடன் பேசுவதற்கு திருமாவளவன் விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு ராணுவத்தினர் அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை யாழ் சென்ற இக்குழு தென்மராட்சியில் உள்ள ராணுவத்தினரின் தடுப்பு முகாம்களிலுள்ள மக்களைச் சென்று பார்க்கவில்லை. வன்னியிலிருந்து போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தென்மராட்சியிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நிலமையை நேரில் ஆய்வு செய்ய சென்ற அவர்கள் அந்த முகாம்களுக்கு நிச்சயம் சென்றிருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாட்டுக்குழுவை அந்த முகாம்களுக்கு செல்ல அனுமதிக்காத விதமாக நேற்றைய பயணத்தை யாழ் அரச அதிபர் மற்றும் ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 898
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக