வவுனியா அரசாங்க அதிபரை கடுமையாகச் சாடியுள்ள ரி.ஆர். பாலு
வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கடுமையாக சாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளளன. அரசாங்க அதிபரை கடுமையான சொற்களினால் பாலு திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லவேண்டி இடங்களை, மற்றும் பார்வையிடவேண்டிய இடங்களை ஏற்பாடு செய்ததில், சர்ச்சை தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தில் தலையீடு செய்ய வேண்டாம் எனக் கடுமையான தொனியில் சார்ள்ஸை, அவர் திட்டியுள்ளதாகவும், இதனால் சார்ள்ஸ் மிகவும் வேதனையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து மத்திய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சார்ள்ஸிடம் மன்னிப்பு கோரியதாகவும், பாலு அதனை பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
பிரதிநிதிகள் குழுவின் விருப்பத்திற்கு ஏற்றவாரே தாம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் பல இடங்களுக்குச் சென்று பார்வையிட ரி.ஆர். பாலு விரும்பவில்லை போலும். குறுகியநேரத்தில் வவுனியா சுற்றுப் பயணத்தை முடிக்க இவர் விரும்பியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 4922
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக