திங்கள், 12 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்: முதல்வர் கருணாநிதி



சென்னை, அக். 11: இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் வழி பற்றி தமிழக எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:இலங்கைக்கு அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், பிரதமரைச் சந்தித்து, அனுமதி பெற்று, சென்று பார்க்க வேண்டியதுதானே?எம்.பி.க்கள் குழுவுக்கு மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கப் போவதாக ஜெயலலிதா அறிக்கை விட்டார். அரசின் சார்பிலோ, கட்சியின் சார்பிலோ அல்லது நானோ அறிவிக்காத நிலையில், ஒரு பத்திரிகை செய்தியை வைத்துக் கொண்டு அறிக்கை விட்டதன் மூலம், அரசியலில் ஜெயலலிதா எப்படி அவசரப்படுகிறார் என்பது புரிகிறது.இந்தக் குழு இலங்கை சென்று வந்த பின் யாரிடம் அறிக்கை அளிக்கும் என ஜெயலலிதா கேட்டிருக்கிறார். எங்கள் கூட்டணியின் சார்பில், எங்கள் கட்சிகளின் செலவில் சென்றுள்ள குழு, எங்களிடம்தான் அறிக்கை அளிக்கும்.இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை களைய எப்படியோ முயற்சி செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனை கேலிக் கூத்தான நாடகம் என்கிறார் ஜெயலலிதா. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களிடம் அவருக்குள்ள அக்கறை நமக்கு தெரிகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் குழுவை அனுப்பாவிட்டால், உண்மைகளைக் கண்டறிய முடியாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியுள்ளனர். அந்த இயக்கத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் குழு பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து, கோரிக்கை வைப்பதை யார் தடுத்தார்கள்?அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், நாம் செய்கின்ற முயற்சிகளை கண்துடைப்பு நாடகம் என்று விமர்சனம் செய்வது சரியா?ராஜபட்சவின் விருந்தினர்களாக எம்.பி.க்கள் குழு சென்றிருக்கக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ராஜபட்ச விருந்தினராகச் செல்லவில்லை. அந்த நாட்டின் அதிபர் என்ற முறையில், அவருடைய அனுமதியோடு குழு சென்றுள்ளது என்பதுதான் உண்மையாகும்.இலங்கைத் தமிழர்கள் மீது எல்லோருக்கும் அக்கறை உண்டு. அவர்களுக்கு எந்த வகையில் உதவிட முடியுமென்று பார்க்க வேண்டுமே தவிர, இங்கேயுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் இன்னல் களைந்து விடுமா?எனவே, இங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், எதற்கெடுத்தாலும் எங்கள் மீது பாய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற என்ன வழி என்பதிலே கவனத்தைத் திருப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.இப்படி தமிழ்நாட்டில் நமக்குள்ளே மோதிக் கொண்டுதானே, இலங்கைவாழ் தமிழர்களிடையேயும் சகோதர யுத்தத்திற்கு வழிவகுத்து, இன்றைக்கு இந்த அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை இனியாவது சிந்திக்க வேண்டாமா என கருணாநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கருத்துக்கள்

அரசை மீறி எதிர்க்கட்சியினர் கோரிக்கையை மத்திய அரசு கேட்காது. அப்படியே கேட்டாலும் அது ஒரு சில கட்சியினரின் கோரிக்கையாகத்தான் இருக்கும். அரசின் கோரிக்கை என்பது ஆளுங்கட்சிக்கான கோரிக்கை யன்று. ஒட்டு மொத்த மக்களுக்கான கோரிக்கை. அதில் எல்லாக் கட்சிகளும் அடக்கம். அரசின் சார்பாக அனைத்துக் கட்சியினரும் ஊடகத்தினரும் தொண்டு அமைப்பினரும் செல்லும் குழுவை அனுப்புவதை யாரும் தடுக்கவில்லையே! ஈழத் தமிழர்களின் பாதுகாவலர்களான விடுதலைப் போராளிகளை எதிர்ப்போர் ஒன்று சேர்ந்து அவ்வாறு இலங்கையில் தமிழினப் பாதுகாவலர்களான விடுதலைப் போராளிகளை ஒழிப்போரைச் சந்திப்பதால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? சிங்கள அரசின் ஊது குழல்கள் உரிமைப்பண்களையாப் பாடப் போகின்றன? என்றாலும் மாண்புமிகு முதல்வர் கூறுவதுபோல் முதன்மையான எதிர்க்கட்சி ஈழத்தமிழர் நலனுக்காக ஈடுபாட்டோடு செயல் பட்டால் தமிழினப் பகைக் கட்சிகள் காணாமல் போய்விடும். அதை உணர மறுக்கும் தலைவி இருப்பதால் ஓநாய்களுக்குக் கொண்டாட்டம். ஈழத் தமிழர்களுக்குத் திண்டாட்டம்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2009 2:39:00 AM

குட்டை மரம் உயரமா தெரியணும்னா சுலபமான வழி உயர்ந்த மரத்தை வெட்டி வுடுரதுதான். எதிர்கட்சி காரங்க உணர்சியோட போராடினாங்க. அதுதான் சாட்டுன்னு புடிச்சு உள்ளே தள்ளி பயமுருத்திட்டு இப்ப மட்டும் அவுங்களை குத்தம்சொல்லிக்கொண்டு தான்மட்டும் ஏதோ செய்ரது மாதிரி நாடவம் ஆடினா இவரு செய்ரது பெரிசா தெரியுமுல்ல. ஆரம்பத்தில நாடகம் போட்டுத்தானே ஆட்சியை புடிச்சீங்க. கானகம் போர வயதிலும் அதுதான்னா சகிக்க முடியல சாமி.

By Cheter
10/12/2009 2:26:00 AM

nee engalukku uthavapporaya, kolai karapppaavi, neeya, unathu mahal thondaiman arumugaththai meet panna poyirukka

By m
10/12/2009 2:19:00 AM

Rajapakse has not allowed the Srilankan Tamil M.Ps to visit the detention camps of the Tamil victims. How did he allow the Indian MPs? And why?

By Ragavan
10/12/2009 1:35:00 AM

அம்மா இல்ல ஐயா ...யாராவது..அந்த மக்களுக்கு நல்லது பண்ணுங்கடா...இந்த ஜென்மத்தில் உங்களுக்கு புண்ணியமா போகும் ... யாரு செஞ்சாலும் உங்கள எல்லோரும் நன்றி உணர்வோட பார்போம் ...

By Poruki
10/12/2009 1:33:00 AM

**யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **குஞ்சரின் நெவிளடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/12/2009 1:25:00 AM

CM - You are an expert in drafting reports. No one can defeat you on that. We are fed up with reading reports. What we need is "action". Can you touch your conscience and say that you are genuine in your approach to the issue of Eelam-Tamils?

By observer
10/12/2009 1:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக