சென்னை, அக். 15: இலங்கை சென்று திரும்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் அறிக்கை அளிக்க முடிவு செய்துள்ளனர்.இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை நேரில் கண்டறிவதற்காக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் குழு அக்டோபர் 10-ம் தேதி இலங்கை சென்றது.5 நாள் பயணத்துக்குப் பிறகு புதன்கிழமை (அக்டோபர் 14) சென்னை திரும்பிய எம்.பி.க்கள் குழு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளித்தது.இக்குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ். அழகிரி, என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஆருண் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவுடன் புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்கள்.
=======================================================================
=======================================================================
தாயே! பேயே! உங்கள் ஆணைப்படி ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து விட்டு எஞ்சியவர்களையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளார்கள். நீரே இட்லரிணி! உரோமாபுரியுடன் வணிகம் கொண்டிருந்த தமிழர்கள் - உரோம் நாகரிகத்தினும் தொன்மை வாய்ந்த நாகரிகம் மிக்க தமிழர்களை - உரோம இலக்கியத்தினும் பண்பட்ட இலக்கிய வளம் கொண்டிருந்த தமிழர்களை வஞ்சகத்தால் வென்ற உம் சாதனை கண்டு இராசபக்சே பரிசுகள் அளித்துள்ளார்! எங்களுக்கும் ஏதேனும் பதவிப் பிச்சை போடுங்கள் அம்மா! இப்படிக்குத் தமிழ்நாட்டில் பிறந்து விட்டதாலேயே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாத மானங்கெட்டஉங்கள் அடிமைகள் ---- இப்படி எழுதி அனுப்புவார்களோ? வேறு என்னதான் எழுத முடியும்?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக