சென்னை, அக். 12: இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்கவே காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தனிப்பட்ட கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுவிக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற முறையில் பக்கத்து நாட்டு அதிபரால் அனுப்பப்பட்ட அழைப்பை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரிசீலித்திருக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்கு காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க உதவும் வகையில் இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்களை மட்டும் அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும்.
"போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜிநாமா செய்வார்கள்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தன்னிச்சையாக கைவிட்டது யார் என்பதற்கு முதல்வர் பதில் கூற வேண்டும் என்று நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவையெல்லாம் கலைஞரும் அறிந்ததுதான். ஆனால், நாய்க்குவாழ்க்கைப்பட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும். எனவே, கொலைகாரக் காங். உடன் இணைந்ததால் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்துச் சிங்களரிடம் உரையாடாமல், பிற நாட்டினர் அதிர்ச்சியில் உறைந்த காட்சிகளைக் கண்டும் கவலைப்படாமல் திமுக குழு கொலைகாரச் சிங்கள அரசு தனக்கு நட்பு என்றும் அதனுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஓலமிடுகிறது. இதைச் சொல்ல அங்குச் சென்றிருக்கத் தேவையில்லையே! ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்பாமல் பாகிசுத்தானையோ சீனாவையோ நம்பியிருந்தால் என்றோ விடுதலை பெற்றிருப்பர். இந்தியத்தை நம்பி அழிந்த அவர்களிடம் இந்திய சிங்கள உறவைப் பேச மானமுள்ளவனுக்கும் நேயமனமுள்ளவனுக்கும் மனம் வராதே! பதவி நலமும் (சுகமும்) பரம்பரைக்கே அது போக வேண்டும் என்றஎண்ணமும் எதையெல்லாமோ விட்டு விட்டு எதைஎதையோ பேசச் சொல்லும் போலும். பாவம் ஈழத் தமிழர்கள்!
10/13/2009 3:00:00 AM