ஞாயிறு, 11 அக்டோபர், 2009

உலகத் தமிழர் பிரச்னையாக மாறியுள்ளது :
பழ. நெடுமாறன்



இலங்கையில் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்கக்கோரி, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் (இடமிருந்து) மதிமுக பொதுச் செ
சென்னை, அக். 10: இலங்கை பிரச்னை இப்போது உலகத் தமிழர் பிரச்னையாக மாறியுள்ளது என்று தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். "இலங்கையில் தமிழின அழிப்பு' என்ற கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும். இதற்கு ஆதரவாக எலைன் சாண்டர் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை உலகளாவிய அளவில் நாம் திரட்ட வேண்டும். நமது தமிழ் இலக்கியங்கள் உலகாயத சிந்தனைகளுடன்தான் படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது. உலகின் மனசாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இதுவரை நடத்தியது முதற்கட்ட போராட்டம்தான். இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது உலகத் தமிழர்களின் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இஸ்ரேல், பிரிட்டனை விட இலங்கை ராணுவமயமாகி வருகிறது. 40,000 வீரர்கள் மட்டுமே இருந்த இலங்கை ராணுவத்தில் இப்போது 3 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இலங்கைத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கையில் எல்லாம் முடிந்த பின் இப்போது எம்.பிக்கள் குழு சென்றுள்ளது. அவர்கள் என்ன வந்து சொல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கைத் தமிழர்களுக்காக உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இலங்கைத் தமிழர் மீட்பு, பிரச்னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசார இயக்கம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ராமேசுவரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோரது தலைமையிலும், ஊட்டியில் எனது தலைமையிலும் இந்தப் பிரசாரப் பயணம் தொடங்கும். நிறைவாக 29-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும். மதிமுக பொதுச் செயாலாளர் வைகோ: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களும் ஜெனிவா மனித உரிமை பிரகடன விதிகளுக்கு மாறாக துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால், தமிழினத்தை ராஜபட்ச அரசு அழித்ததைப் பார்வையிட எம்.பி.க்கள் குழுவை அந்நாட்டு அரசு இப்போது அழைத்ததா? தமிழர்களின் புராதனமான ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழம் மட்டுமே ஒரே தீர்வு. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வை இப்போது சிதைக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படை கப்பல்களில் சீனர்கள் வருவதாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் தமிழகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன என்றார் வைகோ. பாமக நிறுவனர் ராமதாஸ்: இலங்கைக்கு சென்றுள்ள எம்பிக்கள் குழு, மட்டக்களப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக வீரகேசரி இதழின் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அங்குள்ள முகாம்களை எம்.பி.க்கள் சுதந்திரமாகச் சென்று பார்வையிட முடியாது. இப் பயணத்தின் முடிவு நாம் அறிந்தது தான். தமிழ் மக்களை அழித்த ராஜபட்சவுக்கு பாடம் புகட்ட தமிழ் ஈழத்தை மலரச் செய்வது ஒன்றே வழி. வழிதவறிச் செல்லும் நமது இளைஞர்களிடையே தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும். இலங்கைப் பிரச்னைக்கு ஆதரவாக தமிழக மக்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். காலம் நிச்சயம் மாறும் என்றார் ராமதாஸ்.

கருத்துக்கள்

திமுக, அதிமுக, காங்கிரசு கட்சிகளைக் கலைத்தால் தமிழர்கள் ஒன்றுபடுவார்கள். மக்கள் அக்கட்சிகளைப் புறந்தள்ளினால் இயல்பாகவே அக்கட்சிகள் கலைந்து விடும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/11/2009 2:54:00 AM

**அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **குஞ்சரின் நெவிளடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! தலைவரின் தனிச் சிறப்பு! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! U N A R V U K A L . C O M

By Sruthi
10/11/2009 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக