வியாழன், 15 அக்டோபர், 2009

காங்கிரஸ் கூட்டணி அரசில் நீடிப்பது ஏன்?: கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி



சென்னை, அக். 14: ""முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த கேரளத்துக்கு அனுமதி தரப்பட்ட கூட்டத்துக்கு தமிழகம் அழைக்கப்படவில்லை.இந்த நிலையில், தமிழக மக்களைப் புறக்கணிக்கும் மத்திய கூட்டணி அரசில் திமுக ஏன் இன்னும் அங்கம் வகிக்கிறது என்று முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:""முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதியன்று மத்திய அரசின் சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளாமல் தவற விட்டிருக்கலாம்.ஆனால், கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ""முல்லைப் பெரியாறு பகுதியில் பழைய அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவது தான் எங்கள் கருத்துரு'' என்றார்.இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, கேரள அரசு உடனடியாக தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளத் தொடங்கி விட்டது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் யாராவது கலந்து கொண்டார்களா? கலந்து கொண்டால், தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டதா? புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற குறிக்கோளை கேரள முதல்வர் தெரிவித்த பிறகு, அந்த மாநில அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு தனது அதிகாரிகள் மூலம் கண்காணித்ததா?யாரும் கலந்து கொள்ளவில்லை... இதற்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் தேசிய வன விலங்கு வாரியத்தின் நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.கேரளத்தின் சார்பில் முதன்மை வன உயிரின காப்பாளர் கலந்து கொண்டார். ஆனால், தமிழகத்தின் சார்பில் யாருமே கலந்து கொள்ளாதது வியப்பு அளிக்கிறது.கேரளத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு 20 நாள்கள் முடியும் வரை, தமிழக அரசோ, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்களோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று குற்றம்சாட்டியுள்ளார் ஜெயலலிதா.
கருத்துக்கள்

ஆமாம்! உடனே திமுக மத்திய அரசில் இருந்து விலக வேண்டும். அப்பொழுதுதான் அதிமுக மத்திய அரசில் இடம் பெற முடியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக