வெள்ளி, 16 அக்டோபர், 2009

ஊனமுற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் இனி கட்டணம் கிடையாதுபுது தில்லி, அக். 15: மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியுள்ளது: நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தி வரும் 981 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2,500 ஊனமுற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு முதல் இவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என்று அமைச்சகம் கூறியுள்ளது. சில நாள்களுக்கு முன்புதான் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் கல்விக் கட்டணம் சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் ஊனமுற்ற மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இதனை எலலா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். இலவசக்கல்வி அளிக்கும் மாநிலங்களில் அவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக