ஞாயிறு, 11 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 130: இடைக்கால அரசு!



ஈழத்தில் புலிகளுக்கும் இந்திய அமை திப் படையினருக்கும் உக்கிரமாகப் போர் நடந்து கொண்டிருந்த சூழ்நி லையில், சென்னையில் இருந்த கிட்டுவி டம் இந்தியாவின் ராஜதந்திரிகள் சமாதா னப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் உண்மையே. இவ்வகையான ஒரு பேச்சும், திட்டமும் கிட்டுவிடம் சொல்லப்பட்டு, அந்தத் தகவலை எடுத் துச் சொல்ல, கிட்டுவிடம் இருந்த போராளி ஜானி அனுமதிக்கப்பட்டார்பிரபாகரன் இருக்குமிடத்தை அறியும் ஒரு முயற்சியாக இந்த ஏற்பாடு அமைந்து விடுமோ என்ற சந்தேகத்தில், பலாலியில் இறங்கி, யாழ்ப்பாணம் சென்று, தாம தித்து, பின்னர் அமைதிப்படை மற்றும் உளவு சொல்லும் இதர அமைப்புகளின் ஆட்களுக்குத் தெரியாமல், வன்னிப் பகு திக் காட்டில் இருந்த பிரபாகரனைச் சந் திக்க, ஜானி சைக்கிளில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கிட் டுவின் சார்பில் என்ன தகவல் ஜானியால் எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரி யாமலே போயிற்றுஆனால் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சென்னையில் இயங்கி வந்த கிட்டுவுக்கு மேலும் நெருக் கடிகள் கொடுக்கப்பட்டு, இறுதியில் புலி களது அலுவலக இயக்கம் முடக்கப்பட் டது. இவ்வாறு அவர்களின் பத்துக்கு மேற்பட்ட அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. கிட்டுவைச் சுற்றியி ருந்த நூற்றுக்கணக்கான காயம்பட்ட, காயம்படாத புலிகளையும், கிட்டுவையும் போலீஸôர் வளைத்துக் கைது செய்த னர்இந்நிலையில், புலிகளது ஆதரவு இயக் கங்கள் ஆளுநர் ஆட்சியின் ஆலோசகர்க ளுக்கும், ராஜீவ் காந்திக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். கிட்டு தன் னுடையதும், தமது இயக்கத்தைச் சார்ந்த வர்களதுமான போராளிகளுக்கு அளிக் கப்பட்ட நெருக்குதல்களைக் கண்டித்து, அவர்களை விடுவிக்கும் வரை உண்ணா விரதம் மேற்கொள்ளப் போவதாக (10 அக்டோபர் 1988) அறிவித்தார்உண்ணாவிரதம் இருந்ததன் பேரில் திலீபன் மரணம் பற்றிய மிகப் பெரிய விமர்சனத்தை அமைதிப் படை ஏற்க வேண்டியிருந்தது. எனவே, சென்னை யில் கிட்டுவின் உண்ணாவிரதம், எந்த வகையான விளைவுகளை ஏற்படுத் துமோ என்ற எண்ணத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து இயங்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே, அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். பின்னாளில் கிட்டு பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டார்தேர்தலைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர்எல்.எஃப்.பின் மத்தியக் குழு உறுப் பினர் வரதராஜ பெருமாள் முதலமைச்ச ராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜபா ளையத்தைச் சேர்ந்தவர். தொழிலுக்காக யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆட்சிப் பொறுப் புக்கு வந்ததும் நிர்வாகத் தலைநகரான யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து, திருகோண மலையைத் தேர்ந்தெடுத்தது. இதனால் இருவிதமான வெறுப்புகளை அவர் சந் திக்க நேர்ந்தது. முதலாவது எந்த ஈழத்தை அவர்கள் முதன்மைப்படுத்தினார்களோ, அந்த ஈழப்பகுதியின் அடர்த்தியான மக் கள் வசிக்கிற யாழ்ப்பாணத்தை ஒதுக்கிய தால், அந்தப் பகுதி மக்களின் வெறுப் புக்கு ஆளானார்கள்அதேசமயம் இலங்கை அதிபர் ஜெய வர்த்தனாவும் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து திருகோணமலையை, வடக்கு- கிழக்கு மாகாண அரசின் நிர்வாக நகரமா வதைக் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புக்குக் கீழ்க்காணும் அம்சங்களும் காரணமாக அமைந்தனயாழ்ப்பாணத்தைவிட, திருகோணம லையை சிங்கள அரசுகள் எப்போதும் முக்கியக் கேந்திரமாக நினைத்தன. உல கின், ஏன் இந்தியாவின் இலக்கு கூடத் திருகோணமலையாகத்தான் இருந்ததுஇயற்கைத் துறைமுக வசதி, எண்ணெய்க் கிடங்குகள் அதிகம் கொண்ட, வெளி நாட்டு முதலீடுகளையும், ஒப்பந்தங்களை யும் அதிகம் ஈர்த்த நகரம். அதுமட்டு மன்றி, அமெரிக்காவின் ஒலிபரப்புத்தள வசதிகள் கொண்டதும் ஆகும்எனவேதான் தமிழர் தலைவர்களி டையே போடப்படுகிற ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும், வடக்கு-கிழக்கு மாகாணம் என்று குறிப்பிடப்படும் போது, திருகோணமலை நகரின் துறைமு கப் பகுதியும் அதன் நிர்வாகமும் மத்திய ஆட்சியின் அதாவது சிங்களரின் தனிப் பார்வையில் அமையும்படி பார்த்துக் கொள்ளப்படும். இந்நிலையில் சிங்களர்க ளும் இத்தலைநகர் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்எனவே, அதிபர் ஜெயவர்த்தனா ஆரம் பத்திலேயே இந்தியாவாலும், புதிய முதல மைச்சரின் நிர்வாகத் தலைநகர அறிவிப் பாலும் எரிச்சலடைந்தார்கள். அதிகாரங் களைக் கையளிக்கவும் மறுத்தார். இதன் காரணமாக, வரதராஜ பெருமாள் இவை ஒவ்வொன்றுக்குமாக திருகோணமலைக் கும் கொழும்புக்குமாக விமானத்தில் பறந்த வண்ணம் இருந்தார் என்ற விமரிச னமும் அப்போது எழுந்ததுஜெயவர்த்தனா இருந்தவரை, இடைக் கால நிர்வாகக் கவுன்சில் என்று அழைக் கப்பட்ட, வடக்கு-கிழக்கு மாகாண அர சுக்கு எவ்வித அதிகாரப் பொறுப்பையும் மனமுவந்து அளிக்கவில்லை. இதன் கார ணமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தாற்காலிக அரசின் நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் நிதியாதாரங்களுக்கு, இந் திய அரசையே அவ்வரசு நம்பியிருந்ததுயாழ்ப்பாணத்தில் அரசு அலுவலகத் தில் அமர்ந்து பணியாற்ற, இடைக்கால அரசை நடத்தியவர்களுக்கு ஓர் இடம் கூட வழங்கப்படவில்லை. அவர்கள் யாழ் மணிக்கூண்டுக்கு அருகே, அசோகா ஓட்டலின் எதிரே இருந்த கட்டடத்தில் இருந்து தங்களது அரசப் பணிகளை ஆற்றி வந்தனர்இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக வந்த ஜெனரல் வி.என். சர்மா, யாழ்ப் பாணத்தில் அமைதிப் படைப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். பலாலி ராணுவ முகாமில் தளபதிகளிடம் அவர் உரையா டுகையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க என மக்கள் தொண்டர் படை என்னும் அமைப்பை உருவாக்குவதன் அவசி யத்தை வெளியிட்டார். இந்த அமைப்பு அமைதிப் படைக்கு உதவியாக இருக்கும்சுமையையும் குறைக்கும் என்றார்கூடவே தமிழ்ப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையையும் போக்கும் வகையிலும் இது அமையும் என்று கருத் துத் தெரிவித்தார். இவரது கருத்து தில்லி யிலும் ஏற்கப்பட்டதுஇடைக்கால அரசு சந்திக்கும் பல்வேறு இன்னல்களுக்கிடையில், இந்த அமைப் புக்கு இலங்கை அரசின் உத்தரவாதம் பெறுவது அவசியம் என்று இந்தியத் தூதுவரிடம் குறிப்பிடப்பட்டதும், இந்த மக்கள் தொண்டர் படை பற்றிய விவரம், டிசம்பர் 1988-இல் இலங்கை அரசிதழில் வெளியிடப்பட்டதுஆனால் சட்டவடிவான செயல்பாட் டுக்கு இலங்கையின் காவல் துறை இயக்கு நர் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த அமைப்பு வடக்கு-கிழக்கு மாகாணக் கவுன்சிலின் பொறுப்பில் இருக்கும், அவ் வளவுதான். ஆனால் முடிவுகள் பராம ரிப்பு ஆகியன அமைதிப் படையைச் சார்ந்ததாக இருக்கும். எனவே, செலவும் அமைதிப் படையைச் சேர்ந்ததே. இந்த நிதிச்சுமைக்கு பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஐந்து மாதங்கள் கழித் துத்தான் இதற்காகும் செலவில் ஒரு பகு தியை இலங்கை அரசு ஏற்றதுஎனவே, இந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்பது என்பது கேள்விக்குறியானதுவடக்கில் எந்த இளைஞரும் இதில் சேர ஆர்வம் காட்டவில்லை. கிழக்கில் ஆள் சேர்க்கும் வேலைகளை ஆளும் கூட்ட ணியே செய்தது. கட்டாயமாக மாணவர் களையும், இளைஞர்களையும் இதில் சேர்த்ததாக பெரிய அளவில் குற்றச் சாட்டு எழுந்ததுஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் செயல்கள் வடக்குப் பகுதியில் கடுமை யான விமரிசனத்துக்கு உள்ளாயிற்று"அவர்களின் அதிகாரம் நிகழ்ந்த காலத் தில் நடந்த வன்முறைகள், அராஜகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சிலரின் தவறான போக்கே காரணம். பத்மநாபா என்ற ஒரு வர் மனிதநேயமுள்ளவராக இருந்தால் மட்டும் எல்லாம் நல்லபடியாக நடந்துவி டும் என எதிர்பார்க்க முடியாது. தவறுக ளுக்கு இயக்கத்தின் தலைமை பகிரங்க மாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற என் போன்றவர்களின் கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது' என்று தனது நூலில் (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக். 473) அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சி.புஷ்பராஜா தெரிவித்துள்ளார். (இவ்வாறெல்லாம் அவர் விமர்சித்த காரணத்தால், அந்த அமைப்பிலிருந்தே நீக்கப்பட்டார் என்ப தும் குறிப்பிடத்தக்கது.) இதைவிடவும் அதிகமாக "முறிந்த பனை' நூலிலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட் டுள்ளன. "இந்தியாவின் கைப்பொம்மை யாக இவ்வியக்கம் இயங்குவதைத் தவிர வேறு ஒரு வழியிலும் முன்னே போக முடியாத நிலைக்கே இவர்களை இட்டுச் சென்றது' என்று குறிப்பிடப்பட்டுள் ளதுஇதுதவிர லெப். ஜெனரல் சர்தேஷ் பாண்டேவும் தனது "அசைன்மெண்ட் ஜாஃப்னா' நூலில் இந்திய அமைதிப் படைக்கு இழுக்கு நேர்ந்ததற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் சமூக விரோதச் செயல்பாடே காரணம் என்று கூறியுள்ள அவர், தனது பதிவுகளில் கடும் சொற்க ளைப் பிரயோகித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக