வியாழன், 15 அக்டோபர், 2009

இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை



ராஜபட்சவுடன் (இடமிருந்து) கனிமொழி, டி.ஆர். பாலு, ஜே.எம். ஆருண்.
சென்னை, அக். 14: இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் உணவு, குடிநீர், மாற்று உடை இன்றி அவதிப்பட்டு வருவதாக தமிழக எம்.பி.க்கள் குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் கடந்த 10-ம் தேதி இலங்கைக்கு சென்றனர். 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினர்.முகாம்களின் நிலைமை குறித்து அக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களை பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்களை விடுதலை செய்து, சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், பருவமழை நேரத்தில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

இலங்கையில் உள்ள முள்வேலி முகாமில் தமிழர்கள்.

இவைகளையெல்லாம் இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இலங்கை அதிபர் ராஜபட்சயை சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை அவரிடத்திலே கூறியிருக்கிறோம். இதை மனிதாபிமான உணர்ச்சியோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். அந்த மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை, முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 567 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் "மெனிக் பண்ணை' முகாமில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 56 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது.இந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் எங்களை சூழ்ந்து கொண்டு பல்வேறு குறைகளைச் சொன்னார்கள். "உணவு சரியாக வழங்கப்படவில்லை; தண்ணீர் கிடைக்கவில்லை; குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை' என தெரிவித்தார்கள். தங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் கெஞ்சினர்.

சென்னை திரும்பிய பிறகு இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்த அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பிக்கிறார் எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு. உடன் எம்.பி.க்கள் கனிமொழி, என்.எஸ்.வி. சித்தன், ஆரூண், திருமாவளவன்.

பொதுவாக அவர்களில் பல பேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருப்பது தெரியவந்தது. தண்ணீர் இல்லாமையால் குளிக்கவும், மலம் கழிக்கவும் அவர்கள் சிரமப்படுவதைத் தெரிவித்தனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிரே, மிக நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை வழியெங்கும் கண்டோம்.
மேலும் ஓரிரு மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிக மோசமான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும். சதுப்பு நிலக் காடுகள் என்பதால் பருவமழை தொடங்கிய பின் அவர்கள் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கும்.அமருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்று நோய்த் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிகர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடும்.அரசு சில கட்டமைப்பு வசதிகளை செய்து தந்திருந்தாலும், இதுபோன்ற முகாம்கள் மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக் கணக்கில் லட்சக்கணக்கான மக்கள் தங்குவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.மொத்தத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பல்வேறு அவதிகளைச் சந்தித்து வந்த போதிலும், இலங்கை அரசு மீண்டும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் இரண்டு வார காலத்தில் ஏற்படுத்தும் என தோன்றுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

முழு அறிக்கையையும் வெளியிடுங்கள்.(ஏற்கெனவே நூறாயிரக்கணக்கான தமிழ்மக்களைக் கொன்றதற்காகவா? அல்லது நூறாயிரக்கணக்கான தமிழ்மக்களை அடைத்துக் கொடுமைப்படுத்துவதற்காகவா? அல்லது அவர்களுள் ஐம்பதாயிரம் பேருக்கு மேற்பட்டவர்களைக் காணாமல போன (கொல்லப்பட்டோர்) பட்டியலில் சேர்க்கச் செய்ததற்காகவா? எதற்கு இந்தப் பொன்னாடை? காக்கும் படை என்ற பெயரில் சென்று கொல்லும் படையாக மாறிய இந்திய அமைதிக் காப்புப் படையை வரவேற்க மாட்டேன் என்ற கலைஞரின் தம்பி தங்கையர் எதற்காக இப்பொழுது பொன்னாடை அணிவிக்கின்றார்கள்?) வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2009 2:47:00 AM

இனிமேலாவது மத்திய , மாநில அரசுகள். இன ,மத, அரசியல், கட்சி பேதமை பார்க்காமல் இதயப் பூர்வமான ,மனிதாபிமான நடவடிக்கைகளை இலங்கை தமிழர்களின் விசயத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என நம்புகிறோம்.

By Ibnusalih,abudhabi,uae.
10/15/2009 2:42:00 AM

Good ,atleast these MPs ahd gone and given the informations. The informations ar erefelcting the true nature only and now these MPS and T.N people and government can pressure Center to carryout the sppedy recovery works soon. As they rightly mentioned ,Tamils must be shifted to comfortable zones,certainly to their places so that they feel secure and how long lakhs of people can stay like that. All tehse coming to light with politica,back gtround as these MPS had visited. Instead commenting wrongly or seeing in negative way let us encourage them and anticipate them to act swiftly towards welfare of our Tamils. when going to other country and meeting head of the state ,honoring with shawl etc ,as a mere routine courtesey and not more than that and commenting badly on such incidents are bad. Just giving bad comments will not fetch any benefits. Think assertively and unite towards the welfare of tamils. Rahman/Raja/Karthikeyan Note We will be thankful if some of our friends

By rahman/raja/karthi
10/15/2009 2:36:00 AM

Good job KanimoZhi and co. All tamils should unite to uphold our culture and tradition and contribute to worlds peace and harmony and productivity. What happens in Sri Lanka is nothing but a genocide with vengence. Karunanithi and co should ask the central government to assume moral conciousness and further explain that seeking a practical solution(Tamil self rule) to a shear state sponsored political, diplomatic and physical brutality by the tamils in Sri Lanka should not be construed as a step that will destabilize India.

By Manoratnam
10/15/2009 2:31:00 AM

இலங்கைத்தமிழர் பிரச்சனை தொடர்பாக கலைஞர் மீது முன்பு விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது பல ஆக்கபூர்வமான செயல்களைச் செய்து வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டிருக்கின்றார். அரசியலுக்காக இதனை அவர் செய்தாலும் அகதிமுகாம் மக்களின் விடுதலைக்கு அது உதவுகின்றது என்பது இங்கு முக்கியம்.

By Ravi
10/15/2009 2:22:00 AM

For the Tamil KILLER Raja Pakakshe these Tamil MPS are honoring with Ponnadai. This is what you can expect from Karunanithi to save his power and FOOL the entire TAMIL WORLD. Plople should understand his cunningness. I think Karunanidhi is Thanking Rajapakshe for killing all tamil people and saved him from LTTE and their supporters. Pal

By PAL
10/15/2009 2:13:00 AM

I would have a put a garland of bombs to that chimp in colombo,,fkers I am a tamil, stupid tamil mps, you have no shame..

By madrasrowdy
10/15/2009 2:01:00 AM

I would have fkingSmack the shytout of the punkazzchimp stupid gayfagggotsob rajapakshe if he said anything to my face, fkers how can you shake the hand of a tamil kller or smile at that sinhala fkhead, stupid tamil guys be a man first. You think rajapakshe would have the guts to talk infront of leader prabhakaran, he would run away as soon as he saw the tiger the real tamil leader prabhakaran. man what a frikkinstupid bunch of MPs from india.. and I am from Chennai. bunch oflosers...

By madraspokkiri
10/15/2009 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக