சனி, 17 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 138:
வல்வெட்டித் துறை படுகொலை!



இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம் வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும், அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும் உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன. பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப் பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த மோதல்தான். இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள் இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச் சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர், வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊரில் உள்ள ஆண்களும், பெண்களும் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் மினி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஊரடங்கு காரணமாக வீட்டிலும், மற்ற இடங்களிலும் முடங்கிக் கிடந்தவர்களை வீட்டினுள் புகுந்தும், அவர்களை வெளியே இழுத்து வந்து போட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அங்கு முகாமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டு மருத்துவக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஊர்ச் சந்திப்பில், பொது இடங்களில் கும்பல், கும்பலாக சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சிதறிக் கிடக்க, அவர்களது உடல்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், "அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற மோதலில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்; புலிகளின் தாக்குதல் விளைவாக வீடுகளும், கடைகளும் சேதமடைந்தன. மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்தி ஒலி, ஒளி பரப்பானதுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இச் சம்பவம் பூதாகரமான நிகழ்ச்சியாக மாறியது எப்போது என்றால் இந்தப் படுகொலைகளும், சேதங்களும் குறித்து லண்டன் நாளிதழான "த சன்டே டெலிகிராப்' 13.8.1989-இல் அதன் தில்லி நிருபர் ஜெரிமி காவ்ரன் மற்றும் லண்டன் வெளியீடான "ஃபைனான்ஸியல் டைம்ஸி'ன் தில்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ, இந்தியப் பத்திரிகையான "த ஸ்டேட்ஸ்மன்' (18-8-1989) நாளிதழ்களில் தலையங்கம் மற்றும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாகவே வெளியுலகுக்குத் தெரியவந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் (24.8.1989) தலையங்கம் தவிர, அதன் கொழும்பு நிருபர் ரீட்டா செபஸ்தியான் அரைப்பக்க அளவில் மிகப்பெரிய செய்திக் கட்டுரை ஒன்றினை ‘ஐடஓஊ ஹற்ழ்ர்ஸ்ரீண்ற்ண்ங்ள் ர்ய் ஸ்ரீண்ஸ்ண்ப்ண்ஹய்ள்: ஙஹள்ள்ஹஸ்ரீழ்ங் ஹற் டர்ண்ய்ற் டங்க்ழ்ர் என்ற தலைப்பில் வெளியிட்டு அதிர்ச்சியூட்டியிருந்தார். ஹிந்து நாளிதழ் (2.8.1989) இந்தச் செய்தியை ஆறே வரிகளில் புலிகள் -அமைதிப் படை மோதலில் 23 பேர் மரணம் என்று தெரிவித்தது. அதே பத்திரிகையின் தில்லி நிருபர் கே.கே. கட்டியால் 12.8.1989 தேதியிட்ட செய்தியில், மோதலின்போது புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்று செய்தி வெளியிட்டார். ஹிந்து நிறுவனத்தின் துணைப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனில் (ஆக. 19-செப்.1, 1989) ஈரோஸ் இயக்கத் தலைவர் வி. பாலகுமார் கூறியதாக வந்த செய்தியில், மோதலில் பொதுமக்கள் 70 பேருக்கு மேல் இறந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும், அங்கு நேரில் சென்று பார்த்தபோது அந்த நிகழ்ச்சி படுபயங்கரமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாகவும், அதன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியன் வெளியிட்டிருந்தார். மேற்கண்ட செய்திகளின் நறுக்குகள் (ஸ்ரீன்ற்ற்ண்ய்ஞ்ள்) மூலம் அந்தந்தப் பத்திரிகைகளின் பார்வைகள் வெளியாகின்றன. ஆனால், அச் செய்திகளின் மூலம் தெரியவருவது என்னவென்றால், உண்மைகளை அவர்களால் மறைக்க முடியவில்லை என்பதுதான். இந்த நிகழ்வுகளின்போது நடந்த, தாக்குதலில் மக்கள் நலன் புரியும் குழுவின் செயலாளராக இருந்து வந்த ஆனந்தராஜாவும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவரைக் குற்றுயிரும், குலையுயிருமாகக் கொண்டுவந்து மருத்துவமனையில் போடப்பட்டபின்னர், அமைதிப் படைத் தளபதிகளான பிரிகேடியர் சங்கர் பிரசாத், கர்னல் அவுஜியா, கர்னல் சர்மா மற்றும் டாக்டர் கேப்டன் சவுத்ரி முதலானோர் அவரை நன்கு அறிந்திருந்த நிலையிலும், ஒப்புக்கு மட்டுமே அனுதாபம் தெரிவித்து விசாரித்தனர். முடிவில் அவர்கள் ஒவ்வொருவரும், ""விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு மற்றும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டுங்கள். நீங்கள் இதற்காகப் பயப்பட வேண்டாம், உங்கள் முகத்தில் கருப்புத் துணி போர்த்திதான் நாங்கள் அழைத்துச் செல்வோம், அதன்பின்னர் நீங்களும், உங்கள் குடும்பமும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி தருகிறோம்'' என்று வற்புறுத்தியும் அவர் மசியவில்லை. பின்னர் மறுநாள் மயக்கம் தெளிந்ததும் "காங்கேயன்துறை முகாமுக்குப் போவதைத் தவிர்க்க விரும்பினால் உண்மைகளைச் சொல்லி விடுங்கள்' என்று மிரட்டினர். (காங்கேயன்துறை முகாம் என்பது கொடிய சித்ரவதை முகாம் ஆகும்.) அப்படியும் அவர் பதிலளிக்கவில்லை. இதனிடையே அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், இலங்கையின் இந்தியத் தூதுவர் எல்.எல். மெஹ்ரோத்ராவுக்கு (அதுவரை தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் விடுவிக்கப்பட்டிருந்தார்) வல்வெட்டித்துறைக் கொடுமைகள் குறித்து எழுதி, "இந்த அவலங்களை இந்தியப் பிரதமருக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வகையான சம்பவங்கள் உலகில் எங்குமே நடக்கக் கூடாது என்றும் சொல்லுங்கள்' என வற்புறுத்தி எழுதினார் (21.8.1989). அதேபோன்ற கடிதம் ஒன்றை, இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் எழுதினார். தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு ரகசியமாக வந்து தமிழகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்களைச் சந்தித்து வல்வெட்டித் துறை படுகொலைச் சம்பவத்தை விவரித்தார். இதில் முகம் கொடுத்து ஒத்துழைத்த வட இந்தியத் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தச் சம்பவத்தை "இந்தியாவின் மயிலாய்' என்று விவரித்து, இந்தக் கொடுமைகளை நூல் வடிவில் அதாவது, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தனது முன்னுரையுடன் வெளியிட்டார். இதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்து, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் செய்தி பரவி, அமைதிப் படை செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவிலும் அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள் பொய்ச் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி நிலையச் செய்திகளைக் கண்டித்து "டிவி பெட்டி உடைக்கும்' போராட்டத்தை நடத்தினர்.நாளை: வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குற்றச்சாட்டு!
கருத்துக்கள்

India destroyed tamils life, Indian Army was useless army and they killed tamils people. Indian army can't fight against Pakistan or China. Indian Army trained to kill only civilians.

By yoga
10/17/2009 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக