கல்பெட்டா (கேரளம்), அக். 11: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் அம்புகுட்டி மலையில் மீண்டும் புதிய கற்காலக் கோடரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் தொல்லியல்துறை அம்புகுட்டி மாவட்டத்தில் சமீபகாலமாக அகழ்வுப் பணியை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் எடக்கல் குகைக்கு அருகில் புதிய கற்காலக் கோடரி கிடைத்துள்ளது. இந்தக் கோடரி 5 அங்குல நீளமும், 3 அங்குல அகலமும், 550 கிராம் எடையும் கொண்டுள்ளதாக கேரள மாநில தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர். வயநாடு மாவட்டம் அம்புகுட்டி மலையில் நூறாண்டுகளுக்கு முன்னதாக ஒரு புதிய கற்காலக் கோடரி கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கோடரியை ஃப்ரெட் ஃபாவ்செட் என்ற போலீஸ் அதிகாரி கண்டெடுத்தார். இதையடுத்து நடைபெற்ற அகழ்வுப் பணியின் போது புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கருவிகள் கிடைத்தன. ஆனால் கோடரி மட்டும் கிடைக்காத நிலையில் தற்போது கிடைத்துள்ளது என்றும் தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
By anbumani
10/11/2009 6:08:00 PM
Clearly say ancient Tamil's evidence...
dont just say stone age axe!