இந்த உண்மையை உரத்துக் கூறுங்கள். இரும்பு மண்டையும் மரச் செவிகளும் உடையவர்களைப் புரிய வையுங்கள். உண்மைச் செய்திகளை வெளியிடும் தினமணிக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தனி தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு: தமிழ்ச்செல்வன்
First Published : 01 Aug 2011 01:44:35 PM IST
திருவண்ணாமலை, ஆகஸ்ட் 1: இலங்கை பிரச்னைக்கு தனி தமிழ் ஈழமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார்.
சங்கத்தின் மாவட்ட மாநாடு திருவண்ணாமலையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. இதில் ச.தமிழ்ச்செல்வன் பேசியது:
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த 1975-ல் அவசர நிலையை எதிர்த்து உருவான இயக்கம். மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் பண்பாட்டு யுத்தத்தை முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்த்து குரல் தரும்.
இலங்கையில் தமிழர் பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்கு தனி தமிழ் ஈழமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்றார் அவர்
மாவட்டத் தலைவர் எஸ்.கருணா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் கவிஞர் ஆரிசன் செயலறிக்கையும், பொருளாளர் புலவர் அண்ணாமலை வரவு-செலவு அறிக்கையும் தாக்கல் செய்தனர்.
கவிஞர் ஜூவி, கலை இலக்கிய பெருமன்ற மாநிலச் செயலர் பெ.அன்பு, தமிழ்ச்சங்கத் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்: தலைவர்-மு.பாலாஜி, செயலர்-ஆரிசன், பொருளாளர்-அண்ணாமலை, துணைத் தலைவர்கள்-லோகநாதன், முருகன், சேகர், துணைச் செயலர்கள்-சிவக்குமார், கோவிந்தன், நமச்சிவாயம், 26 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக