புதன், 3 ஆகஸ்ட், 2011

அதிகாரத்தினருக்குப் பத்ம விருதுகள் கிடையா: மத்திய அரசு முடிவு

கலைமாமணி முதலான விருதுகள் வழங்குவதில் இதே போன்ற முடிவைத்தமிழக அரசும் எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அதிகார வர்க்கத்தினருக்கு பத்ம விருதுகள் கிடையாது:
மத்திய அரசு முடிவு

First Published : 02 Aug 2011 05:39:46 PM IST


புதுதில்லி, ஆகஸ்ட் 2: இன்று மக்களவையில் ஏற்பட்ட விவாதத்தின்போது, அரசாங்க அதிகாரிகள், அரசு சார்ந்து இயங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்ம விருதுகளுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியவர்களைப் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவினை அரசு எடுத்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பத்ம விருதுகள் பெறுவதற்கான தகுதி வரம்பில் அரசு ஊழியராகப் பணிசெய்பவர்கள் வரமாட்டார்கள் என்றார்.அப்படி அரசு அதிகாரிகள், அரசுக் குழுக்கள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களின் பணிக்கு அங்கீகாரமும் ஊக்கமும் கொடுப்பதாக இருந்தால் அதற்கு, பிரதமரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரிந்துரைப்போம் என்றார். இத்தகைய விருதுகள் 2007 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாநில, மத்திய அரசுப் பணியாளர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர் என்றார் அவர்.  
கருத்துகள்

அதிகார வர்கங்களுக்கு மட்டுமல்ல அரசியல் சிபாரிசுகளுக்கும் கொடுக்க கூடாது.இதுவரை பெற்றவர்களில் பெரும்பகுதி அரசியல் வாதிகளின் அடிவருடிகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக