First Published : 02 Aug 2011 01:16:07 AM IST
Last Updated :
காரைக்குடி, ஆக.1: காரைக்குடி தமிழ் இசைச் சங்கம் சார்பில் மாநில அளவிலான இசைப் போட்டிகள் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவுள்ளன. காரைக்குடி மகரிஷி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, பரத நாட்டியம் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். வாய்ப்பாட்டு, வீணை, பரத நாட்டியம் ஆகியவற்றில் பெருநிலையில் பங்கேற்பவர்கள் 16 முதல் 25 வயதுக்குள்பட்டவராகவும், இளநிலையில் பங்கேற்பவர்கள் 15 வயதுக்குள்பட்டவராகவும், மிருதங்கப் போட்டியில் பங்கேற்பவர்கள் 15 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.இப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ரூ.20 மணியார்டர் மூலமோ அல்லது நேரிலோ செலுத்தி, விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 13.8.2011. விண்ணப்பங்களை வி.நீலாயதாட்சி, இசைப் போட்டிக் குழுத் தலைவர், 3, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், 8-வது வீதி, காரைக்குடி- 630 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.தொடர்புக்கு: தொலைபேசி எண் 04565- 230911, 94861 01905. இத் தகவலை தமிழ் இசைச் சங்கத்தின் செயலரான வி. சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக