காலியான பெருங்காயக் குப்பியால் என்ன பயன்? ஈழத்தமிழர்களுக்கு இவ்வாறாகப் பண உதவி செய்யும் நிலைக்கு ஆளாக்கியதில் முதன்மைப் பங்கு யாருக்கு? கட்சி ஊர்வலத்தைப் பத்து மணிநேரம் நடத்தத் தெரிந்த தலைவர்களுக்கு ஈழத்தமிழர்கள் படுகொலைகளைத் தடுக்க நாட்டு மக்களை ஒன்றுகூட்டத் தெரியவில்லையே! தெலுங்கானாப் போராட்டத்தில் காங்.ஐயும் ஈடுபடச் செய்து விட்டனர் தெலுங்கானா மக்கள். இங்கோ காங்.கிற்குக்கால் கை பிடித்து விட்டு உண்மையை உணர்த்தத் தவறிவிட்டு இனப்படுகொலைகளுக்குக் காரணமாக ஆகிவிட்டனர். காலம் கடந்த கால வரலாற்றைச் சொல்லிக் கொணடிருக்காது. எனவேதான் வால்மீகியை முனிவராகப் பார்க்கின்றதே தவிர கொள்ளைக்காரனாகப் பார்க்கவில்லை. எட்டப்பனும் கருணாவும் வஞ்சகர்களாகப் பார்க்கப்படுகின்றனரே தவிர முந்தைய ஈகையு்ம் வீரமும் போற்றப்படுவதில்லை. ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் அதற்கு முன்பு என்னதான் நல்ல செயல்கள் புரிந்திருந்தாலும் வரலாற்றில் இருந்து துடைத்து எறியப்படுவார்கள்! இஃது உறுதி! உறுதி! உறுதி!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கைத் தமிழருக்கு தி.மு.க. ஆட்சிதான் அதிகம் செலவு செய்தது: கருணாநிதி
First Published : 04 Aug 2011 12:26:14 AM IST
சென்னை, ஆக. 3: இலங்கைத் தமிழர் நலனுக்காக அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில்தான் நிறைய செலவு செய்யப்பட்டது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 5,544 பேருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி அரசுக்கு மாதம் ரூ.55.44 லட்சம் செலவாகும். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இலங்கை தமிழ் மக்களுக்காக முதல்கட்டமாக 2008-ல் ரூ.10 கோடி மதிப்பில் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி அங்கு விநியோகிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 2009-ல் ரூ.6.45 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள், துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக ரூ.7.5 கோடி மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய ரூ.25 கோடி தமிழக அரசின் சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது. இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங்கள் வழங்கியது, ஈமச் சடங்குக்கான உதவித் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும், பிறகு ரூ.2,500 ஆகவும் உயர்வு, முகாம்களுக்கான ஆண்டு செலவு 2008-09-ல் ரூ.48.58 கோடியாக உயர்வு ஆகியவை தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டன. அகதி முகாம்களை சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.16 கோடி நிதி கோரி அது கிடைக்காத நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009-ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின்னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை நடந்தன. எனவே இவற்றை ஒப்பிட்டால் இலங்கைத் தமிழர் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிகம் செலவிடப்பட்டது எனத் தெரியும். நிலப் பறிப்பு விவகாரம்: அ.தி.மு.க.வினர் மீது வரும் நிலப் பறிப்பு புகார்கள் காவல் துறையினரால் சமரசம் செய்து வைக்கப்படுகின்றன. ஆனால் நிலத்தை உண்மையாக விற்றவர்கள் தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் அதைப் பெரிதுபடுத்தி வழக்குப் பதிவுசெய்து கைது செய்கிறார்கள். மண்ணெண்ணெய் விலை: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவர்கள் செய்த சாதனைகளில் ஒன்றாக, ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.11.40-ல் இருந்து ரூ.13.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்குவோம் என தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார். சிறுதாவூர் நிலம் தொடர்பாக நீதிபதி சிவசுப்ரமணியம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த நிலத்தை மீட்டு தலித்துகளுக்கு வழங்க அவர் முன்வர வேண்டும். சன் தொலைக்காட்சி நிர்வாகி சக்சேனா மீது காவல் துறையினரே தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது, புகார்தாரர்கள் கூறும் தகவல்களின் மூலம் தெரிகிறது. ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது இதன் மூலம் உண்மையாகிறது என கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துரைகள்
This man will never reform. His crookedness is so imbibed in his blood that despite his daughter in jail, his party men going to jail everyday, he still thinks he can disturb the ruling party. The people in Tamil Nadu should condemn this man. It is unfortunate that he still claims to be a politician. Karunanidhi is an example of a bad politician that TN has seen post independence.
கருத்துரைகள்
This man will never reform. His crookedness is so imbibed in his blood that despite his daughter in jail, his party men going to jail everyday, he still thinks he can disturb the ruling party. The people in Tamil Nadu should condemn this man. It is unfortunate that he still claims to be a politician. Karunanidhi is an example of a bad politician that TN has seen post independence.
By chandru mani iyer
8/4/2011 1:49:00 PM
8/4/2011 1:49:00 PM
வாளு வாளுன்னு எதுக்குக் கத்துரே? நீ வாழ்ந்த காலத்துலே யாருக்கும் நல்லது செய்யலை. இனி மேலும் செய்யப் போறதுமில்லை. . ... அந்த அம்மா செஞ்சா அதைப் பத்தி எதுவும் நீ சொல்லவேண்டாம். அமுக்கிகிட்டு இரு. இன்னைக்கு எனக்கு ஒரு ஆசை வந்தது. அது என்ன என்றால் மீண்டும் ஒரு தடவை கண்ணதாசனின் "வனவாசம்" படிப்பதுதான். ஒன்னோட பெர்சனாலிட்டி அதன் மூலம் மீண்டும்.......மீண்டும் படித்து ரசிப்பதில் ஒரு சுகம். எத்தனை நூல்கள் நீ படித்தாலும் மீண்டும் ஒரு தடவை கொன்றைவேந்தன், ஆத்திசூடி படி. அப்பிடி நீ படித்தால் கொஞ்சம் பொய் பேசாமல்,புகார் சொல்லாமல் வாழலாம்.
By மோகன்
8/4/2011 12:48:00 PM
8/4/2011 12:48:00 PM
மூன்று மணி நேரம் சர்கும்வாரை உண்ணாவிரதம் இருந்ததும் ஒரு சர்தனை தான் கோடரிகாம்பே
By KOOPU
8/4/2011 12:25:00 PM
8/4/2011 12:25:00 PM
இன்னுமா உங்களை நம்புவோம் போய் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லு எங்ககிட்ட வேண்டாம் இனதுரோகி.........கபட நாடகதாரி
By விஜய்
8/4/2011 11:21:00 AM
8/4/2011 11:21:00 AM
மகனே ! இந்திய மக்களின் பணத்தை , உழைப்பை மிக அதிகமாக கொள்ளை அடித்தது உன் குடும்பமும் , கட்சியும்தான் . இதில் அறிக்கை வேறு ! மகனே உன்னை , மனைவி இனைவியருடன் திகாரில் உடனே அடைக்க வேண்டும். இலங்கை மக்கள் சாவுக்கு காரணமான உன் குடும்பத்தை இறைவன் நிம்மதியாக வாழ விட மாட்டான் !
By S .பாலன்
8/4/2011 10:34:00 AM
8/4/2011 10:34:00 AM
அண்ணா நீங்க உண்மையாலுமே ஒரு மனித ஜென்மமா ? இல்ல மனிதமிருகமா ? உங்க வாழ்க்கையில் இலங்கை தமிழனுக்கு நெறைய நெறைய செஞ்சுடீங்க. அதுக்கே உங்க பரம்பரை இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு . இனிமே போய்கிட்டு இருக்கிற உயிர்களாவது உங்க குடும்பத்துக்கு சாபம் விடாம இருக்கனும்ன தயவு செஞ்சு உங்க அரசியல் நாடக வசனங்களை இந்த விசயத்துல பேசாதீங்க நான் உங்க atthutha THALAI MURAIKKAGAVUM THAN SOLKIREN
By karur rajesh
8/4/2011 10:22:00 AM
8/4/2011 10:22:00 AM
செலவு செய்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால்,செல்வு உரியவரை சென்று அடைந்ததா என்பதில் தான் பிரச்சினையே?
By karikalan
8/4/2011 10:18:00 AM
8/4/2011 10:18:00 AM
ஆறு மாதம் அமைதி யாக இருக்கமுடியாதா மக்கள் முட்டாள்கள் மீட்டும் உன்னை ஆட்சியில் அமர்த்துவர்
By avudaiappan
8/4/2011 10:02:00 AM
8/4/2011 10:02:00 AM
"Ilakkuvanar: கட்சி ஊர்வலத்தைப் பத்து மணிநேரம் நடத்தத் தெரிந்த தலைவர்களுக்கு ஈழத்தமிழர்கள் படுகொலைகளைத் தடுக்க நாட்டு மக்களை ஒன்றுகூட்டத் தெரியவில்லையே! " These words are very true. This traitor will be remembered in history for wrong reasons. 'Vekkam,manam,rosham,mariyadhai illadhavan'
By Karthik
8/4/2011 9:55:00 AM
8/4/2011 9:55:00 AM
கருணாநிதி அவர்களே தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். உங்கள் விழயத்தில் அது நடந்து விடும் என்று நினைக்கிறேன். தயாநிதி, கலாநிதி, இவர்களை எப்பொழுது மத்திய, மாநில அரசுகள் கைது செய்யப்போகிறது என்று சொல்லமுடியாத சூழ்நிலையில் கூட சச்சேனா வை பற்றி நீங்கள் வக்காலத்து வாங்குவது ஆச்சரியமாக உள்ளது. இதில் ஏதோ விழயமிருக்கிறது. தமிழக காவல் துறை இதை முதலில் கவனித்தால் நல்லது.
By ஹரிஹரக்ரிஷ்ணன்
8/4/2011 9:37:00 AM
8/4/2011 9:37:00 AM
ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்
By சுனில்
8/4/2011 9:00:00 AM
8/4/2011 9:00:00 AM
இந்த ஆளு திருந்த மாட்டானா? Media should start ignoring this guy. That would be the best possible alternative for the public.
By rvaruna
8/4/2011 7:14:00 AM
8/4/2011 7:14:00 AM
யோவ் பேமானி, அனுப்பிய பொருட்கள் எல்லாம் எங்கே போய்ச் சேர்ந்ததுன்னு தெரியுமா? மதிய அரசு அனுப்பிய டிராக்டர் எல்லாம் இராணுவத்துக்கும் சிங்கள மக்களுக்கும் தான் வழங்கப்பட்டது. அம்மா இந்தியாவில் எந்தவித உதவியும் இல்லாத அகதிகளுக்கு வழங்குகிறார். உனக்கு ஓய்வு கொடுத்தாங்க இன்னும் ஓய்வூதியம் கொடுக்கலை போலே, அதான் பினாத்திகிட்டே இருக்கிறே!
By வாடா மன்னாரு
8/4/2011 6:18:00 AM
8/4/2011 6:18:00 AM