First Published : 31 Jul 2011 09:47:40 AM IST
நாமக்கல், ஜூலை 30: இந்தி, ஆங்கிலத்துடன் தமிழிலும் இலவசமாக கல்விச் சேனலைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தில்லியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேசிய பிற்பட்டோர் நல வாரிய உறுப்பினர் எஸ். கார்வேந்தன் ஆகியோரிடம், கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி மாநிலச் செயலாளர் க.செல்வராஜு ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நாள் முழுவதும் ஒளிபரப்பாகும் சேனல்கள், மத்திய அரசால் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதேபோல், தமிழ் உள்பட அனைத்து தேசிய மொழிகளிலும் சேனல்களை உருவாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் கபில் சிபல், ப. சிதம்பரம் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக கூட்டணி பொதுச் செயலர் முத்துசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக