செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு

 ஒருபெண்ணாக இருந்துகொண்டு ஈழத்தில்  பெண்களை வதைத்து, மார்பகங்கைள அறுத்து, உடலுறுப்புகளைச் சிதைத்துக், கற்பழித்துக் கொடூரமான முறையில் கொலை புரிந்த சிங்களர்கள் சார்பாக அவர்களின் நா.ம.உறுப்பினர்களை மன்னிப்பு கேட்கச் செய்யாமல்  அவர்களிடம்  மன்னிப்பு கேட்டுத் தாய்க்குலத்திற்கே இழிவு தேடித்தந்து விட்டாரே! கொடுமைக்கு எதிராக முழக்கமிட்டதற்கே வேதனை உற்றார் எனில் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் குழந்தைகள், சிறியோர்,  பெரியோர், மகளிர், நோயர் எனப் பார்க்காமல்  கொன்றொழித்த கொடுமைக்கு உள்ளம் உருகி  அழுதிருக்க வேண்டாவா? பதவியினால் வந்த கொத்தடிமை உணர்வு கட்டிப்போட்டதோ!  
வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம்
மீரா குமார் மன்னிப்பு

First Published : 02 Aug 2011 02:59:02 AM IST


புது தில்லி, ஆக. 1: இந்தியா வந்துள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.இதற்காக அவர்களிடம், மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தின் உயர்நிலைக் குழுவினர் தில்லி வந்துள்ளனர். மக்களவை திங்கள்கிழமை கூடியதும், மீராகுமார் அவர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த அதிமுக எம்.பி.க்கள், இலங்கை நாடாளுமன்றக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய மீரா குமார், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர் என்றார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவைச் செயலர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்து: