செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்திய-இலங்கை எம்.பி.க்கள் நட்புக் குழுக் கூட்டம்: திருச்சி சிவா நா.உ.(எம்.பி.) வெளிநடப்பு

காலையில் கையைக் கட்டிக் கொ்ண்டிருந்தேன். ஆனால், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த பின்பும் நான் சும்மா இருக்க முடியாது. என்றாலும் வயிறு சரியில்லை என்றுதான் வெளிநடப்பு செய்தேன் எனப் பின்னர் தனிமையில் விளக்கம் தெரிவிக்காமல் இருந்தால் சரி. இனப் படுகொலை என்று சொல்லாமல் இருப்பதனாலும் படுகொலை செய்யப்பட்டவர்கள்  எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்காகக் குறைத்துக் கூறுவதாலும், வயிற்றுவலி  வெளிநடப்பைப் பொருட்படுத்த வேண்டா எனக் கெஞ்சாமல் இருந்தால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இந்திய-இலங்கை எம்.பி.க்கள் நட்பு குழு கூட்டம்: திருச்சி சிவா எம்.பி. வெளிநடப்பு

First Published : 02 Aug 2011 02:55:07 AM IST


புது தில்லி ஆக. 1: இந்தியா-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழு கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா வெளி நடப்பு செய்தார்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63-ல் மாநிலங்களவைத் தலைவரும் இந்திய துணை குடியரசுத் தலைவருமான ஹமீது அன்சாரி இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழுவை கெüரவிக்கும் வகையில் தேநீர் விருந்து ஒன்றுக்கு மாலை 4.40 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநிலங்களவையின் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. திமுகவின் சார்பாக இந்த கூட்டத்தில் திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் திமுக உறுப்பினர் திருச்சி சிவா தனது கருத்தை தெரிவிக்க முயன்றபோது, அவைத் தலைவர் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்து, "உங்களுக்கு நேரம் அளிக்கும் போது உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்' என்று கூறினார். எனினும் இதைப் பொருள்படுத்தாமல் அவர் பேசிய விவரம்:திங்கள்கிழமை காலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழு மாநிலங்களவைக்கு வந்த போது, அவையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் அமைதியாக கையை கட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது. ஆனால் இப்போது என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கை அரசு உள் நாட்டு போர் என்ற பேரில் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவத்தினரால் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் தமிழக பெண்கள் கற்பழிக்கப் பட்டும் பல துன்பங்களுக்கும் ஆளாக்கப் பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பும் இலங்கை அதிபர் ராஜபட்சதான். இந் நிலையில் தன்னால் இரு நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழுவில் பங்கு கொள்ள இயலாது என்றார். பின்னர் வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழகத்தின் மாநிலங்களவையின் உறுப்பினரான சுதர்ஷன் நாச்சியப்பன் கலந்து கொண்டார்.

1 கருத்து: