செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

மக்களவையில் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எதிரொலித்தது

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


"மக்களவையில் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக பிரதிபலித்தது'

First Published : 02 Aug 2011 02:53:43 AM IST


புது தில்லி, ஆக. 1: இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மக்களவையில் ஆட்சேபத்தை தெரிவித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எம்.பி.க்கள் பிரதிபலித்துள்ளதாக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவை நிகழ்வுகளைக் காண வந்த போது அவர்களுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் தங்களது ஆட்சேபத்தைத் தெரிவித்தனர்.அப்போது மக்களவைத் தலைவர் மீரா குமார், "இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, கெüரவம் அளிக்க வேண்டியது நமது கடமை' என்றார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் நாடாளுமன்றத் தலைவர் தம்பிதுரையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் மீரா குமாரைச் சந்தித்தனர். அப்போது, எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மீரா குமார் கூறியிருக்கிறார். அதற்கு தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர் என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.

2 கருத்துகள்: