இனப்படுகொலை - கிரிக்கெட்டுக்கு தடைவிதிப்பதால் என்ன பயன்?
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான ஆதாரங்கள் இங்கிலாந்தின் சேனல் 4
டிவியில் வெளியிடப்பட்ட பின்னர் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அந்த
காட்சிகளை கண்டு பதைபதைத்து மீளாத்துயரில் ஆழ்ந்தனர். இந்த நிலையில்
தமிழக கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றன. தமிழக அரசு இலங்கை மீது
பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய
அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் மும்பை நாம் தமிழர் அமைப்பின் பொறுப்பில் இருக்கும் நான்,
இனப்படுகொலை மீது சரியான நடவடிக்கை எடுக்கும் வரை இலங்கை கிரிக்கெட் அணி
சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்க கோரிக்கை விடுக்க வேண்டும்
என்று தமிழக முதல்வருக்கு மற்றும் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
ஐநாவின் அறிக்கை, சேனல் 4 ஆவணப்படம் ஆகிய இரண்டுமே இலங்கை கிரிக்கெட்
அணிக்கு தடை விதிக்க போதுமானது. அவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டாலே
மற்ற நாடுகள் அந்த நாட்டு அணியுடன் விளையாட யோசிக்கும்.
இது பற்றி நான் என் நண்பர்களிடம் (அவர்களில் சிலர் கிரிக்கெட் ரசிகர்கள்)
பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் என்னிடம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடை
விதிப்பதால் என்ன பயன் என்று கேட்டனர்? அவர்களுக்கு பதில் அளிக்கும்
முகமாகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
ஒரு நாடு விளையாடுவது எப்போது?
பொதுவாக ஒரு நாடு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுக்களை நடத்துகிறது
என்றால் அந்த நாடு வேறு எந்தவித தீவிர பிரச்சனைகளும் அதாவது, பொருளாதார,
இனப் பிரச்சனை, சண்டை சச்சரவு இல்லாத அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது
என்று பொருள். இலங்கை கிரிக்கெட்டை வைத்துத்தான் உலகம் முழுவதுமே
அறியப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் தமிழக அரசு, கட்சி தலைவர்கள் அல்லது
ஆயிரக்கணக்கானோர் வேண்டுகோள் விடுத்தால் (ஏற்கனவே ஆஸ்திரேலியா வீரர்கள்
இலங்கையுடன் விளையாட தயக்கம் தெரிவித்துள்ளனர்) சர்வதேச ஆணையத்தால்
இலங்கை அணிக்கு தடை விதிப்பதை விட வேறு வழியில்லை.
அப்படி தடை விதித்தால் என்ன ஆகும்?
இன்று உலகம் முழுவதும் உள்ள தொலைக் காட்சிகளில் விளையாட்டுச் செய்திகளில்
கிரிக்கெட் பற்றி செய்தி கூறாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம். இந்த
செய்திகளை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். இவர்களில்
பெரும்பாலானோருக்கு இன்னமும் இலங்கை பிரச்சனை பற்றி தெரியாமல்த்தான்
உள்ளது. இலங்கை பற்றி மௌனம் சாதித்து வரும் இந்த தொலைக்காட்சிகள் எல்லாம்
கிரிக்கெட் உடன் சேர்த்து இனப்படுகொலை பற்றியும் பேச வேண்டிய நிலைக்கு
தள்ளப்படும். இலங்கை அணிக்கு தடை விதிக்கும்போது இவர்கள் அனைவரும்
அதற்கான காரணம் பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். ஒரு நாட்டில் மக்கள்
பரவலாக பேசும்போது அது அந்த நாடுகளின் அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கும்.
அப்போது இந்த பிரச்சனை மீது எந்தவொரு ஜனநாயக நாடும் நடவடிக்கை எடுக்காமல்
இருக்க முடியாது.
ஐநாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கையின் பாடு திண்டாட்டம்தான். இது
எல்லாம் உடனுக்குடன் நடந்து விடும் என்று சொல்ல முடியாது.
இது தமிழீழம் தோன்றுவதற்கான பல்வேறு காரணிகளில் இதுவும் ஒன்றாக அமையும்.
பெருமாள் அ. தேவன்--
*Regards,*
*Perumal A. Thevan, Mumbai.
*
ap_thevan2003@yahoo.co.in,
ap_thevan34@rediffmail.com,
apthevan@gmail.com
--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-thoazhamai@googlegroups. com
மின்வரிக்கு அனுப்புக. மும்பை

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-thoazhamai@googlegroups.
மின்வரிக்கு அனுப்புக. மும்பை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக