First Published : 01 Aug 2011 02:27:33 AM IST
ஏற்புரையில் கவிஞர் சிற்பி பேசியது:
எனது பவள விழாவை என்னுடைய மாணவர்கள் சேர்ந்து நடத்தியிருக்கின்றனர். கவிஞர் என்பதற்காக இலக்கியப் படைப்பாளிகள் எடுத்த விழா அல்ல இது. என்னுடைய மாணவர்களுக்கு என்ன கைம்மாறு செய்வேன் என்று தெரியவில்லை. அம்மாணவர்களை சிரம தாழ்த்தி வணங்குகிறேன். ஆசிரியர்- மாணவர்கள் நல்லுறவுக்கு முன்மாதிரியான அடையாளம்தான் இந்த பவள விழா.
அப்துல் கலாம் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்தபோது நான் முதன்முதலாகச் சந்தித்தேன். அவரைப் பார்க்கச் சென்றபோது இன்றைய இளைஞர் சமுதாயத்தைத் திருத்தும் பொறுப்பு யாருக்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்கூறும் வகையில், தன்னிடம் இருந்த புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அதில், பள்ளிக்கூடம் என்ற தலைப்பில், இளைஞர்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்குத் தான் உள்ளது என்று இருந்ததை சுட்டிக்காட்டினார்.
எனக்கு நடந்த பவளவிழா பாராட்டுகளை திருவள்ளுவர் வாழ்த்தியதாகவே உணர்கிறேன். நடிகர் சிவகுமார் கம்பராமாயணத்தை சுட்டிக்காட்டி வாழ்த்தினார். அதன் மூலமாக கவிச்சக்கரவர்த்தி கம்பனும், அதையும் கடந்து வியாசரும் வாழ்த்தியதாக உணர்கிறேன்.
பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயரின் பாராட்டுரையை சுவாமி விவேகானந்தர் பாராட்டியதாகவும் கருதுகிறேன்.
என்னுடைய மாணவர்கள் நடத்திய பவள விழாவின் குழுத் தலைவர் என்னுடைய மாணவரான முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
எனது குருமார்களையும் நன்றியுடன் வணங்குகிறேன். குருபக்தி இல்லையேல் வாழ்வில் வெற்றிபெற முடியாது. இத்தகைய பண்பு ஆசிரியர்கள்- மாணவர்கள் மத்தியில் ஒளிவீச வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக