செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர் படுகொலை: மக்களவையில் விவாதம் நடத்த திமுக அறிவி்க்கை


செய்த கரிசிற்கு (ப் பாவத்திற்கு)க் கழுவாய் (ப்பரிகாரம்) தேடும் முயற்சிக்குப் பாராட்டுகள். இந்த முயற்சியாவது உண்மையாக இருக்கட்டும்!  வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான  பேரமாக அமைய வேண்டா! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
 
இலங்கைத் தமிழர் படுகொலை: மக்களவையில் விவாதம் நடத்த திமுக நோட்டீஸ்

First Published : 02 Aug 2011 01:13:30 AM IST


புது தில்லி, ஆக.1 : இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து விதிமுறை 193 கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு மக்களவைத் தலைவரிடம் திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளார். அது குறித்த விவாதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.கச்சத் தீவு பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை அக்கட்சி நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் தலைவருமான பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 கருத்து: