பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை முதன்மையானதல்ல! ஏனெனில் காரணமே நாங்கள்தானே! பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொடூரமாகக் கொன்று விட்டு எஞ்சியவர்களுக்கு உதவுவது போல்நடித்தால் போதும் என்ற கொள்கையை உருவாக்கி வருகிறோம்! எனவேதான் அறிக்கையை வாசிக்காமல் விட்டுவிட்டேன்! அவைத்தலைவர் மீராகுமாரியும் எங்கள்பக்கம்தான். சிரித்த முகச் சிங்காரி சிங்களர்களுக்காகச் சினந்ததில் இருந்தே புரிந்து கொண்டிருக் கவேண்டாவா? என்றும் கிருட்டிணா தெரிவித்ததாக நம்பகமானச் செய்திவந்துள்ளது. ஒளிபரப்பபை மறுக்கமுடியாமல் மழுப்பும் வேடிக்கை! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு அவசியம்
புதுடில்லி: "இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, " சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் மிகச்சிறந்த தீர்வு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரச்னை குறித்து, அறிக்கை தாக்கல் செய்த போது, அதை முழுவதையும் படித்தார். ஆனால், நேற்று இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த அறிக்கையை, சபையில் முழுவதுமாகப் படிக்கவில்லை. மாறாக, வெறும் தாக்கல் மட்டுமே செய்யும்படி சபாநாயகர் உத்தரவிட்டதால், அதை ஏற்று தாக்கல் மட்டுமே செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசாங்கத்திற்கும், அங்குள்ள தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் பிரதிநிதிகளுடன் நடத்தும் அந்த பேச்சுவார்த்தை, மிகுந்த ஒரு கட்டமைப்புடன் நடைபெற்று வருகிறது. இது போற்றத்தக்கது. அந்த பேச்சுவார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது. பேச்சுவார்த்தை நல்லதொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதற்காக, இந்தியா அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. தமிழர்களின் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் ஒரே வழி என, இந்தியா கருதுகிறது. அதைநோக்கி அமைந்த நடவடிக்கைகளை, இந்தியா எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலை, அறிவியல் பண்பாட்டுத் தளங்களில், மிகுந்த தொடர்பும் நட்பும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இப்போது இந்த உறவு, நல்ல நிலையை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான, தொழில் வர்த்தக உறவுகளும் மேம்பட்டு வருகின்றன.
இலங்கை என்பது, பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாகவே, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடிழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது. புனரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தையும், இந்தியா மிகுந்த வேகத்துடன் செய்திட, ஒத்துழைப்பையும் அளித்தது. அதோடு மட்டுமல்லாது, புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகவே 500 கோடி ரூபாய் வரை, அந்நாட்டு அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கியது. இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான, புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் மிகச்சிறந்த தீர்வு. போரினால் பாதிக்கப்பட்ட, 2 லட்சத்து 90 ஆயிரம் பேர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திரும்பவும், அவரவர் இருப்பிடங்களிலேயே, குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் மீள் குடியமர்த்தப்படுவார்கள். போர்க்குற்றங்கள் குறித்து, ஐக்கியநாடுகள் சபையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து, இந்தியாவுக்கு தெரியும். இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது குறைந்துள்ளது. சமீபகாலமாக, எந்தவொரு மீனவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தினால் , தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்நாட்டு அரசாங்கத்திடம், மத்திய அரசு மிகுந்த கண்டிப்புடன் கூறியுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 104 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் உள்ளனர். இலங்கை அரசாங்கத்திடம், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக