இவைதாம் ஊர்தி எண் பலகைகளுக்கான விதிகள். ஆனால், அரசாணைக்கிணங்கத் தமிழில் எண் பலகையை எழுதி வைப்பவர்கள் மீதும் விதிகளுக்கிணங்க இல்லை எனக் காவல்துறையினர் சிலர் நடவடிக்கை எடுக்கின்றனர். அத்தகைய தவறான போக்கைத் தடை செய்து, எல்லா ஊர்திகளிலும் தமிழிலும் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தி வரும் போக்குவரத்துத்துறையினருக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
விதிகளின்படி வாகன பதிவு எண் பலகை பொருத்த ஆகஸ்ட் 31 வரை அவகாசம்: தமிழக அரசு
First Published : 31 Jul 2011 02:34:03 AM IST
சென்னை, ஜூலை 30: ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விதிகளின்படி பதிவு எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களின் பதிவு சான்று தாற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:மத்திய மோட்டார் வாகன விதி 50, 51-ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் பலகை பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி இல்லாமல் அவரவர் விருப்பப்படி பதிவு எண்களை எழுதி வாகனங்களை இயக்கி வருவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்துள்ளன.இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பதிவு எண் பலகையில் முன்புற எழுத்துக்கள், எண்களின் உயரம் 30 மி.மீ., தடிமன் 5 மி.மீ., இடைவெளி 5 மி.மீ. ஆக இருக்க வேண்டும்.பின்புற எழுத்துக்கள், எண்களின் உயரம் 35 மி.மீ., தடிமன் 7 மி.மீ., இடைவெளி 5 மி.மீ ஆக இருக்க வேண்டும்.கார்கள் மற்றும் இதர வாகனங்களின் பதிவு எண் பலகையில் எழுத்துக்கள், எண்களின் உயரம் 65 மி.மீ., தடிமன் 10 மி.மீ., இடைவெளி 10 மி.மீ. ஆக இருக்க வேண்டும்.இந்த விதிகளின்படி ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பதிவு எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களின் பதிவு சான்று தாற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக