சென்னை, நவ.10: இலங்கைத் தமிழர்களின் மறுகுடியமர்வுக்கு இந்திய அரசு முயற்சிப்பதாக சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளது பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:சென்னை விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் முதல்வர் கருணாநிதி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கு சோனியா காந்தி எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையில் முகாம்களில் உள்ள 30 ஆயிரம் ஈழத் தமிழ் மக்கள் மறுகுடியமர்வுக்குத் தேவையான உதவிகளையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், மத்திய அரசு அளித்து வருவதாகவும், தமிழ் மக்களுக்கு மறு கட்டமைப்புப் பணிகள் தொடர்பாக, இலங்கை அரசோடு இந்திய அரசு பேசி வருவதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.2008-லும், 2009 தொடக்கத்திலும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள், ராஜபட்ச அரசால், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் எங்காவது ஓர் இடத்தில், ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை சோனியா காந்தி பேசியது உண்டா?விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்திய போதும், இந்திய அரசு போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்தவில்லை?வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு மறுகுடியமர்வுக்கு இந்தியா முயற்சிப்பதாக கருணாநிதிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியிருக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார்.
கருத்துகள்
அனைவரும் அறிந்த செய்தி. எனினும் அப்பாவிகள் உணராத செய்தி. எனவே வைகோவின் குற்றச்சாட்டு வரவேற்கத்தக்க உண்மை. கொன்றொழிப்பார்களாம்.
எஞ்சியவர்களுக்கு மறுவாழ்வு தருவோம் எனக் கதை விடுவார்களாம்! என்ன கொடுமை இது! செய்வினை வினைப்பயனை அளிக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எஞ்சியவர்களுக்கு மறுவாழ்வு தருவோம் எனக் கதை விடுவார்களாம்! என்ன கொடுமை இது! செய்வினை வினைப்பயனை அளிக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/11/2010 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/11/2010 4:54:00 AM