வெள்ளி, 12 நவம்பர், 2010

தினமணி' தருமபுரி பதிப்பு அலுவலகம் திறப்பு

தருமபுரி, நவ. 11: "தினமணி' தருமபுரி பதிப்பு அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.77 ஆண்டு பாரம்பரியமிக்க "தினமணி' நாளிதழின் 7-வது பதிப்பு தருமபுரியில் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி பேருந்து நிலையம் அருகே, சித்த வீரப்பா செட்டித் தெருவில் அமைந்துள்ள நிவா காம்பளக்ஸ் 2-வது மாடியில் உள்ள அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் இரா.ஆனந்தகுமார் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ர.சுதாகர் செய்திப் பிரிவை திறந்து வைத்தார்.விழாவுக்கு எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.கே.ஜுன்ஜுன்வாலா தலைமை வகித்தார்."தினமணி'யுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஆட்சியர் இரா.ஆனந்தகுமார் கூறுகையில், தான் குடிமைப்பணி தேர்வு எழுதியபோது தமிழ் இலக்கியப் பாடத்தை தேர்வு செய்ததாகவும், அதற்கு "தினமணி' நாளிதழ் பெரிதும் உறுதுணையாக இருந்தது எனவும் நினைவு கூர்ந்தார்.நிகழ்ச்சியில், எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவன தமிழ்நாடு பொது மேலாளர் சாட்டர்ஜி, தருமபுரி மாவட்ட துணை ஆட்சியர் மரியம் சாதிக், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் தமிழரசு, பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், மேலாளர் கணேசன், ஒசூர் எம்.எல்.ஏ. கோபிநாத், நகர்மன்றத் தலைவர் சத்யா, ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்

தமிழ் நலனையே கருத்தில் கொண்டு பதிப்புகள் பெருகட்டும்! வாழ்த்துகள்! 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 7:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக