நியூயார்க், நவ.12: மரண தண்டனையை ரத்து செய்யும் விதத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 107 நாடுகள் வாக்களித்துள்ளன. தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் உள்பட 38 நாடுகள் வாக்களித்துள்ளன. 36 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தன. மரண தண்டனையை ரத்து செய்ய வகை செய்யும் இதே தீர்மானம், 2007-லும் ஐ.நா. பொது சபையில் கொண்டுவரப்பட்டது. அப்போது தீர்மானத்தை ஆதரித்து 104 நாடுகளும், எதிர்த்து 54 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பதில் இருந்து 29 நாடுகள் ஒதுங்கியிருந்தன. மரண தண்டனையை எதிர்க்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதன் மூலம் இதை அறிய முடிகிறது. அதேபோல எதிர்த்த, வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிய நாடுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று ஐ.நா. சபை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:17:00 AM
11/13/2010 3:17:00 AM


By ALLAHBUX, ADVOCATE
11/12/2010 8:08:00 PM
11/12/2010 8:08:00 PM


By மரமண்டை
11/12/2010 7:23:00 PM
11/12/2010 7:23:00 PM


By saravanan.s
11/12/2010 6:46:00 PM
11/12/2010 6:46:00 PM


By raman
11/12/2010 6:21:00 PM
11/12/2010 6:21:00 PM


By Ramarasu
11/12/2010 5:41:00 PM
11/12/2010 5:41:00 PM


By KPS
11/12/2010 5:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/12/2010 5:02:00 PM