ஞாயிறு, 7 நவம்பர், 2010

விருதுகள் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்!


பத்மா சுப்பிரமணியம் உள்பட 5 பேருக்கு ஆர்ஷ கலா பூஷணம் விருது

First Published : 07 Nov 2010 01:49:41 AM IST


கோவை, நவ. 6: பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் மற்றும் இசைக் கலைஞர்கள் 4 பேருக்கு ஆனைக்கட்டி ஆசிரமம் ஆர்ஷ வித்யா குருகுலம் சார்பில் ஆர்ஷ கலா பூஷணம் விருது வழங்கப்படுகிறது. கிக்கானி மேல்நிலைப் பள்ளி அரங்கில் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) விருதுகளை வழங்கி அருளுரையாற்றுகிறார். இசையை வளர்க்கும் வகையில் ஆர்ஷ வித்யா குருகுலத்தில் ஆர்ஷ கலாரங்கம் பிரிவு தொடங்கப்பட்டது. 2007 முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் இசை விழா நடத்தப்படுகிறது. இசைக் கலைஞர்களை கெüரவிக்கும் வகையில் ஆர்ஷ கலா பூஷணம் விருது வழங்கப்படுகிறது. இதுவரை 13 மூத்த இசைக் கலைஞர்கள் இவ் விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இசைக் கலைஞர்கள் டி.ஆர்.சுப்பிரமணியம் (வாய்ப்பாட்டு), டி.கே.கோவிந்தராவ் (வாய்ப்பாட்டு), எம்.பி.என். பொன்னுசாமி (நாதஸ்வரம்), வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் (தவில்) ஆகியோருக்கு ஆர்ஷ கலா பூஷணம் விருது வழங்கப்படுகிறது. சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என்.முரளி, இசைக் கலைஞர் அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
கருத்துகள்

ஆர்ச கலா என்னும் பொழுது ஏதோ ஆரியக் கலை எனப் படிப்பதுபோல் தோன்றுகிறது. தமிழில் விருதுகளை வழங்குவதே விருதினை மக்கள் போற்றுவதற்கு வழி வகுக்கும். தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் விருதுகளை வழங்காதவர்களும் அதனைப் பெறுபவர்களும் எங்ஙனம் தமிழ்க்கலைகளை வளர்ப்பார்கள் என்று எதிர்பார்கக் இயலும்? வெட்கக்கேடாக உள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக