திருவொற்றியூர், நவ.6: பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஜா ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்தினை சனிக்கிழமை தானமாக வழங்கினர்.இதற்கான நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தேவஸ்தான செயல் அலுவலர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணா ராவ், கிரிஜாவின் கணவர் கே.பி.பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கே.பி.பாண்டே கூறியது: நடிகை காஞ்சனா, அவரது சகோதரி கிரிஜா ஆகியோருக்குச் சொந்தமான 9,360 சதுர அடி நிலம், கட்டடங்கள் சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 கோடி இருக்கலாம். இச்சொத்தின் மீது பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் மாதம்தான் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து போயின. கடவுள் அருளாளால்தான் இவை அனைத்தும் சுமூகமாக நடைபெற்றதாகக் நாங்கள் நம்புகிறோம். எனவே தற்போது இச்சொத்தினை திருமலை தேவஸ்தானத்திற்கு வழங்குகிறோம். தேவஸ்தானம் இந்த இடத்தில் ஆன்மிகம், மதம், கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கத்திற்காக இந்த இடத்தைபயன்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான மேலும் 4,500 சதுர அடி நிலத்தையும் எதிர்காலத்தில் கோயிலுக்கு தானம் வழங்க எண்ணியுள்ளோம் என்றார் பாண்டே.மதுரையில் தகவல் மையம்-செயல் அலுவலர்: நிகழச்சியில் திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மதிப்பு வாய்ந்த இச்சொத்தினை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி வழங்கி உள்ளனர். ரூ. 20 கோடி மதிப்புள்ள இந்த இடம் தானம் அளித்தவர்கள் கோரியபடி ஆன்மிகம் மற்றும் கலாசாரம் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே இந்த இடம் பயன்படுத்தப்படும். சென்னையில் உள்ளது போல் திருமலை தேவஸ்தான தகவல் மையம் மற்றும் அலுவலகம் மதுரையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் கன்னியாகுமரியில் கோயில் மற்றும் தகவல் மையம் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தை அருகே கோயில் அமைக்கும் திட்டம் குறித்து இரு மாநில அரசுகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செவ்வாய், புதன்கிழமைகளில் அருகில் தரிசனம்: செவ்வாய் காலை முதல் புதன்கிழமை நள்ளிரவுவரை திருமலையில் சாமியை தரிசிக்க அனுமதிக்கும் தூரம் சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சென்னை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூர் அளவில் கல்யாண ரத யாத்திரைகளை ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளோம். இதே போல் தமிழகத்திலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார் கிருஷ்ணா ராவ்.
கருத்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 3:37:00 AM
11/7/2010 3:37:00 AM


By K Rajan
11/7/2010 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/7/2010 3:36:00 AM