ஞாயிறு, 7 நவம்பர், 2010

மூலிகை வெடிகள்

குஜராத் தீபாவளியில் மூலிகைப் பட்டாசு!


வதோதரா,நவ.6: குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தின் குண்ட்லா நகரில் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் இளைஞர்கள் கூடி, மூலிகைப் பட்டாசுகளை வெடித்து சாதனை படைத்துள்ளனர்.÷வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குத் தொடங்கிய பட்டாசு வெடிப்பு நிகழ்ச்சி நள்ளிரவு வரை உற்சாகமாக நடைபெற்றது.÷நவ்லி நதிக்கரையில் கூடிய இளைஞர்கள் இங்கோலியா என்கிற மூலிகைப் பட்டாசை ஒருவர் மீது வீசி விளையாடினர். இது ஒரு பழத்தின் கொட்டையை எடுத்து அதில் கரித்தூளையும் பொட்டாசியத்தையும் சில மூலகங்களையும் கலந்து தயாரிக்கும் நாட்டு வெடியாகும்.இதில் ஓசை வருமே தவிர நெருப்பும் புகையும் குறைவு. அதைவிட  முக்கியம் இதனால் மிகப்பெரிய பாதிப்பும் கிடையாது. இதனுடன் கோக்டி என்ற நாட்டு வெடியும் பயன்படுத்தப்பட்டது. இதிலும் வெடி மருந்தின் பங்கு மிகமிகக் குறைவு.÷தீபாவளியால் ஒலி மாசும் புகை மாசும் ஏற்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது என்ற உணர்வு சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது.÷பட்டாசின் விலையும் அதிகரித்துக் கொண்டே போவதால் பெரும்பாலான மக்கள் தாங்களாகவே பட்டாசுகளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

மூலிகை வெடிமுறையை அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தி ஒலி மாசினைக் குறைக்கலாம். நலக்கேட்டினையும் குறைக்கலாம். என்ன வென்று அறிந்து தமிழ்நாடு அரசு இம்முறையை ஊக்கப்படுத்தலாமே! தினமணி இது குறித்து அறிந்து விவரமான செய்திக் கட்டுரையை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக