சென்னை, நவ. 9: இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பதில் எழுதியுள்ளார். இது குறித்து, அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தின் விவரம்: இலங்கையில் முகாம்களில் வாழும் 30 ஆயிரம் தமிழர்களின் நிலை குறித்து கடந்த அக்டோபர் 8-ம் தேதி தாங்கள் எழுதியிருந்த கடிதம் கிடைக்கப் பெற்றேன். இந்தப் பிரச்னையில் நீங்கள் கொண்டிருக்கின்ற அதே அளவுக்கான அக்கறையை நானும் கொண்டுள்ளேன். இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மத்திய அரசு தன்னாலான அனைத்து மனித நேய அடிப்படையிலான நன்மைகள், மறுகுடியமர்த்துதலுக்கான உதவிகளை கட்டாயம் செய்யும். இலங்கைத் தமிழர்களின் மறுகுடியமர்வுக்கான பணிகளில் அந்த நாட்டு அரசை வலியுறுத்தி வரும் வேளையில், அங்கு கண்ணி வெடிகளை அகற்றுவது, மறு கட்டமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். இந்தப் பணிகள் மூலம், முகாம்களில் வாழும் தமிழர்கள் விரைந்து அவர்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல வழி ஏற்படும் என தனது கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/10/2010 2:27:00 AM