ஞாயிறு, 7 நவம்பர், 2010

இந்திரா தொகுப்பு வீடுகள் திட்டத்தின் பெயரை மாற்றும் எண்ணம் இல்லை: முதல்வர் கருணாநிதி

சென்னை, நவ. 6: இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் பெயரை மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது என்று முதல்வர் கருணாநிதி உறுதிபட தெரிவித்துள்ளார்.முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இதில் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை கிடையாது.அப்படி பெயர் மாற்றம் செய்திருப்பதாக சொல்லப்படுவதில் எவ்வித அடிப்படையோ, உண்மையோ கிடையாது. இது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சொல்லப்படுவதாகும்.மத்திய அரசின் "இந்திரா வீடு கட்டும் திட்டத்துக்கும்', தமிழக அரசின் "கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கும்' வேறுபாடு தெரியாமல் ஒருவேளை அப்படி ஒருவர் கூறியிருக்கலாம்.அவர் இன்னொரு செய்தியையும் அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டாண்டு காலமாக மண் குடிசைகளில் வாழ்ந்து வந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது தமிழகத்திலேதான்.இந்தியாவிலேயே முதல்முறையாக "ஆதிதிராவிடர் இலவச வீட்டு வசதிக் கழகம்' தமிழகத்தில்தான் 15.02.74-ல் தொடங்கப்பட்டது.இந்தக் குடியிருப்புகளைத் தொடங்கிவைத்துப் பேசிய அப்போதைய உணவு அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம், தமிழ்நாட்டின் முன்னுதாரணத்தை மற்ற மாநிலங்களை பின்பற்ற முயல வேண்டும் என்று குறிப்பிட்டார்.அதேபோல், சென்னை அடையாறு ஊரூர் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திறப்பு விழாவில் பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், காந்தியடிகள் கண்ட கனவை முதல்வர் கருணாநிதி நனவாக்கியதை எண்ணிப் பரவசம் அடைகிறேன்; பாராட்டுகிறேன் என்று புகழ்ந்தார்.தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கான இலவச கான்கிரீட் வீடு திட்டம்தான், இந்திரா வீட்டுவசதித் திட்டம் என்று மத்திய அரசால் ஏற்கப்பட்டு, நாடு முழுவதும் நடைமுறைப்பட்டது. இதை அனைவரும் அறிவர்.இந்திரா நினைவுக் குடியிருப்புகள் மத்திய, மாநில அரசின் பங்களிப்போடு |60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வந்தது. இதில் |33 ஆயிரத்து 750-ஐ மத்திய அரசும், |26 ஆயிரத்து 250-ஐ மாநில அரசும் வழங்கின.இந்தத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு வழங்கும் நிதி |15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு |41 ஆயிரத்து 25 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருப்பும் |75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்கியுள்ள பெயரை மாற்றும் எண்ணம், தமிழக அரசுக்கு எந்தக் காலத்திலும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள்

இந்திராகாந்தி பெயரிலான வீடமைப்புத் திட்டத்திற்கு இந்தியில்தான் பெயர் உள்ளது. அதனைத் தமிழி்ல் குறிப்பிடுவதால் பெயர் மாற்றியுள்ளதாகசசிலர் கூக்குரலிடலாம். முதல்வரின் அறிவிப்பே சரி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 3:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக