தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிண்டி தபால் நிலையத்தில் வியாழக்கிழமை, குடியரசுத் தலைவருக்கு தந்திகளை அனுப்பும் அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர
சென்னை, நவ. 11: மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் குடியரசுத் தலைவருக்கு தந்திகளை அனுப்பினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மூலம் குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாட்டு மக்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் குடியரசுத் தலைவருக்கு அ.தி.மு.க.வினர் வியாழக்கிழமை தந்திகளை அனுப்பினர். வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தந்தி அனுப்பும் இயக்கத்தை அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் சென்னை ஜார்ஜ் டவுன் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி. ஜெயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் நீலகண்டன், பொருளாளர் வெற்றிவேல், கு. சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தந்திகளை அனுப்பினர். வட சென்னை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்தும் வியாழக்கிழமை சுமார் 9 ஆயிரம் தந்திகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன என்றும், வெள்ளிக்கிழமை மேலும் ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பப்படும் என்றும் டி. ஜெயக்குமார் தெரிவித்தார். தென்சென்னை:தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தந்தி அனுப்பும் இயக்கம் கிண்டி தபால் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் வா. மைத்ரேயன், மாவட்டச் செயலாளர் ஜி. செந்தமிழன், பொருளாளர் கோ. சாமிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தந்திகளை அனுப்பினர். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான தந்திகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 7:47:00 AM
11/12/2010 7:47:00 AM


By PA Valarmathi
11/12/2010 12:11:00 AM
11/12/2010 12:11:00 AM


By PA Valarmathi
11/12/2010 12:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/12/2010 12:09:00 AM