ஞாயிறு, 7 நவம்பர், 2010

மழைக்காலம் முடிந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்: ப.சிதம்பரம்

சென்னை, நவ.6: போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டும் பணிகள் மழைக்காலம் முடிந்ததும் தொடங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.சென்னையில் முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை காலையில் ப.சிதம்பரம்  சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்தபோது, அவருடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்கிற திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.விரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ராஜபட்சவிடம் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம்.மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர்.மீனவர்கள் கைது: இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இந்த ஆண்டில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர புதிதாக யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.ஒபாமா வருகை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முழுப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை அவரது பயணம் முடிந்த பிறகுதான் கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது. இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும் என்றார் ப.சிதம்பரம்.
கருத்துகள்

ஆனாலும் எந்த மழைக்காலம் எனப் பக்சேயும் கூறவில்லை. அடுத்த ஆண்டு கேட்டுக் கொள்ளலாம் என நாங்களும் இப்பொழுது கேட்கவில்லை. அதுபோல் மீனவர்கள் யாராவது கைது செய்யப்பட்டுள்ளாரகளா என்பது குறித்துக் கவலை இல்லை என்றதைத் தெரியவில்லை என அச்சிட்டுள்ளார்கள். எனப் ப.சி. பக்சேயிடம் பின்னர் விளக்கமளித்ததாகக் கேள்வி. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக